ஸ்ரீ துர்ககை துதி
ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
லலிதாம்பிகையே நமஸ்காரம்
துர்க்கா லக்ஷ்மியே
நமஸ்காரம்
புவனேஸ்வரியே நமஸ்காரம்
அன்னபூர்ணேஸ்வரி நமஸ்காரம்
காமேஸ்வரியே நமஸ்காரம்
பரமேஸ்வரியே நமஸ்காரம்
பக்தியுடன் உன்னை நாடி
வந்தோம்-நாங்கள்
பண்புடனே உன்னைப் பார்க்க
வந்தோம்.
ஏகாம்பரேஸ்வரி என்றும்
நீயே.
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
உன்பாதம் தேடி வருவோர்க்கு
அன்போடு அருள்வாயே
விஜய தசமி
நவராத்திரி முடிந்து பத்தாம் நாள் தசமியன்று, வெற்றித் திருமகளாம்
அன்னை ராஜராஜேஸ்வரியை வணங்கும் நன்னாள் ஆகும்.
அசுரனுடன் ஒன்பது
தினங்களும் படைக்கலங்களுடன் அற்புதமாக போரிட்ட அன்னையின் உக்கிரத்தை கண்ட சகல
ஜீவராசிகளும், தேவர்களும் விலங்கிணங்களும் பிரமித்துப் போய் பொம்மைகளாக நிற்க
(இதுவே கொலுவின் தத்துவம்), பத்தாம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி மகிழும் நன்னாள்.
சரஸ்வதிதேவிக்கு பூஜை
செய்து புத்தகம் அகியவற்றினை பூஜையில் வைத்து நன்றி கூறி வழிபட்ட தினத்திற்கு மறு
நாள், சரஸ்வதிதேவி தன் அருட் கடாஷத்தை அனைவர்க்கும் வழங்கும் இனிய நன்னாள்.
பள்ளி சேரத்தகுதியுள்ள
வயதில் உள்ள குழந்தைகளுக்கு இன்று ‘அஷரப்பியாசம்’ செய்வார்கள்.
ஒரு தட்டில் நெல் மணிகள்,
அரிசி, அல்லது மணலைப் பரப்பி, அதன்முன்னால் குரு ஸ்தானத்தில் வீட்டுப் பெரியவர்
குழ்ந்தையை மடியில் அமரவைத்து, அதன் ஆள்காட்டி விரலினால் “ஹரி ஓம், குருவே துணை”
என கடவுளின் அனுக்கிரஹத்தை வேண்டி அரிசிப் பரப்பில் சிறுவனின் பிஞ்சு விரல்களைப்பிடித்து
எழுதுவார். அன்று முதல் அக் குழந்தை கல்வி கற்கத்தொடங்கும்.(இது குறித்த படம் தந்து
உதவியர், மதிப்பிற்குரிய திரு.வை.கோபால கிருஷ்ணன் அவர்கள். அவருக்கு என் நன்றி.)
அன்னையின் பெருமையை பாடி, துதித்து மகிழ்வோம்!
சரஸ்வதிதேவி தன் அருட் கடாஷத்தை அனைவர்க்கும் வழங்கும் இனிய நன்னாள்.
ReplyDeleteவெற்றித்திருமகள் -விஜய தசமி வாழ்த்துகள்..
சிறப்பான பகிர்வு... நன்றி...
ReplyDeleteவிழாக்கால வாழ்த்துக்கள்...
படம் தந்து உதவிய மதிப்பிற்குரிய திரு.வை.கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி...
கொலுவின் தத்துவம் - அருமை !~
ReplyDelete