Pages

Saturday, August 18, 2012

இறைவனிடம் கை ஏந்துங்கள் !


புனித ரமலான்


நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்
.

நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.

நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது

ரமலான் நோன்பு  என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில்,உண்ணாமல்,நீரருந்தாமல்,புகைக்காமல்,மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.இது இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும்.


ரமலான் மாதச் சிறப்பு

 • ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம்,நன்மைகளை அதிகம் செய்யும் மாதம்,பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம்,சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம்,சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம்,ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம்,நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம்,குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம்,அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மாதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
 • இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.ரமலான் நோன்பின் பலன்கள்

மனித வாழ்க்கையில் அகமும்,புறமும் தூய்மையடைய ஒரு பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்றிருக்கும் போது தனக்குச் சொந்தமான உணவையே உண்ணக்கூடாது என்று இறைவன் கூறும்போது,உண்ணாமல் இருக்கிறார்களே, இப்பயிற்சி பெற்றவர்களா பிறர் பொருளை அநியாயமாக உண்ணாதே என்று இறைவன் சொல்லும்போது அதைச் செய்வார்கள்?

நோன்பு நோற்கும்போது மனைவியுடன் சேராதே என்று இறைவன் சொல்லும்போது அதனைச் செய்யாமல் இருக்கும் பயிற்சி பெற்றவர்களா, மற்ற பெண்கள் பக்கம் நெருங்காதே என்று இறைவன் சொல்லும் போது அதனை கேட்காமல் போவார்கள்?என்கிறது திருமறை.

மேலும்,சொர்க்கத்தில் ரய்யான் என்ற வாசல் உண்டு. ரமலான் மாதத்தில் கண்ணியமாக நோன்பு நோற்றவர்கள் மட்டுமே இவ்வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள்.

ரமலானில் நோன்பு இருப்பதில் பெய்ய பயிற்சி,அடுத்து வரும் பதினோரு மாதங்களுக்கு பயன் அளிக்குமானால் அந்தப் பயிற்சியினால் பலன் உண்டு. இல்லையெனில் பட்டினியாகக் கிடந்ததைத் தவிர வேறேதும் நன்மையில்லை.
ரமலானின் முதல் பத்து :
புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது

 ரமலானின் இரண்டாவது பத்து 
இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.
ரமலானின் மூன்றாவது பத்து :
மூன்றாவது பத்து நாட்கள் நரகத்தில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும் என்று கூறும் இந்த நபிமொழியின் அடிப்படையில், முதலில் அல்லாஹ் எச்சரித்துள்ள நரகத்தின் கொடுமையும் தண்டனையும்.


இறைவனிடம் கை ஏந்துங்கள் !


ஆக, எம்மதமாயினும், வேதங்கள் யாவையும் நமக்கு போதிப்பது ஒன்று தான்:
அவை,
அறம் செய்ய விரும்பு.
ஆறுவது சினம்.
ஐயம் இட்டு உண்.

“சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்- மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி


          பத்மாசூரி


18 comments:

 1. எம்மதமாயினும், வேதங்கள் யாவையும் நமக்கு போதிப்பது ஒன்று தான்

  இறைவனிடம் கை ஏந்துங்கள் !

  ReplyDelete
  Replies
  1. [ma][im]http://3.bp.blogspot.com/-W7oIDC4UoIo/Tzer25tjvtI/AAAAAAAAChs/paLiL9jnpl0/s1600/vanakkam.jpg[/im][/ma]

   Delete
 2. ஆக, எம்மதமாயினும், வேதங்கள் யாவையும் நமக்கு போதிப்பது ஒன்று தான்:
  அவை,
  அறம் செய்ய விரும்பு.
  ஆறுவது சினம்.
  ஐயம் இட்டு உண்.//

  அருமையாக ரமலான் மாதச்சிறப்புகளை கூறி விட்டீர்கள். கண்கவர் படங்களுடன் அருமையான ரமலான் நோன்பின் போது கடைபிடிக்கும் நெறி முறைகளைப்பற்றி விரிவான பதிவுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  உங்கள் பதிவின் மூலம் இஸ்லாமிய அன்பர்கள் எல்லோருக்கும் ரமலான் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. [im]http://images2.layoutsparks.com/1/164245/moonlit-waterfall-stars-shine.gif[/im]

   Delete
 3. மற்ற மதத்தின் கோட்பாடுகளில் உள்ள பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

  ReplyDelete
 4. படங்கள் யாவும் அழகாக நிறைவாக நிறையவே கொடுத்துள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. [im]http://webideas.com/biofeedback/images/calmlink_bigbang.jpg[/im]

   Delete
 5. //நோன்பு நோற்கும்போது மனைவியுடன் சேராதே என்று இறைவன் சொல்லும்போது அதனைச் செய்யாமல் இருக்கும் பயிற்சி பெற்றவர்களா, மற்ற பெண்கள் பக்கம் நெருங்காதே என்று இறைவன் சொல்லும் போது அதனை கேட்காமல் போவார்கள்?என்கிறது திருமறை.//

  திருமறையின் இந்த விளக்கமும் மிகவும் அவசியமான ஒன்றாத்தோன்றுகிறது.

  ReplyDelete
 6. //ஆக, எம்மதமாயினும், வேதங்கள் யாவையும் நமக்கு போதிப்பது ஒன்று தான்:
  அவை:

  அறம் செய்ய விரும்பு.
  ஆறுவது சினம்.
  ஐயம் இட்டு உண்.//

  சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. [im]http://images2.layoutsparks.com/1/178073/a-mystic-waterfall-animated.gif[/im]

   Delete
 7. //“சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
  நீதி வழுவா நெறிமுறையின்- மேதினியில்
  இட்டார் பெரியோர் இடாதார்இழிகுலத்தோர்
  பட்டாங்கில் உள்ளபடி”//

  என்றோ பள்ளியில் படித்தும் இன்றும் மறவாத வரிகள்.

  இட்டார் பெரியோர் :

  இந்தப்பதிவினை [இட்டுள்ள] இட்டாராகிய
  திருமதி பத்மாசூரி அவர்களே எங்களுக்கெல்லாம்
  இன்றைய பெரியோர் ;))))) !

  பா ரா ட் டு க் க ள்,

  வா ழ் த் து க ள்,

  ந ன் றி க ள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQo-fLFOPgIwvsZO9WZr3W9mYGmJzLsRrQTtJtyQXxJ-Ky-rf2ANEazhg[/im]
   உங்க பேரக்குழந்தைகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

   Delete
  2. எங்களின் அன்புத் தாத்தாவின் பதிவுலகத் தோழியான தங்களுக்கு எங்கள் நமஸ்காரக்கள்.

   பவித்ரா [Now 12+ ]
   ஷிவா [Now 10+ ]
   அநிருத் [Now 01+ ]

   எங்களின் புகைப்படங்களைப் பார்க்க வேண்டுமா?
   இணைப்பு இதோ:
   http://gopu1949.blogspot.in/2011/07/1.html

   அன்புடன்

   பவித்ரா + ஷிவா + அநிருத்

   Delete
  3. [im]http://4.bp.blogspot.com/-iG9Ik_MubtA/TgC8CqENHTI/AAAAAAAAFx4/wtrr7gtLRuk/s400/rockfort.jpg[/im]
   [/im]http://1.bp.blogspot.com/-iXObanLy-zU/TgGbxtYoc4I/AAAAAAAAF1U/nP8jkUo547k/s400/DSC01606.JPG[/im]
   ஆஹா! கண்டேன் ! நல்லதோர் குடும்பம், ....

   Delete
  4. [im]http://1.bp.blogspot.com/-iXObanLy-zU/TgGbxtYoc4I/AAAAAAAAF1U/nP8jkUo547k/s400/DSC01606.JPG[/im]

   Delete
  5. அன்று தொட்டிலில் சமத்தாகப் படுத்திருப்பவன் இப்போது ஒரே ஓட்டமும் நடையுமாக லூட்டி அடிக்கிறான். மிகவும் சமத்து. மிகவும் புத்திசாலித்தனமும் உள்ளது. இன்று எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் தங்களுக்கு மெயில் மூலம் பிறகு அனுப்பி வைக்கிறேன்.

   vgk

   Delete
 8. Mr.chandrasekar has given this comment through mail

  Thanks & Regards,
  Chandrasekaran V,
  Sr.Executive - Purchase,
  Hinduja Foundries Ltd, Ennore

  ReplyDelete
 9. Tulsi Gopal has left a comment in response to இறைவனிடம் கை ஏந்துங்கள்
  7:02 AM (8 hours ago)

  to me
  நண்பர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்து(க்)கள்..

  2012/8/19 சந்திர வம்சம்
  சந்திர வம்சம் has sent you a link to a blog:

  ReplyDelete