-->
பழையன
புகுதல்
-->
சென்னையிலுள்ள எனது சொந்தம் பேசும்போது ‘இங்கெல்லாம் தினமும் ஒரு மணி நேரம்
மின் தடை ஏற்படுகிறது. அங்கு எப்படி என்று கேட்டார்.
நானும் ‘உங்களுக்கு போகும் போது,
இங்கு வரும்’என்றேன். நிற்க
பாரம்பரியச் சமையல் தான் சத்தானது, சுவையானது என்று பல வல்லுனர்கள் கரடியாக கத்திய
போதிலும் நாம் கேட்கவில்லை. இப்போது, கடைத் தெருவில் நவீன சமயல் உபகரணங்களாக
அம்மி, ஆட்டுக்கல், மண்ணில் செய்த குளிர் பதனூட்டி (பிரிட்ஜ்) போன்றவைக்கு ஏக
டிமாண்ட்.
அந்தக் காலத்தில் சீமை எண்ணை (மண்ணெண்ணை) விளக்கு தான் பிரதானம், விளக்கில்
பலவகைகள் உண்டு. லாந்தர் விளக்கு, வால் லேம்ப், பெரியகுண்டு விளக்கு, சிம்மனி
என்று, வீட்டில் நபர்கள் அதிகம் ஆனதால் பலவிளக்குகளை மாலையிலேயே சுத்தம் செய்து
(வீபூதி போட்டு தேய்தால் கண்ணாடி பள பள வென்று இருக்கும்), அனைத்திற்கும் சீமை எண்ணை
ஊற்றி தயார் செய்வோம்.
-->
எங்கள் ஊர்பக்கம் இரவில் செல்லும் மாட்டுவண்டிக்கு முன்னால் ஒரு ஆள் பேப்பரை
மிக்சர் பொட்டலம் போல் சுருட்டி அதில் பாதி அளவில் மண் நிரப்பி நடுவில் ஒரு
மெழுகுவர்த்தியை ஏற்றி கையில் ஏந்தி செல்வார், ‘வண்டியில் விளக்கு கட்டாயம்’ என்ற காவல் துறையின் கண்டிப்பினால். இரவு நேரங்களில்
மின்மினிப் பூச்சிகளின் ஜாலங்கள் தெரியும். தூக்கனாங்குருவி என ஒரு உயிரினம். அது
தனது கூட்டில் உள்ள சிறு குஞ்சகளின் அச்சத்தைப் போக்க இந்த மின் மினிப்பூச்சிகளை கூட்டில்
வைத்து வெளிச்சத்தை உண்டாக்கும்.
-->
இரவில் வெட்ட
வெளியில் படுத்து ஆகாயதைய் பார்த்தால் நட்சத்திரக் கூட்டங்களும் அதில் சப்த ரிஷி
மண்டலம் போன்ற நட்சத்திர தொகுப்பைக் காணமுடியும். அக்காலத்தில் இரவில் திசை மற்றும்
கால நேரத்தை இதைக் கொண்டே கணக்கிட்டார்கள்.
இது போன்ற பால்யகால நினைவுகள் மீண்டும் மனதில் தோன்றி மெல்லிய புன்னமையை
தோற்றிவிக்கிறது.
இடுக்கண் வருங்கால் நகுக.
பால்யகால நினைவுகள் மீண்டும் மனதில் தோன்றி மெல்லிய புன்னமையை தோற்றிவிக்கிறது.
ReplyDelete
ReplyDeleteஅந்தக் காலத்து
அம்மி
ஆட்டுக்கல்லு
மண்பானை
மரச்சட்டி
சிம்னி விளக்குக்கு கண்ணாடி மூடி
பனை ஓலை விசிறி
கோரைப்பாய்
எல்லாத்தையும் வாங்கிக்கலாம்.
கொசுத்தொல்லை போகணும் அப்படின்னா
எத வாங்குறது ??
சுப்பு தாத்தா.
பால்யகால
ReplyDeleteநினைவுகள்
மீண்டும்
மனதில்
தோன்றி
மெல்லிய
புன்னகையைத்
தோற்றுவிக்கிறது.
அதே அதே சபாபதே ! ;)
அன்புடன்,
VGK
தக்க நேரத்தில் தேவையான பகிர்வு...
ReplyDeleteஅந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் என் அம்மா எப்போதும் ஒரு சிம்னி விளக்கை ஏற்றியே வைத்திருப்பார்.
ReplyDeleteஅது மிகவும் சின்னதாக 'முணுக்' 'முணுக்' என்று எரிந்து கொண்டே இருக்கும்.
உங்கள் கட்டுரையில் சிம்னி விளக்கின் 'டோம்' பார்த்தவுடன் இதெல்லாம் நினைவுக்கு வந்தது.
நீங்கள் என் தளத்திற்கு வந்திருக்கிறீர்களே. எனக்கு அழகிய பூ ஒன்றும் அனுப்பி இருந்தீர்களே.
வலைசரம் தளத்தில் வந்து பாராட்டியதற்கு நன்றி!