Pages

Friday, August 31, 2012

இல்லம் இனித்திருக்க!


வைபோக  லஷ்மி  தங்களுக்கு  சகல  நலங்களும்  அருளட்டும் 


தேவி மகிமை
Harnahalli_Laksmi-_Narasiha_temple_


தாழ்சடையும் நீள்முடியும்
ஒண்மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும்
தோன்றுமால்-சூழும்
திரளருவி பாயும் திருமலை மேல்
எந்தைக்கு இரண்டுருவும்
ஒன்றாய் இசைந்து
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள்- திருமுகத்துச், சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப்பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல்,பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் – திருமுகத்துச் செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்…
                                                                        யா தேவீ ஸர்வபூதேஷூ புத்தி ரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!    

யா தேவீ ஸர்வபூதேஷூ சக்தி ரூபேணே ஸம்ஸ்தித !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:!!

யா தேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா!
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!

யா தேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!

யா தேவீ ஸர்வபூதேஷு ச்ரத்தாரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!

யா தேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மீரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!

யா தேவீ ஸர்வபூதேஷு ஸ்ம்ருதிரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
யா தேவீ ஸர்வபூதேஷு தயாரூபேணே  ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!

யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரூபேணே ஸம்ஸ்திதா !
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!
                                      
 -தேவி மகாத்மியம்


Wednesday, August 29, 2012

துன்பங்கள் போகும்

துன்பங்கள் போக்கும் சனீஸ்வர திருத்தலங்கள்1.    உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் காணப்படுகிறது.

இயற்கைச் சூழலில் வெட்ட வெளியில் இருக்கும் இவரை தரிசிப்பதற்கு முன், நம்பார்வைக்கு அருளுபவர்  54’ அடி உயரமுள்ள மகா கணபதி ஆவார். இவரது முதுகில் “நாளை வா“ என்ற வாசகம் உள்ளது.

சனிபகவான் விநாயகரை பிடிக்க முயலும் போது, முதுகில் நாளை வா என்ற வாசகத்தை எழுதிக் கொண்டு ‘முதுகை பார்’ எனக்கூற, சனியும் அதைப் பார்த்து, மறு நாள் வர மீண்டுக் விநாயகர் முதுகைக் காட்ட, இதுவே தொடர் கதையாக, அன்று முதல் சனியால் விநாயகரைப் பிடிக்க இயலவில்லை என்று புராணம் கூறுகிறது.

‘பக்தானுக் ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகா சனீஸ்வரர்’ எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டு பீடத்துடன் 33 அடி உயரத்தில் உள்ளார். பீடத்தில் 12 ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டரை ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திறந்த  வெளியில் நவக்கிரகங்கள் தங்கள் வாகனத்துடன் காட்சி தருகின்றன. அத்துடன் அந்தந்த கிரகத்தின் விருட்சங்களும் அருகில் உள்ளன.

இத்திருத்தலத்தினை சூர்யத் தோட்டம் என்று அழைக்கிறார்கள். தோட்டத்தில் 27 நட்சத்திரத்தின் மரங்கள், 60 வருடத்திகான விருட்சங்கள் 12 ராசிகளுக்கான மரங்கள்
9 கிரகங்களுக்கான மரங்கள் என்று 108 மரங்கள் இங்குள்ளது. எழில் மிகு தோட்டத்தின் நடுவில் 40 அடி நீளமுள்ள வாஸ்து பகவான் இருந்து அருள் பாலிக்கிறார். திண்டிவனம்-புதுச்சேரி இடையில் உள்ளது.
 ஸ்ரீவிஸ்வரூப மகா சனீஸ்வரர்’ 


குச்சனூ ர்  ஸ்தலம்

தேனி மாவட்டம்    குச்சனூர்  சுயம்பு  -  திருவுருவம் இல்லை.
திருநள்ளாறு                     தர்ப்யராண்யேஸ்வரர். 


திரு நள்ளாறு கல்லில்  சனி  பகவான்     


4.       திருக்கொள்ளிக்காடு                  திருத்துறைப்பூண்டி அருகில்

5.       திருவாரூர்                         இத்தலத்தில்நவக்கிரங்கள்நேர்வரிசையில்உள்ளன.
6.        திருச்சி                           உறையூரில் கூரை இல்லாத வெக்காளி அம்மன்   சந்நிதியின் கிழக்கே தனிச் சந்நிதியில் பொங்கு சனி பகவான் அருள்பலிக்கிறார்.
7.   குடந்தை               நாகேஸ்வரர் கோவிலிருந்து 1 கி.மீ. தூரத்தில்   தேப்பெருமாநல்லூர். இத்தலத்தின் சனி பகவான் ‘ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன்’ என்ற அகந்தையில் இடுப்பில் கைவைத்துக் கொண்டு நின்ற கோலத்தில் உள்ளார்.
8.   கும்பகோணம்   
 நாச்சியார் கோவில் அருகில் ஸ்ரீராமநாதசாமி-பர்வத வர்த்தினகோவிலில்தனிச் சந்ந்தியில் 
சனி பகவான் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டாதேவி, மகன்கள் மாந்தி, குளிகன் 
எனகுடும்பத்துடன் காட்சி தருகிறார். அருகில் தசரத மகாராஜா சிலை உள்ளத(நோய்தீரசனியை வேண்டுகிறார்).


9.       விழுப்புரத்தில்         திருக்கோவிலூர்- கல்பட்டு (15கி.மீ.) கிராமம் இங்குசுயம்பிரகாச ஆசிரமத்தில் 20’ உயர சனி காட்சி தருகிறார்
10.  கும்பகோணம்                       மயிலாடுதுறை குத்தாலம் என்றகிராமத்தில் பாதாளசனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கையில் அமிர்த       கலசம் உள்ளது. பீடம் திருப்பணி செய்வதற்கு   தோண்டிய போது 15 அடி தோண்டியும் பீடதின் அடிப் பகுதி தென்படாததால் அடி காண இயலாத பாதாள சனீஸ்வரர் என்ற பெயர் உண்டு.
11.  மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில், வெட்ட வெளியில் உயர்ந்த மேடையில்   சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் 5 அடி ஒன்பது அங்குல உயரம், ஒரடி ஆறு அங்குல அகலமும் உள்ள கல் பலகைதான் திருமேனி. இந்த ஊரினை சனிபகவான் காவல் செய்வதால் இங்குள்ள வீடுகளுக்கு பூட்டு, கதவுகள் இல்லை எனத்தெரியவருகிறது.
   


திருவண்ணாமலை ஏறிகுப்பம்
ஆரணி அருகில்
ஆரணி அருகில்  உள்ள  எந்திரம் 

குரு எந்திரம் 


    காகத்திற்கு சனிதோறும் சாதத்துடன் எள், நல்லெண்ணை சேர்த்து வைத்தால்       சனித்தொந்தரவு விலகும்.

தமிழ் துதி:-        ‘சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
                              மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
                              சச்சரவின்றி சனீஸ்வர தேவே
                              இச்சகம் வாழ இன்னருள் தா! தா!Tuesday, August 28, 2012

எங்கெலாம் தேடுவேனோ


சக்தி தரிசனம் 

பெண்ணாகப் பிறந்தவள், பல பருவங்களைக் கடக்கிறாள்
1.பேதை 2.பெதும்பை 3.மங்கை 4.மடந்தை 5.அரிவை 6.தெரிவை 7.பேரிளம் பெண் என்பது அந்த பருவங்கள். இக்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க வல்ல  தலங்கள் தஞ்சை மாவட்டதில் உள்ளது.
  
தட்சணின் யாகதிற்கு சென்ற பார்வதி அவமானப்பட்டு ஹோமக்கினியில் விழுந்த போது, அவளின் அவயங்கள் வீழ்ந்த இடம் சக்தி பீடமாக போற்றப்படுகிறது. பிறகு சிவபெருமான் மன்னித்து சிவ தரிசனத்தைக் காட்டியபோது, அந்த தரிசனத்தில் சக்தியால் சிவனுக்கே உரிய 7 வித சிவச் சின்னங்களை தரிசிக்க இயலவில்லை.அவை 1.சிவனாரின் சிரசில் உள்ள கங்காதேவி 2.மூன்றாம் பிறை
3. நெற்றிக்கண் 4. கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் 5. உடுக்கை 6.திரிசூலம் 7.திருக்கழல் இவைகளை தரிசிக்காமல் துன்பப்பட்டாள்.


சக்தியின் சோகத்தை அறிந்த சப்தமாதர்கள், பூவுலகில் பெண்களுக்கு அருளக்கூடிய 7 திருத்தலங்களை எடுத்துரைத்தனர்.
           
கணவரை முழுமையாக அறிந்து உணர்ந்தால் தானே அவருக்கு இணையாகவும் துணையாகவும் கருத்தொருமித்து வாழமுடியும், என்பதை உணர்ந்த பார்வதிதேவி பூவுலகுவந்தாள்.
           
            சப்தமங்கையர்கள் வழிபட்ட 7 தலங்களும் சென்ற தேவி சிவனாரை நினைத்து தவமிருந்தாள். ஒவ்வொரு தலத்திற்கும் சென்று சிவனைவழிபட வழிபட
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம் பெண் என்ற ஏழுநிலைகளில் தன்னைத் தானே கண்டு சிலிர்த்துப் போனாள். நிறைவில் 7 சிவச்சின்னங்களுடன் சிவபெருமான் தேவிக்குக் காட்சி அளித்தார்.


அந்த எழு ஸ்தலங்கள்:-

இந்த ஏழு தலங்களில் இறைவனைவணங்கினால் ஒவ்வொரு தலத்திலும் பெண்ணின் ஒவ்வொரு பருவத்தின் உருவத்தில் இறைவி காட்சி தருவாள். நிறைவு நாளில் 7 பருவங்களுடன் 7 தேவியருடன் சிவபெருமான் விஸ்வரூபமாக காட்சி அளிப்பார். 1.    சிவ நேத்திர தரிசனம்:- சக்கரமங்கை-சக்கரப்பள்ளி, தஞ்சை-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது சக்கரப்பள்ளி, தேவி பிராம்மியாக வழிபட்ட தலம். பார்வதி சிவனின் நெற்றிக்கண்ணை தரிசித்த தலம். மாகவிஷ்ணு சக்ராயுதத்தைப் பெற்ற தலம். அம்பிகை சக்கரவாகப் பறவை வடிவத்தில் வழிபட்டாள். ஸ்வாமி- ஸ்ரீசக்ரபாகேஸ்வரர், அம்பாள்-ஸ்ரீதேவநாயகிவணங்கும் தினம்-அமாவாசை கழிந்த பிரதமை.

1.    கங்கா தரிசனம்:- அரிமங்கைஅரிமங்கை. அய்யம்பேட்டை கோயிலடி பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது அரிமங்கை, பார்வதி சுயம்புமூர்த்தத்தை வழிபட சிவ, கங்கை தரிசனம் கிடைக்கப் பெற்றாள். (துவிதிதை)
1.   திரிசூல தரிசனம்:- சூல மங்கை- சூலமங்கலம் அய்யம்பேட்டையிலிருந்து 1 கி.மீ. தூரம். திருதியை நாளில் கெளமாரி வணங்கி அருள் பெற்றாள். சுயம்பு மூர்த்தத்தை தொழ பார்வதி திரிசூல தரிசனம் பெற்றாள். ஸ்வாமி கீர்த்திவாகீஸ்வரர், அம்பாள்- ஸ்ரீ அலங்காரவல்லி.  (திருதியை)


1.   திரிகழல் தரிசனம்:- நந்திமங்கை- நந்திமங்கை, அய்யம்பேட்டையை அடுத்துள்ள நல்லிசேரி. சப்தமாதாக்களில் ஒருவரான வைஷ்ணவிதேவி, சிவனாரை தொழுது அருள் பெற்ற ஸ்தலம். பார்வதிக்கு திருக்கழல் தரிசனம் அருளப்பெற்ற ஸ்தலம். ஸ்வாமி  ஜம்புகேஸ்வரர் அம்பாள்   ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.1.    உடுக்கை தரிசனம்:- பசுமங்கை- பசுமங்கை, தஞ்சை பாவநாசம் வழித்தடத்தில் பசுபதிக்கோயில் காமதேனு, மற்றும் வராஹி அம்மன் வழிபட்டதலம். பார்வதி வழிபட்டு சிவனின் உடுக்கை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம். ஸ்வாமி பசுபதீஸ்வரர். அம்மன் பால்வள நாயகி.
1.   பிறை தரிசனம்:- தாழமங்கை- பசுவதி கோயிலுக்கு அருகில் 1கி.மீ. இந்திராணி என்னும் மகேந்திரி வழிபட்டதலம். உமையவள் தவம் செய்து மூன்றாம் பிறையுடன் சிவனை தரிசித்த தலம். சுவாமி-சந்திரமெளலீஸ்வரர். அம்பாள்-ராஜராஜேஸ்வரி. ராஜராஜேஸ்வரி. என்ற திருநாமத்துடன் அம்பிகை அருள் பாலிக்கும் தலங்கள் மிகக்குறைவு. மூன்றாம் பிறை நாளில் வழிபட்டால் குடும்பத்தில் சாந்தம் குடி கொள்ளும்.1.   நாகதரிசனம்:- திருப்புள்ள மங்கை- பசுபதி கோவிலுக்கு அருகில் 1கி.மீ. தொலைவில் உள்ளது. சாமுண்டிதேவி, அஷ்டநாகமூர்த்திகளுடன் வழிபட்டதலம். பார்வதிக்கு சிவன் கழுத்தில் நாகாபரணத்துடன் காட்சி தந்தாள். பிரம்மபுரீஸ்வரம்- அம்பாள்-அல்லியங்கோதை. நாகதோஷம் நிங்கும். இந்த 7 தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்.    நன்றி     http://jaghamani.blogspot.com/

சிறுமி, கல்லூரி மாணவி, திருமணத்திற்கு காத்திருக்கும் பெண், குழந்தை ஈன்றெடுத்தவர், மகன் அல்ல்லது மகளுக்கு திருமணம் செய்யும் நிலையில் உள்ளவர், பேரன் பேத்திகளை கொஞ்சி மகிழ்ந்தவர் என எந்த வயதினாராயினும், பெண்கள் இந்த 7 ஸ்தலகளையும் தரிசனம் செய்தால் குறையின்றி நிறைவாழ்வு பெறுவர்.