Pages

Thursday, March 15, 2012

ஆண்டவன் கட்டளை


நாம் எதையும் சாதிக்கக் கூடிய வல்லவர்கள். நமக்குத்தேவையான எல்லா வலிமையும் சக்தியும் நமக்குள்ளே குடி கொண்டு இருக்கின்றன
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை ஆகும். அத்துடன் இவை எல்லாவற்றிற்கும் மேல் அன்பு இருந்தாக வேண்டும்.


சந்தோசமான சமயங்களில் கடவுளை பாராட்டுங்கள்

கஷ்டமான சமயங்களில் கடவுளை  வேண்டுங்கள்

வலிமிகுந்த சம ங்களிள் கடவுளை நம்புங்கள்

அமைதியான நேரங்களில் கடவுளை வணங்குங்கள்

ஒவ்வோரு சமயத்திலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்    


ஆண்டவன் கட்டளை

Friday, March 2, 2012

மலரும் நினைவுகள்!


         திருமணத்திற்கு முன் எங்கவீட்டுக்காரர் திருநெல்வேலியில்
இருந்த பொழுது அவர் தங்கியிருந்த வீட்டுசசொந்தக்கார நண்பர்       
திரு.சக்திவேல் என்பவரைப் பற்றி அடிக்கடி கூறுவார்.

                    அதற்கு முன்பு வரை பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவழித்தவர், அவரது நண்பர் மூலம் தான் சிக்கனமாக வாழப்பழகியதாக பல சம்பவங்களை கூறுவார்.

மலரும் [நன்றி: ராஜராஜேஸ்வரி]
மாலையில் காய்கறி வாங்க செல்லும் போது உடன் இவரையும் கூட்டிக்கொண்டு செல்வாராம். எந்தக்காய்கறிகளையும் நிறுத்திவாங்காமல், கூறுகட்டி வைத்திருக்கும் காய்களையே வாங்குவாராம்.இதுதான் தேவைக்கேற்ப வாங்க தோது என்பாராம்.சிலசமயம் சிலவகை காய்களை சிறுதுண்டுகளாக வைத்திருப்பர்.அதைப்பாத்து வாங்குவாராம். வீட்டில் காய் நறுக்கும் வேலை இல்லை! தவிர சொத்தை,முற்றல் இல்லாமல் வங்கலாம் என்பாராம். [வீட்டில் ஏச்சு வாங்கிய அனுபவம் போலும்!]பொருட்காச்சி ஸ்டால் 
              ஒரு சமயம் நெல்லையில் நடந்த போருட்காட்சிக்கு அவருடன் சென்றபோது நடந்த சம்பவத்தை சிரிப்புபொங்க இவர் கூறினார்.அங்கு சக்தியுடன் சென்றுகொண்டிருந்தபோது இவருக்குத்தெரிந்தவர்கள் எதிரேவர அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சக்தி இவரைவிட்டுப்பிரிந்துவிட, சக்தியும் தேடச்சோமபல் பட்டு அங்குள்ள விளம்பர நிலையத்தில் [குழந்தயை காணவில்லை என அறிவிப்பார்களே அந்த இடம்]
உள்ள நபரிடம், பெயர் சூரி, பேட்டை மில்லில் வேலை, நண்பர் சக்தி தேடுவதாக அறிவிக்கச்சொல்லியுள்ளார்.அறிவிப்பாளரும் அதர்க்கு ரூ.5 ஆகுமெனக்கேட்க அதறகு "நிலக்கடலை வாங்க ஒரு ரூபாய்க்காகதான் அவரைதேடுகிறேன்! 5ரூபா இருந்தால் அவரை ஏன் தேடப்போகிறென் என்றாராம்.
பொருட்காச்சி  ஸ்டால் 
அவர் அடிக்கடி இவரிடம் கூறும் விளக்கம் இதுதான்" சூரி! வாழ்க்கையில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கணும், ஆனால் நப்பித்தனம் [கஞ்சத்தனம்] கூடாது! 
ஒரு சமையம் நண்பர் சக்தியின் தம்பியின் திருமண ஏற்பாட்டின் போது நடந்த சம்பவம் இது:--
திருமணம் வெளியூரில்; இவடர்கள் அதிகாலை 5மணிக்கெல்லாம் மாப்பிள்ளையுடன் கிளம்பவேண்டும். முதல் நாள் மாலையில் சக்திவேல் இவரிடம், திருமணம் வெளிஊரில் என்றாலும்,மாப்பிள்ளை கிளம்பும் போது மங்கள வாத்தியம் வாசிக்கவேண்டும்.[நெல்லையில் சம்பிரதாயத்தினை சிறிதும் விட்டுத்தரமாட்டார்கள்] . வாத்தியம் வாசிப்போரைக்கண்டு ஏற்பாடு செய்வோம் என்று அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் செண்ற இடம் நெல்லைஅப்பர் கோவில்.


வித்வான் கோவிலிலா இருப்பார் என்று இவர் கேட்க, இவர் நண்பர் கோவிலில் சுவாமி அபிஷேக நீர் தாமிரபரணியில் இருந்து கொண்டு வரும் போது முன்னால் வாசித்துக் கொண்டு ஒருவரும்,அவருடன் கூட ஒருவர்  மேளத்துடன் செல்வார் அவரிடம் போய் நின்றார்.! இந்த அபிஷேக நீர் 2 வெள்ளிக் குடங்களில் இரு பட்டர்கள் கொண்டு வருவர் அவர்களுக்கு முன்னால் சிறிது தொலைவில் இவர்கள் வாசித்து  வருவார்கள்.


தாமிரபரணி குறுக்குத்துறையிலிருந்து, தெற்குப்புதுத் தெரு வரை வாத்திய சத்தம் ஒலிக்காது; தெற்குப்புதுத் தெரு ஆரம்பதில் வாத்தியக்காரர் ஒருமுறை ஊதுவார்! மத்தளக்காரர் மத்தளத்தில் ஒரு தட்டு தட்டுவார்! அவ்வளவுதான்! பின்னர் கீழவீ தி ஆரம்பத்தில் ஒரு ஊது! ஒரு தட்டு! அதன் பின்னர், கோவில் வாசலில் கோவில் அலுவலகம் முன்னால் ஒரு நீண்ட ஊது! அவ்வளவுதான்!

அவரிடம் சென்ற நண்பர் தமது உரையாடலை ஆரம்பித்தார்:.

 அண்ணாச்சி! இங்கனவா உறங்குவீ !

 வா.காரர்: ஆமா முதலாளி!

 சக்தி: கொசுத்தொல்லை இருக்குமே!

 ஒண்ணூ செய்யுங்க! கால 4 மணிக்கு காபி தாறேன். ஒரு நிமிஷம்             வாத்தியம் வாசிங்க,அம்புட்டுதான்.

வாத்தியக்காரர்:           எவ்வளவு தருவீ ?

சக்தி:-                    ஒரு கை வீ ச்சு தாரேன்.

வாத்தியக்காரர்-           அப்பிடீனா ?

சக்தி:                     அஞ்சு ரூபா தான் !
     


வாத்தியக்காரர்:      என்னமுதலாளி ஒரு நூறாவது தாருங்க!

சக்தி:-     அண்ணாச்சி! இப்ப கிராமபோனில் பெரிய தட்டு (L.P.R e c o rd)    
                                                                                                             வந்தாச்சி.போட்டுவிட்டா காருக்குறிச்சியார் முக்காமணி  நேரம் நிறுத்தாம வாசிப்பார். நீங்க ஒரு ஊது, ஒரு தட்டுத்தட்டுங்கபோதும்!

இறுதியில்அவரை வம்படியா அம்பது ரூபாயுக்கு சம்மதிக்க வைத்து  1 மணி நேரத்திற்கு மேல் வாசிக்கவைத்தது தனிக்கதை
 
பொதுவாக நெல்லை வாழ் மக்கள் சிக்கனத்தில் தேர்ந்தவர்கள். ஆனால் "நப்பி" கிடையாது! சாஸ்த்திர ஸம்பிரதாயங்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பார்கள்.மெத்தப்படித்திருந்தாலும் "ஜபர்தஸ்த்" இருக்காது. உடையில் எளிமையை கடைப்பிடிப்பார்கள்.