Pages

Monday, October 15, 2012

ஸ்ரீ சக்ரராஜ சிம்ஹாசனி



ஸ்ரீசக்ர அமைப்பு:-
     சிவன் சக்தி இருவருக்கும் இருப்பிடமானது ஸ்ரீசக்ரம். ஸ்ரீசக்ரத்தின் நடுவில் பிந்துவும் சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ளன. இந்த அமைப்பில் மேல் நோக்கிய நான்கு முக்கோணங்கள் சிவனையும் கீழ்னோக்கிய ஐந்தும் சக்தியையும் குறிக்கும்.
     எல்லையற்ற சக்தி, ஞானம், கல்வி, ஆரோக்கியம், முக்தி என அனைத்தையும் நல்கும் அற்புதச் சக்ரம் இது. பாரத நாட்டில் 180க்கும் மேல் உள்ள ஸ்தலங்களில் ஸ்ரீசக்ரம் உள்ளது. அதில் சில:-
     1. திரு ஆனைக்காவல்:- பஞ்சபூதஸ்தலங்களில் அப்பு ஸ்தலம். அம்பாளின் உக்ரத்தைச் சாந்தப்படுத்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர தாடங்கத்தினை சாற்றினார்.
     2. திருவிடைமருதூர்:- இங்குள்ள மோகனாம்பாள் ஆலயத்தில் உள்ள சிறிய இருட்டரையில் பஞ்சலோகத்தினால் ஆன 12”x12”x12 என்ற அளவில் ஸ்ரீசக்ரம் உள்ளது.
     3. வேளச்சேரி:- சென்னையில் உள்ள வேளச்சேரி தண்டீஸ்வர் ஆலயத்தில் கருணாம்பிகையின் பாதத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது.
     4. மாங்காடு:- பல்லவர்கால கோயில். மிகப்பெரிய ஸ்ரீசக்ர கோயில் கர்ப்பகிருகத்தில் உள்ள 6 x 6 x 3 அள்விலான ஸ்ரீசக்ரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. ஏராளமான அதிசிய ரகசியங்களைக் கொண்ட ஒரே கோயில்
     5. திருவொற்றியூர்:- இங்குள்ள தியாகராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள காளிகோயிலில் கல்லினால் வட்டவடிவமான மூன்றரை அடி குறுக்களவும், 1½ அடி உயரமும் உள்ள காளியந்திரம் ஆதிசங்ககரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
     6. குற்றாலம்:- இங்குள்ள சிவாலயத்தில் தேவிசந்நதியின் அருகில் ஸ்ரீசக்ரத்திற்காகவே தனி சந்நதி உள்ளது.2’ x2’ x1’4” என்ற அளவில் கருங்கல்லினால் ஆன ஸ்ரீசக்ரம் அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
     7. காஞ்சிபுரம்:- நகரமே ஸ்ரீசக்ரவடிவிலானது. இங்கு பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காமகோடி என்னும் பெயர் பெற்ற ஸ்ரீசக்ரத்தில் அம்பால் காமாஷீ நித்ய ஸாந்நித்தியமாக விளங்குகிறாள்.
     மேலும்,குஜராத்தில், த்வாரகா நகரில் உள்ள ஆலயத்திலும் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தை நிறுவியுள்ளார். கேரளத்தில் ஏராளமான இடங்களில் ஸ்ரீசக்ரம் உள்ளது. கொடுங்களூரில் உள்ள பத்ர காளி சிலையின் அடியில் ஐந்து ஸ்ரீசக்ரங்களை ஆதி சங்கரர் ஸ்தாபித்துள்ளார்.
ஸ்ரீவித்யா, மற்றும் ஸ்ரீசக்ர உபாஸனையை குருமுகமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

6 comments:

  1. ஸ்ரீ சக்ரம் பற்றி
    அருமையான
    படங்களுடனும்
    விளக்கங்களுடனும்
    கூடிய மிக நல்ல பதிவு.

    இனிய நவராத்திரி
    நல்வாழ்த்துகள்,
    உங்களுக்கும்
    உங்கள் தோழிகள்
    அனைவருக்கும்.

    பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  2. "தினம் ஒரு பதிவுக்குப் பாராட்டுக்கள்."
    by VGK...
    தங்களின் அறிவுரை ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது.

    ReplyDelete
  3. ஸ்ரீசக்ரம் பற்றி சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. தேடல் தொடரட்டும் . அறிவு பகிரப்படட்டும். தொய்வின்றி தேடுங்கள் . எங்களுக்கும் அறியத்தாருங்கள். இவ்வாறான விடையங்கள் தெரிந்து கொள்வது அருமை . நன்றி

    ReplyDelete
  5. சிறப்பான தொகுப்பு... பாராட்டுக்கள்....

    நன்றி...

    ReplyDelete
  6. அருமையான நல்ல பகிர்வு....பாராட்டுக்கள்...!!!!!!

    ReplyDelete