Pages

Saturday, September 15, 2012

இசையால் மயங்கும் [மயக்கும்] இறைவன்

தென்னாங்கூர் கோவில்

மனதுக்கும் வாழ்க்கைக்கும் ஆனந்தம் அளிக்கின்ற ஆலய தரிசனம் அமைய ஆண்டவனின் அனுக்கிரகம் தேவை. அதிலும் வியப்பூட்டும் கோவில்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பது பெரும் பேறு.
அதுபோன்ற திருத்தலம்தான் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி என்ற சிற்றூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தென்னாங்கூர் பாண்டுரங்கர் ஆலயம். ஞானானந்த சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோவிலின் வெளிப்புற அமைப்பும் உட்புற அமைப்பும் பிரமிப்பூட்டும். இத்திருக்கோவிலை ‘தட்சிண ஹாலாஸ்யம்என அழைக்கின்றனர்.
            மூலவர் பாண்டுரங்கர் அன்னை ருக்மணி. தலவிருடசம் தமாலமரம். வடமாநிலங்களில் மட்டும் உள்ள இந்தவிருட்சம் தமிழகத்தில் மட்டும் உள்ளது. இவ்விருட்சத்தின் கீழ் நின்று தான் ஸ்ரீகிருஷ்ணன் புல்லாங்குழலில் இசைத்த இசையில் ராதை மயங்கியதாக வரலாறு கூறுகிறது.

கோபுர அமைப்பு நம்மை பிரம்மிக்கவைக்கும். 120 அடி உயர இக்கோபுரம் பூரி ஜெகந்நாதர் ஆலய வடிவமைப்பில் அமைந்திருக்கிறது. கோவில் உள்ளே ஆகமப்படி தியான மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபம் அமைந்துள்ளன.
     கோவிலின் உள்ளே அனைத்து கலை வேலைப்பாடுகளும் கண்ணாடி இழைகளால் ஓவியங்களாக காட்சி அளிக்கின்றன. கோவிலின் உள் வடிவமைப்பு அழகிய அரசவையை நினைவூட்டும். அழகிய வடிவமைப்பு பொருந்திய கோவில்களின் வரிசையில் இது உலகில் மூன்றாவது இடம் வகிக்கிறது.கண்ணாடி இழை ஓவியங்கள்


தென்னாங்கூர் கோவில்தென்னாங்கூர் கோவில்

விழாக்காலங்களில் பெருமாள், கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களின் நாமசங்கீர்த்தனங்களைக் கேட்பார். ஞாயிறு தோறும் பெருமாள் ராஜஅலங்காரத்தில் காட்சி அளிப்பார். சனிக்கிழமை தவிர ஏனையதினங்களில் திருப்பதியில் நடப்பது போல திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.பாண்டுரங்கர் ருக்மணி
ஸ்ரீஹரிதாஸ் ஸ்வாமிகளால் நிர்மாணிக்கப்பட்ட இத்திருக்கோவிலில் எந்திர வழிப்பாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்கர அதிதேவதைகள் இருப்பது விசேஷம்.
     ராஜராஜேஸ்வரி, மஹாஷோடஸாட்சரி, சரஸ்வதி லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, கணபதி, ருத்ரன், ஈஸ்வரன், விநாயகர், பாலா, அன்னபூரணி, ராஜமாதங்கி, பிரத்தியங்கரா தேவி, சரபேஸ்வர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, மாகாளி, மகேஸ்வர், கவுமாரி வைஷ்ணவி, ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

சுவாமி ஹரிதாஸ்கிரிதிருக்கல்யாணம்

நவராத்திரி சமயத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தோடு ருக்மணி அம்பாள் காட்சி தருவார். அருள்மிகு மீனாட்சி அம்மன், பாண்டிய மன்னர் குழந்தைவரம் வேண்டி இங்கு யாகம் நடத்தி அதில் தோன்றியவர். எனவே இது ‘மீனாட்சி தோன்றிய தலம் ஆகும். இத்தலத்தின் சிறப்பம்சமே, இறைவனை பக்திப்பாடல்களால் வழிபாடு செய்வதுதான். இவ்வாறு நாமசங்கீர்த்தனம் நம்மை இறைவனிடம் உணர்வுபூர்வமாக ஒன்றிட வழிவகுக்கும். 
இத்திருக்கோவிலை தரிசிக்க வரும்போது, அண்ணாமலையாரை திருவண்ணாமலையிலும், அருகாமையில் உள்ள திருக்கோவிலூர் பெருமாளையும் தரிசித்து பின்னர் சாத்தனூர் அணைக்கட்டையும் கண்டு களிக்கலாம்.


திருவண்ணாமலை

திருக்கோவிலூர்


சாத்தனூர்  அணை

அணையின் பூங்காவில்  இயற்கை காட்சி5 comments:

 1. அருமையான திருத்தலம்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. இரண்டாவது படத்தில் காட்டியுள்ள
  ”கண்ணாடி இழை ஓவியங்கள்”
  என்ற படம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ;)))))

  ReplyDelete
 3. //இசையால் மயங்கும் [மயக்கும்] இறைவன்//

  அழகான தலைப்பு
  அற்புதமான படங்கள்
  அசத்தலான விளக்கங்கள்
  அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ReplyDelete
 4. தென்னாங்கூர் கோவிலுக்கு நாங்கள்போன போது ராஜ அலங்காரம் . மிக அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள். தரிசனம் செய்தபின் மதியம் சுட சுட சாம்பார் சாதம் கொடுத்தார்கள். அழகான படங்களுடம் பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 5. சிறப்பான திருத்தலம்... இருமுறை சென்றதுண்டு... பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete