Pages

Wednesday, October 31, 2012

விழுந்தால் உடன் எழு !

-->
முன்பெல்லாம்,ஒவ்வொரு இல்லத்திலும் தவறாமல் இருக்கும் பொம்மைகளில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும் ஒன்று. பழமை வாய்ந்த ஒரு பண்பாட்டின் அடையாளமான இந்த பொம்மை ஒரு வரலாற்றுச் சான்றாகும். இன்றும் அகழ்வாராய்ச்சிகளில் தமிழகத்தில் பழமையான சுடுமண் பொம்மைகள் கண்டெடுக்கப்படுகிறது.

          “வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அயராமல் உடன் வேகமாக எழவேண்டும்” என்ற உயரிய தத்துவம் இந்த தலையாட்டி பொம்மை உணர்த்துகிறது.


        தலையாட்டி பொம்மையில் இரண்டு பாகங்கள் உள்ளன. அடிப்பாகம் குண்டு என்றும் மேல் பாகம் உடல் என்றும் கூறுவர். அடிப்பாகம் கனமாக இருப்பதற்காக களிமண்ணாலும், மேல் பாகம் லேசாக இருக்க காகிதக் கூழாலும் செய்கிறார்கள். இதனால் தான் பொம்மை சாய்ந்தால் உடன் நிமிர்ந்து கொள்கிறது.

          அடிப்பாகம் தான் பொம்மையின் முக்கியமானது. இது சரியான அளவில் இல்லை என்றால் பொம்மை சாய்ந்தால் நிமிராது. வயல் படுகை மாண்ணை சுத்தம் செய்து, பிசைந்து, நல்ல பதத்தில் நிழலில் காற்றாட உலர்த்தி அச்சில் வைத்து கொட்டாங்குச்சி போல் (தேங்காய் கூடு) செய்கிறார்கள்.


          உடல் பாகம் செய்யவும் மிகுந்த பொறுமை தேவை. பேப்பர் கூழுடன், குளத்தில் உள்ள பொருக்கு போன்ற மண்ணை கலந்து தயாரிக்க வேண்டும். சாக்பீஸ் மாவு கொண்டும் தற்போது தயாரிப்பர்.  குளத்தின் வறண்ட பகுதியில் உள்ளதை பொருக்கு மண் என்பர். அதனை ஊற வைத்து, கரைத்து அத்துடன் காகித கூழ் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் வந்த பின், அதனை உருட்டி, தேய்த்து முக்கோண வடிவில் செய்வர்.


          முகத்திற்கான அச்சில் இதனை வைத்து அழுத்தி முகத்தை தயாரிப்பர். இதை உலரவைத்து அடிப்பாகத்துடன் இணைப்பர். காகிதத்தை மைதாப் பசையினைக் கொண்டு ஒட்டி வண்ணம் தீட்டினால் தலையாட்டி பொம்மை ரெடி.  *குழந்தை பொம்மையை வாயில் வைத்தாலும் பாதிக்காமல் இருக்க, வண்ணத்திற்கு அவுரிவேர், கடுக்காய் போன்ற இயற்கை வண்ணத்தையே பயன்படுத்துவார்கள்.


        தலையாட்டி பொம்மையைப் போலவே சிறப்பானது நடனமாது பொம்மை. பொம்மையின் கால்,  பாவாடை,  உடம்பு, தலை, கைகள் என ஐந்து பகுதிகளாக தனித்தனியாக செய்து இணைக்கப்பட்டிருக்கும் இந்த நடனமாது சிறிய கம்பிகளின் ஆதாரத்தில் தொங்கியபடி நாம் தொடுவதற்கு ஏற்றார்போல் நெளிந்து வளைந்து நடமாடுவது கண் கொள்ளாக் காட்சியாகும்.

          அயல் பாட்டு சீன பொம்மைகளும், எலெக்ட்ரானிக் வகைகளும், கணணியில் ஆடும் பலவித விளையாட்டுகளும் நம் குழந்தைகளின் பராம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றை அபகரித்து விட்டன.

          கண்ணுக்கும் கைகளுக்கும் பயிற்சிதரும் ஐந்தாம் கல், சோழி ஆட்டம், திட்டமிட்டு செயல் படுத்த பல்லாங்குழி, கயிறாட்டம் ,ஒற்றுமையை போதிக்கும் கண்ணாம் மூச்சி ஆட்டம், பாண்டி ஆட்டம் போன்ற பல விளையாட்டுகள் வழக்கொழிந்து விட்டது.

          ‘விழுந்தாலும் மனம் தளராமல் எழுந்து நில்’ என்ற போதனையைத் தந்த தலையாட்டி பொம்மையும், நடனமாதுவும் நம் கண்ணில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து வந்தாலும், இன்றைக்கும் இதனை நினைவு படுத்தும் வண்ணம் தஞ்சையில் ஒரு சில கடைகளில் இது காணக் கிடைக்கிறது.

8 comments:

  1. தலையாட்டி பொம்மைகளாகிவிட்டார்கள்
    தமிழ்நாட்டு மக்கள்

    அரசியல்வாதிகள் மறியல் செய்
    என்றால் உடனே மறியல் செய்கிறார்கள்

    கடையை மூடு என்றால் உடனே கடையை மூடிவிடுகிறார்கள்

    இலவசங்களை யார் அதிகமாக
    அளிக்கிறார்களோ அவர்களுக்கு
    தங்கள் வாக்கு சீட்டுகளை விற்கிறார்கள்
    யார் அழைத்தாலும் அவர்கள் பின்னே ஓட
    தொடங்கிவிடுகிறார்கள்

    அவர்கள் அரசியல்வாதியாகட்டும்,அல்லது நடிகர்களாகட்டும், அல்லது போலி சாமியார்களாகட்டும்அல்லது மின் பின் தெரியாத நப்ர்களாகட்டும்

    தொலை காட்சியில் எதை புளுகினாலும் ஆராயாமல்
    அப்படியே நம்பி அனைத்தையும் இழக்கிறார்கள்.

    பொய்களையும் புரட்டுகளையும் நம்பி
    வாழ்க்கையில் கடைபிடித்து
    தடம் புரண்டு போகும் இந்த தலையாட்டி
    பொம்மைகளை கண்டு தஞ்சாவூர் தலையாட்டி
    பொம்மை காணாமல் போய்விட்டது

    இப்போது நீங்கள் மீண்டும் கண்டுபிடித்து
    கொண்டு வந்து விட்டீர்கள்

    பொம்மையின்தலையாட்டியின் message
    நிஜமமான தலையாட்டியின் மண்டைக்குள் செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

    அருமையான பதிவு.
    பாராட்டுக்கள்

    ReplyDelete

  2. // “வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அயராமல் உடன் வேகமாக எழவேண்டும்” என்ற உயரிய தத்துவம் இந்த தலையாட்டி பொம்மை உணர்த்துகிறது. //

    எத்தனை தரம் மூக்கு உடை பட்டாலும்
    எழுந்து நில். என்கிறது தலையாட்டி பொம்மை.

    நல்லா சொன்னீக. !! தஞ்சாவூர் காரன் நான் . எனக்குத் தெரியாதா என்ன !!!

    தெரிஞ்சுதானே நானும் 21 ஜனவரி 1968 லேந்து இன்னி வரைக்கும் ! ஏன் ! இந்த நிமிசம் வரைக்கும்
    குட்டக்குட்ட குனியாம எழுந்து நின்னுக்கினே இருக்கேன்..

    ஹி...ஹி... நல்ல வேளை. எழுதும்போது பக்கத்திலே கிழவி இல்ல.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. நண்பரே
      ஏன் கிழவிக்கு படிக்கதெரியாதென்ற தைரியமோ ?
      பக்கத்தில் குழவியுடன் நிற்கிறாள்
      ஓடி ஒளிந்து கொள்ளும்.

      Delete

  3. // “வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அயராமல் உடன் வேகமாக எழவேண்டும்” என்ற உயரிய தத்துவம் இந்த தலையாட்டி பொம்மை உணர்த்துகிறது. //

    எத்தனை தரம் மூக்கு உடை பட்டாலும்
    எழுந்து நில். என்கிறது தலையாட்டி பொம்மை.

    நல்லா சொன்னீக. !! தஞ்சாவூர் காரன் நான் . எனக்குத் தெரியாதா என்ன !!!

    தெரிஞ்சுதானே நானும் 21 ஜனவரி 1968 லேந்து இன்னி வரைக்கும் ! ஏன் ! இந்த நிமிசம் வரைக்கும்
    குட்டக்குட்ட குனியாம எழுந்து நின்னுக்கினே இருக்கேன்..

    ஹி...ஹி... நல்ல வேளை. எழுதும்போது பக்கத்திலே கிழவி இல்ல.


    சுப்பு தாத்தா.
    http://subbuthatha.blogspot.in

    ReplyDelete
  4. //‘விழுந்தாலும் மனம் தளராமல் எழுந்து நில்’ என்ற போதனையைத் தந்த தலையாட்டி பொம்மையும், நடனமாதுவும் நம் கண்ணில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து வந்தாலும், இன்றைக்கும் இதனை நினைவு படுத்தும் வண்ணம் தஞ்சையில் ஒரு சில கடைகளில் இது காணக் கிடைக்கிறது.//

    மிகச்சிறந்த படங்களுடன் மிக அழகான கட்டுரை. மனமார்ந்த பாராட்டுக்கள்.
    அந்த எனக்கு மிகவும் பிடித்த டான்ஸ்காரி பொம்மை இப்போதும் என் வீட்டின் ஷோ கேஸில் உள்ளது. ஆனால் நான் அன்று தேடிப்பிடித்து வாங்கி வந்தது போன்ற ஓர் முகபாவமும் அழகும் முகக்களையும் இப்போது வரும் பொம்மைகளில் இல்லை.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  5. அவரவர் சூழ்நிலைக்கேற்ப கருத்துக்கள் மாறுபடலாம்... தலையாட்டி விட்டால் சரியாப் போச்சி...

    விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  6. தலையாட்டி பொம்மை உணர்த்தும் உயரிய தத்துவம் பற்றிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. தலை ஆட்டி பொம்மைக்குள் இவ்வளவு இருக்கிறதா. கலை வடிவங்களை பார்க்கின்றோம் அவற்றின் தோற்றத்திற்குள் ஒழிந்திருக்கும் உண்மை நிலையை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை . பிள்ளைகளுக்கு ஏற்றவகையில் இயற்க்கை வண்ணத்தைப் பயன்படுத்துவது எவ்வளவு பொறுப்பை எடுத்துக்காட்டுகின்றது . இவ்வாறான பதிவுகளை தந்து எமது பல அறியாமைகளைக் கழைந்து எறியும் உங்கள் சேவைக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete