Pages

Friday, September 7, 2012

கோவிந்தா! கோவிந்தா!


கோவிந்தா! கோவிந்தா!




திருமலை பெருமானை தரிசிக்க சென்றமையால் சில நாட்கள் பதிவு உலகத்தில் வர இயலவில்லை.
எங்க குலதெய்வமே விழுப்புரம் வட்டத்தில் மாம்பழப்பட்டு அருகே உள்ளே ‘ஆலம்பாடி எனும் கிராமத்தில் சாளக்கிரம வடிவத்தில் உள்ள “அருள்மிகு குண்டுசட்டி பெருமாள் ஆகும்.
குலதெய்வமாக பெருமாள் இங்கு காட்சி அளித்ததால் நாங்கள் தனிப்பட்டமுறையில் திருப்பதி செல்லக்கூடாது எனவும் வேறு குழுவுடன் இணைந்து செல்லலாம் எனவும் முன்னோர்கள் வாக்குப்படி, எனது அக்கா குடும்பத்துடன் அவர் மகன் திரு.வெங்கட்றாமனின் பரிபூரண எற்பாட்டில் ஏழுமலையானை மனம் குளிர தரிசனம் செய்து வந்தோம். 







இவ்வாறான தெய்வதரிசனம் கிட்டும் என்பதை அறியாமலேயே சிலதினங்களுக்கு முன் “திருப்பதி அதிசியங்கள் என்ற தலைப்பில் திருப்பதி பற்றிய பல செய்திகளை தெரிவித்திருந்தேன்.
ஆனால் என்னதான் பெருமாளுக்குச் சாற்றியிருக்கும் மலர் மற்றும்  நகைகள் கிரீடம் என அறிந்திருந்தாலும் தரிசனத்தில் அந்த அமானுஷ்ய தோற்றமும் முகமும் தவிர வேறு எதுவும் கண்களுக்குப் புலப்படுவதில்லை.






எனவே நான் சொல்ல வந்ததே வேறு!
கோவில் பிரகாரத்தில் அன்றாட குவியும் உண்டியல் பணத்தினை பலரும் அறிய எண்ணி அடுக்குவதையும் நோட்டு மலையையும் பார்க்கும் போது ‘திருப்பதி அந்தகாலத்தில் மதராஸ்ராஜதானியில் நம் தமிழகத்துடன் அல்லவா சேர்ந்திருந்தது, என ஒரு கணம் எண்ணி இத்தனை செல்வமும் நியாயப்படி தமிழ்னாட்டுக்கல்லவா வரவேண்டும் என நினைத்தேன்!



ஆனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வரும் அந்த இடத்திலும் கோவிலைச்சுற்றி உள்ள இடங்களின் தூய்மையான பராமரிப்பையும், சுந்தரத்தெலுங்கில் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் சேவார்த்திகளின் பணிவும், சுத்தமான குடினீர், மற்றும் வருபவர்களுக்கெல்லாம் மனம் கோணாமல் அன்னப்பிரசாதம் அளிக்கும் பாங்கினை பார்க்கும்போது “யாதும் இருக்குமிடத்தில் இருப்பதால் தான் எல்லாம் சௌக்கியமாக இருப்பதாகத் தோன்றுகிறது!







மலையிலிருந்து கீழே வரும்போது பார்த்தால் மலைப்பாதைகளை சுத்தம் செய்யும் ஆட்களை காணமுடிகிறது. மலைகள் முழுவதும் பசுமையான மரங்கள், சுகந்தமான  நறுமணம்  பாதைகள் ஓரம் பலப்பல வண்ண பூஞ்செடிகள் என ரம்மியமான சூழல்.
சிலபகுதிகளில் சிவப்பு நிற பெரும் பாறைகள் [ஆம்! அபூர்வமான கிரனைட் கற்கள் தான்!]









அப்பொழுதுதான் மனதில் ஒரு நிம்மதி! இந்த மலை மட்டும் தமிழ் நாட்டுடன் இருந்திருந்தால் இன்னேரம் மலையும் கோவிந்தா, பெருமாளும் மலையில் இல்லாமல் சுரங்கத்துக்குள் இருந்திருப்பார்! கோவிந்தா!














4 comments:

  1. திருப்பதிப்பதி பற்றிய அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. படங்களும் பதிவும், நீங்கள் விவரித்த விதமும் அருமை... நன்றி...

    ReplyDelete
  3. Gopalakrishnan Vai. valambal@gmail.com
    6:59 PM (11 hours ago)

    to me
    மிகவும் அழகான படங்களுடன் அருமையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள் அன்பான வாழ்த்துகள்.

    ///இந்த மலை மட்டும் தமிழ் நாட்டுடன் இருந்திருந்தால் இந்நேரம் மலையும் கோவிந்தா!! பெருமாளும் மலையில் இல்லாமல் சுரங்கத்துக்குள் இருந்திருப்பார்! கோவிந்தா!!! ////
    மிகவும் ரஸித்தேன். உண்மை தான்.
    VGK

    ReplyDelete
  4. கோவிந்தனின் இருப்பிட பெருமையை விளக்கும் பதிவு அருமை.

    ReplyDelete