Pages

Tuesday, December 20, 2011

சிவத்தலங்கள் (தொடர்ச்சி)

Nataraja Konerirajapuram, Kumbakonam, India
This travel blog photo's source is TravelPod page: Konerirajapuram - World's Tallest Bronze Nataraja
                                              கோனேரி ராஜபுரம் நடராஜர்

Friday, December 16, 2011

சிவத் தலங்கள்

சிவத்தலங்கள் பொதுவாக கீழ்க்கண்ட பிரிவுகளுக்குள் அடங்கும்:--









1.அஷ்ட வீ ரட்ட தலங்கள்.
2.சப்த விடங்கத்தலங்கள்.
3.உபயவிடங்கத்தலங்கள்.
4.பிரதிவிடங்ககத்தலங்கள்.
5.அபிமான விடங்ககத்தலங்கள்.
6.மரகத லிங்கம் அமைந்த தலங்கள்.
7. நடராஜரின் பஞ்ச சபைகள் அமைந்த தலங்கள்.
8.ஒரே சிற்பியால் உடுவாக்கப்பட்ட நடராஜரின் சிலைகள் அமைந்த தலங்கள்.
9.ஸ்ப்த புண்ணிய ஸ்தலம்.
10.பஞ்ச பாஸ்கரத்தலங்கள்.
11.பஞ்ச இந்திரியத்தலங்கள்;
12.ஜோதிர் லிங்கத்தலங்கள்.
மற்றும் 13.பஞ்சாராம ஷேத்திரங்கள்.
மேலே குறிப்பிட்ட ஸ்தலங்களைப்பற்றி விரிவாக வரும் நாட்களில் பார்க்கலாம்.




Monday, November 14, 2011

புரியாதபுதிர்


இறைவன் படைப்பு பல இரகசியங்களை உள்ளடக்கியது. ஆனால் காரண காரியமன்றி எந்தஒரு உயிரும் படைக்கப்படவில்லை. ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம், நோக்கம் இருப்பதாக கூறுவார்கள்.





உதாரணமாக, மகாபாரதத்தில் ஸந்துனு மஹாராஜாவிற்கும் பாகீரதியான கங்காதேவிக்கும் பிறந்த வசுவின் அவதாரங்களான 9 பேர்களில் பீஷ்மர் தவிர்த்து ஏனைய கந்தர்வர்கள், ஒரு சாபத்தினால் மானிடர்களாக பிறக்கவேண்டி வந்தபோது, அவர்கள் கங்காதேவியிடம் மேற்படி சாபத்தினை கூறி தாங்கள் பூலோகத்தில் பிறந்தவுடன், கங்கையில் போட்டுவிடவேண்டும் என வேண்டியதற்கு ஏற்ப, கங்காதேவியும் அவ்வாறே செய்ததாக மகாபாரதம் கூறுகிறது.

ஆனால் சில உயிர்களின் பிறப்பின் நோக்கம் என்ன என்பது நமது அறிவிற்கு எட்டுவதில்லை.

எனது ஒரே மகனின் குழந்தைப்பருவத்தில் காய்ச்சலில் வரும் வலிப்பினால் (FEBRIAL FITS)அவதிப்பட்டான்.
மருத்துவக்கண்காணிப்பிலேயே வளர்ந்து வந்தான்.







சிறுவயதில் இருந்தே அபரிமிதமான அறிவுத்திறனும், கற்பனை வளமும் கொண்டிருந்தான்.
உதாரணமாக காகம் அதன் அலகினய் தரையில் தேய்ப்பதைப் பார்த்தால் "காகம் A எழுதுவதாக கூறுவான்

பெருமாள் கோவிலில் இறைவனை சேவித்து, துளசிதீர்த்தம் பெற்றுவந்தபின் , ராமர் பட்டாபிஷேகப் படத்தினை பார்த்து, அதில் அனுமன் ராமர் பாதத்தில் அமர்ந்து  ராமர் பாதத்தை தாங்கி இருப்பதைப்பார்த்து, அனுமன் "துளசிதீர்த்தம்" தா எனக்  கேட்பதாக கூறுவான்.

அன்னபூர்ணியின் கையில் உள்ள சிறு அன்னக்கரண்டியைப் பார்த்து, கரண்டி சிறியதாக இருப்பதால் "ஊறுகாய்" போடுவதாக கூறுவான்.

அவன் எழுதியவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன். மேலோட்டமாக பார்த்தால் இவை கிறுக்கலாக தோன்றும். ஊன்றி கவனித்தால் இதில் நமது இதய மற்றும் சிறுனீ ரக வடிவம் தெரியவரும். இதில் ஒருவடிவம் சரஸ்வதியின் வீணை என்று கூறினான்.









(ஆரம்பத்தில் "FEBRIYAL FITS என்ற மருத்துவ உலகம் இறுதியில் “MASSIVE CARDIYAC ARREST" என கூறியது)

ஆனால் இதில் ஏதோ புரியாத செய்தி இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

தெரிந்தவர்கள் தெரியப்படுத்தினால் நன்றி கூறுவேன்.

இறைவன் எங்கள் மூலமாக இந்த உயிரினை படைத்ததின் அர்த்தம் என்ன?




Saturday, November 5, 2011

எம்மதமும் சம்மதம்











அன்புதான் ஆன்மீகம்  . அன்பில்லாதவர்களால் இறைவனை அறியமுடியாது. அன்புதான் கடவுள்.
வானத்தில்  உள்ள  நிலவில்கூட ஈரப்பசை இருக்கிறது! ஆனால் அருகில் உள்ள மனிதர்களிடம் அது இல்லை.
ஈரம்--அன்பு. அன்பு சுரந்தால் மனம் விசாலமாகும்.





                                           மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

                                    எனவேஅன்புதான் மனம்.அன்புதான் குணம்;
     
                                                                                                                                                                                                                                                                                                                                                                  
                                          இது எல்லாமதங்களுக்கும் சம்மதம்.


                               "இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்."