Pages

Sunday, September 30, 2012

வானத்து நட்சத்திரங்களை மலர்களாக்கி!

வானத்து நட்சத்திரங்களை  மலர்களாக்கி!


ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாத அளவில் வசந்தம் வீச ஆரம்பித்து விடும். அதுவும் தென் பொதிகை நகரங்களில் மே இறுதியிலேயே குளிர்ந்த காற்றுடன் சாரல் ஆரம்பித்து தோட்டங்களில் பல வண்ண மலர்கள் பூத்து மணம்வீச ஆரம்பித்திருக்கும்
ஆனால் இந்த ஆண்டோ செப்டம்பர் முடிந்த நிலையிலும், சூரியனின் வெப்பக் கதிகள் சுட்டெரிக்கின்றன. இந்நிலையில் வண்ண மலர்களும் மலரவில்லை, வாசமில்லா மலர்களும் காணப்படவில்லை. 

ஆனால் என்ன ! கீழ்க் காணும் எழில் மிகு மலர்கள் பூக்கும்வரை,
 வானத்து நட்சத்திரங்களையே மலர்களாக்கி இறைவனை அர்ச்சிப்போம்.
[கர்சரை இறைவனின் படத்தில் வைத்து ஓம் என சுற்றவும்.]


நட்சத்திரங்களை   மலர்களாக்க உதவியது:.
Wednesday, September 26, 2012

ஆற்றைக் காணோம் !
தென்தமிழகத்தின் திரு நெல்வேலியைச்சுற்றிலும் உள்ள பல திருக்கோயில்களின் வரிசையில் நவகைலாய கோயில்களும்,நவதிருப்பதி ஸ்தலங்களும் முக்கியமானவை
நவகைலாய தரிசனம்:
அகத்திய முனிவரின் சீடரான உரோமசமுனிவர் "சிவபெருமானிமன் திருக்காட்சியை காணவிரும்பி அதுபற்றி கேட்க, அகத்தியரும் தாமிரபரணி  நதியில் ஒன்பது மலர்களை மிதக்கவிட்டு, "இவை எங்கெங்கு கரை சேருகிறதோ அங்கெல்லாம் சிலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் சிவனது தரிசனம் கிட்டும் என கூற , அதன் படி அமைந்ததுதான் "நவகைலாயம்".
அவைகள். பாப  நாசம், சேரன்மாதேவி, கோடக  நல்லூர், குன்னத்தூர், முறப்ப நாடு, தென்திருப்பேறை, ராஜபதி, ஸ்ரீவைகுண்டம், சேர்ந்தபூமங்கலம்.
இவைகள்  நவக்கிரக ஸ்தலங்களாகும்.
1.சூரியன்.---     பாப  நாசம்
2.சந்திரன்.---    சேரன்மாதேவி
3. செவ்வாய்--. கோடக  நல்லூர்
4.ராகு.          --   -குன்னத்தூர்
5.வியாழன்.--  முறப்ப நாடு
6.புதன்.         ---தென்திருப்பேறை
7.கேது.         --- ராஜபதி
8.சனி.           --- ஸ்ரீவைகுண்டம்,
9.சுக்கிரன்    -- சேர்ந்தபூமங்கலம்.

இப்பொழுது இந்தக் கோவில்கள் மட்டும் இருக்கிறது; தாமிரபரணி ஆற்றைத்தான் காணோம்

பாபநாசம்
சேரமாதேவி 
தென்திருப்பேரை ராஜபதி  சிவன் 


பாணதீர்த்தம் 
தாமிரபரணி [ஒரு  காலத்தில் ]


சேர்ந்த  பூ மங்கலம்

ராஜபதிTuesday, September 25, 2012

மாப்பிள்ளை படும் பாடு!


நெல்லைப் பக்கம் புதுமாப்பிள்ளைக்கு நடக்கும் விருந்து வகைகளில்

ஒரு நாள் உணவில் இந்த மாப்பிள்ளை சொதி கட்டாயம் இடம் பெறும்.


மாப்பிள்ளை சொதி செய்யும் முறை:-- தேவையான பொருட்கள்: 1. தேங்காய்-2. 2.சிறு பருப்பு (பாசிப் பருப்பு)-300 GM. 3.உருளை கிழங்ககுகேரட்பீன்ஸ் , முருங்காய்சி.வெங்காயம் தலா ஒரு கப்பட்டை,லவங்கம்பூண்டு,  சோம்பு அகியவை சிறிதளவுஇஞ்சி சாறுஎலிமிச்சை சாறு ஒரு டேபில் ஸ்பூன்பச்சை மிளகாய் 8-10, நெய் மற்றும் உப்புதேவையான அளவு.
மாப்பிள்ளை சொதி தயாரிக்கும் முறை:

முதலில் பாசிப்பருப்பை வேகவைக்கவும்தேங்காயினை உடைத்து துருவி மிக்சியில் இட்டு அரைத்து பால் எடுக்கவும்இது மிக வும் திக்காக இருக்கும்.பின் திரும்பவும் சிறிது நீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும் . மீண்டும் நீர் சேர்த்து மூன்றாவது பால் எடுக்கவும்எடுத்த மூன்று பால்களையும் தனித்தனியாக பாத்திரத்தில் வைக்கவும்காய்களை நீளவாக்கில் சற்று பெரிய துண்டுகளாக வறுக்கவும்மிளகாயினை நீளமாக கீறி வைக்கவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டுபட்டைசோம்புலவங்கம் போட்டு சிவந்ததும் நறுக்கிய காய்களை போட்டு நன்கு
வதக்கவும்.  தேவைஆன அளவு உப்பினை சேர்க்கவும்.பின் மூன்றாவது தேங்காய் பால் விட்டு நன்றாக வேகவிடவும்வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்துஅத்துடன் இரண்டாவது எடுத்த பால் சேர்த்து லேசாக கொதிக்கவிடவும்அதிகசூட்டில் கொதிக்க வைத்தால் தேங்காய் பால் திரிந்துவிடும்மேல்கொண்டு இஞ்சி சாறினை சேர்க்கவும்பின் முதல் பாலினை சேர்த்துஎலுமிச்சை சாறினை சேர்க்கவும்உடன் அடுப்பில் இருந்து இறக்கவும்தேவையானால் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்.
இது தான் "மாப்பிள்ளை சொதி". நெல்லை சீமையில் இது மிகவும் பிரசித்தம்புது மாப்பிள்ளை மாமியார் வீட்டிற்கு வரும் போது இதனை கட்டாயம் செய்வதால் "மாப்பிள்ளை சொதிஎன்று பெயர்தவறினால், 'என்ன வே ஒரு சொதி செய்து போடலே'  என கேலிப்பேச்சுக்கு ஆளாக நேரிடும்.
அன்புடன்,

Monday, September 24, 2012

சிரிப்புத்தான் வருகுதையா!

நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகம் தருவது ஹாஸ்யம் தான். அழும்போது முகத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகலின் அசைவைவிட மிகக் குறைந்த அளவே சிரிக்கும் போது அசைகிறது!  “எனவே கொஞ்சம் சிரித்து தான் வைப்போமே
1.கிராமப்புறங்களில் இன்றும் எண்ணெய் எடுக்க செக்கு மற்றும் மாட்டை உபயோகப்படுதுகிறார்கள்.
     ஒரு நாள் கிராமப்புற மேம்பாட்டுதிட்டத்திற்கு மெத்த படித்த அறிவாளி வந்தார். வீட்டின் பின்னே மாடு செக்கு இழுத்துக் கொண்டிருப்பதையும், அதை ஓட்டும் ஆள் தனியே வேறொருபுறம் உட்கார்ந்திருப்பதையும் கண்டார். செக்கு ஆட்டும் ஆளைப்பார்த்துநீங்கவேடிக்கை பார்க்கும் போது மாடு சும்மா நின்றுக் கொண்டிருந்தால் உனக்கு தானே நஷ்டம் என்று கேட்டார். அதற்கு இவர், ‘மாட்டு கழுத்திலே மணி கட்டியிருக்கிறேன். மணி சத்தம் கேட்கலைனா மாடு சுத்தலைன்னு தெரிஞ்சிடும் என்றார்.
     விடவில்லை படித்த ஆசாமி, ‘ஒரே இடத்துலே நின்னு மாடு தலையை மட்டும் ஆட்டினா என்ன பண்ணுவே எனக்கேட்க, அதற்கு கிராமத்தான்மாடு உங்க அளவுக்கு படிக்கல அதுக்கு இந்த அளவுக்கு உங்கமாதிரி யோசிக்கத் தெரியாது என்று சொன்னாராம்.2.ஒரு சுற்றுலாத் தலத்தில் நிறைய சிற்பங்கள், மிகவும் அபூர்வமான பல சிலைகள் கலை நுணுக்கத்துடன் ஏராளமான பெரிய பெரிய சிலைகள் நிறைய இருந்தன. சிற்பங்களை கண்டு களிக்க ஒரு குழு வந்தது. சிற்பங்களைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் கூறுவதாக ஒரு கைடு வந்தார். வந்தவர்களுக்கு ஒவ்வொரு சிற்பத்தை பற்றியும் எடுத்துக் கூறி வந்தார். ஒரு சிற்பம் பெரிய வாயுடன் இருப்பதை வந்தவர்கள் கண்டனர்அது பற்றி கேட்டவுடன் கைடும் இதன் வாயில் பணத்தை போடுங்கள் என்று கூற வந்தவர்களும் பணத்தைப்போட்டு விட்டு இப்பொழுது என்ன நடக்கும் என்று கேட்டனர். அதற்கு கைடுஒன்றும் நடக்காது பிறகு நான் வந்து பணத்தை எடுத்துக் கொள்வேன் என்றாரே பார்க்கலாம்!

சிலரது பயணம் வேடிக்கையானது
     3.ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று பைக்குள் பயணச் சீட்டை தேடி அது கிடைக்காமல் அழ ஆரம்பித்து விட்டான். அருகில் உள்ளவர்கள் ஆறுதல் கூறி, அழ வேண்டாம், டிக்கட் பரிசோதகர் வந்ததும் நிலமையைக்கூறி வேறு பயணச் சீட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆமாம்! எதுவரை செல்லுகிறீர் என கேட்க, எங்கு இறங்க வேண்டும் என்பது தெரிய தொலைந்த டிக்கட் கிடைத்தால் தானே பார்க்க முடியும் என்றானாம்.

உண்மையில் சற்றேறக் குறைய இதுபோல் எங்களுக்கு திருப்பதிப் பயணத்தில் நடந்தது
ஊர் திரும்பும் நாள் அன்று, திருமலையில் இருந்து இறங்கி கீழே தாயாரை தரிசனம் செய்து விட்டு உடன் குறுகியகால அவகாசத்தில் நானும் என் கணவரும் ரயில் நிலையம் வர வேண்டியிருந்ததால் கண்ணில் தெரிந்த லாட்ஜில் கொண்டு வந்த சாமாங்களை வைத்து விட்டு உடன் பத்மாவதித் தாயாரை தரிசிக்க இரண்டு ஆட்டோவில் சென்று தரிசித்தோம். உடன் வந்த அக்கா, அத்திபேருடன் அவர்கள் மகனுடன் ஒரு ஆட்டோவிலும், நாங்கள் இருவரும் ஒரு ஆட்டோவுலுமாக தரிசனம் முடிந்து அங்கேயே அன்னப் பிரசாதம் சாப்பிட்டு விட்டு தங்கிய லாட்ஜிக்கு கிளம்பினோம்
என் அக்கா குடும்பம் ஒரு நாள் கழித்து கிளம்புவதாக ஏற்பாடு. லாட்ஜின் சாவியை வைத்திருந்த அக்கா மகன் எங்கள் ஆட்டோ ஒட்டுனரிடம் தெரிந்த தெலுங்கில் இடத்தைக் கூற எங்கள் ஆட்டோ ஜோராக கிளம்பிவிட்டது! ஊருக்குள் வந்த ஆட்டோ வேறு ஏதோ லாட்ஜில் நிற்க, எங்களுக்கு லாட்ஜின் பெயர் மட்டும் தான் தெரியும் என்பதால் அதனைக் கூற அவர் அந்தப்பெயரில் உள்ள வேறொரு லாட்ஜின் முன் நிறுத்த எங்களுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது. கோவிலுக்குள் செல்போன் தடை செய்யப்பட்டிருப்பதால் எங்களில் யாரிடமும் செல்போன் இல்லை! போதாதிற்கு ஆட்டோ முன் ஒரு குடிகாரன் வந்து மோத, ஏகக்களேபரம். ரயிலுக்கு வேறு நேரம் நெருங்கி விட்டது. ஏரியா எது என்று தெரியாததால் வந்த வினை இது! பிறகு ஒருவழியக வந்து சேர்ந்தாம்!    நீதி:- புதிய இடத்திற்கு சென்றால் அது பற்றிய அனைத்து 
         விபரங்களையும் கையில் வைத்திருக்க வேண்டும்.