Pages

Thursday, August 1, 2013

மலர்களில் நிம்மதி


மலர்களில் நிம்மதி

சூரியனின் தென்திசை நோக்கியப் பயணம் ஆடியில் தொடங்குகிறது. ஆடிமாதம் அம்மனுக்கு திருவிழாக்காலமாகும்.
இம்மாதத்தில்தான் நறுமணம் வீசும் பலபூக்கள் பூத்துக் குலுங்கும்

நறுமணம் வீசும் பூக்கள் அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம் எனும் கொள்கை உடையவள் நான்.

இறைவனுக்கு நறுமண மலர்களைக் கொய்து அதனை அழகுற தொடுத்து அர்ப்பணிப்பதினால் மனதுக்கு நிம்மதி கிடைப்பதுடன் நமது உள்ளத்தினையும் மலரச்செய்கிறது.
"கோங்கு, செண்பகம், பிச்சி, வெள்ளெருக்கு,
செங்குவளை,தாமரை, புன்னை, தேங்கமழ் கொன்றை,
செழித்தலர் தாழம்பூ -அவிழ்துமை
பூஜைக்கு ஆங்கு வேண்டிய தருண்த்தில் உதவிடும்"

என ஆன்றோர்கள் கூற்றுபடி காண்போர்களின் விழிகள் மலரச் செய்யும் வண்ணம் அழகுபட தொடுத்து இறைவனுக்குச்சாற்றி மகிழ்கிறேன்.

"செண்பகப்பூ கொய்துவந்தே எங்கள் அம்பிகையை
பூஜை செய்தால்,ஜன்மாந்திர பாவமெல்லாம்
அவள்தீர்த்திடுவாள்.
இருவாட்சி கொய்துவந்தே எங்கள் தேவியை
பூஜை செய்தால் மருள் சூழ்ந்த மனதினிலே
ஞான ஒளி வீசச்செய்திடுவாள்"

(அழகுமிளர நான் தொடுத்த மாலைகள் படத்தில் காணலாம்)

பத்மாசூரி