Pages

Thursday, September 20, 2012

சென்று வருக!


சென்று வருக!
நேற்று விநாயகர் சதுர்த்தி. அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து துடைத்து வாசலில்
 மெழுகி கோலமிட்டு குளித்து மடியுடன் வி நாயகர் பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டு
 நிமிர்ந்தால் மணி காலை ஆறு ஆகிவிட்டது. நேவிதியத்திற்குபூர்ணம்கொழுக்கட்ட
பருப்பு கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை மற்றும் காரக் கொழுக்கட்டை செய்துவிட்டு,
 அப்பம் வடை தட்டி முடிக்கும் முன்பு, நேற்றே ஊறவைத்த  கொண்டக்கடலையை
 வேகவிட்டு, இட்லி மற்றும் சாம்பார் செய்து முடிக்கவும் இவர் கடவீதிக்குச்சென்று
 பிள்ளையார் வாங்கி வரவும் சரியாக இருந்தது.


வீட்டில் பலவகை பூஞ்செடிகள் இருப்பதால் பூக்களுக்கு என்றும் குறைவில்லை. முதல் நாளே செண்பகப்பூ மாலை, வெள்ளை இருவாட்சி பூ மாலை, மற்றும் வெள்ளெருக்கம்பூ மாலைகளில் பிள்ளையார் சும்மா ஜொலிப்பதைக் காண இரு கண்கள் பத்தாது.
பூஜை செய்த பிள்ளயாரை தண்னீரில் கரைக்கும் தினம் இன்று!
ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகருக்கு விடை கொடுப்போம்.                                                         சென்று வருக!
7 comments:

 1. உங்கள் வீட்டுப்பிள்ளையார் தனி அழகாக இருக்கிறாரே!

  ஜோர் ஜோர்.

  பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளதுங்க!!

  கோலம் நீங்கள் தான் போட்டிருப்பீர்கள். அதுவும் பெரிதாக அழகாகவே உள்ளதுங்க.

  தொடரும்.....

  ReplyDelete
 2. அழகான கோலமிட்ட பலகையில் பிள்ளையாரை அமர்த்தி, ஏராளமான அலங்காரங்கள் செய்துள்ளீர்கள்.

  அழகான குடை, ஜொலிக்கும் க்ரீடம், சந்தனக்காப்பு போல முகம், ஏராளமான புஷ்பங்களுடன் அர்ச்சனை, மலர் மாலைகள், காதுப்பக்கம் இரண்டிலும் அழகிய இரு ரோஜாக்கள் .... மிகவும் அசத்தல் தான் ! ;)))))

  தொடரும்.....

  ReplyDelete
 3. பிள்ளையாருக்கு அணிவித்துள்ள நகைகளும், பின்புற Background டிசைனும் ரொம்ப சூப்பராக உள்ளதுங்க.

  எவ்வளவு ஸ்ரத்தையாக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கீங்க..... எப்படிப்புகழ்வது என்றே எனக்குத் தெரியவில்லைங்க! ;)

  //அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து துடைத்து வாசலில் மெழுகி கோலமிட்டு குளித்து மடியுடன்
  விநாயகர் பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டு நிமிர்ந்தால் மணி காலை ஆறு ஆகிவிட்டது.

  நைவேத்யத்திற்கு பூர்ணம் கொழுக்கட்டை, பருப்புக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை மற்றும் காரக் கொழுக்கட்டை [உசிலி போட்டது]செய்துவிட்டு, அப்பம் வடை தட்டி முடிக்கும் முன்பு, நேற்றே ஊறவைத்த கொண்டக்கடலையை
  வேகவிட்டு, இட்லி மற்றும் சாம்பார் செய்து முடிக்கவும்.....//

  அடடா, இதைக் கேட்கவே எனக்கு ஒரேயடியாக வியர்த்து விறுவிறுக்குதே! கூடமாட உதவிக்கு யாரும் இல்லையா? கொழுக்கட்டைக்கு யாராவது சொப்பு செய்து கொடுத்தாலாவது கொஞ்சம் உபகாரமாக இருந்திருக்குமே!!

  தொடரும் .....

  ReplyDelete
 4. //வீட்டில் பலவகை பூஞ்செடிகள் இருப்பதால் பூக்களுக்கு என்றும் குறைவில்லை. முதல் நாளே செண்பகப்பூ மாலை, வெள்ளை இருவாட்சி பூ மாலை, மற்றும் வெள்ளெருக்கம்பூ மாலைகளில் பிள்ளையார் சும்மா ஜொலிப்பதைக் காண இரு கண்கள் பத்தாது.//

  சந்தோஷமாக உள்ளது. இருப்பினும் இந்தப்பூக்களைப் பறித்து, மாலையாகத் தொடுத்து பிள்ளையாரைப் பொறுமையாக மாப்பிள்ளை போல ஜோராக அழகூட்ட வேண்டுமே. உங்களின் சிரத்தை என்னை மிகவும் மகிழ் வூட்டுகிறது.

  படங்கள் அத்தனையும் அழகோ அழகு. சேலத்துக்கே நேரில் வந்து, உங்கள் ஆத்து பூஜையில் கலந்து கொண்ட திருப்தி ஏற்பட்டது.

  நேற்று பிள்ளையார் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே Bye சொல்லி அனுப்பி வைத்து விட்டீர்கள். ;(

  என் ”காலம் மாறிப்போச்சு” என்ற பதிவினில், என் சிறு வயது முதல் ஆரம்பித்து, நான் துபாய் போய் வந்த வரைக்கும், எனக்கும் என் இஷ்ட தெய்வமான இந்தப் பிள்ளையாருக்குமான பலவித அனுபவங்களை நகைச்சுவையாக எழுதியிருக்கிறேன். முடிந்தால் படித்துப்பாருங்கோ. இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/08/1-of-2.html

  http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2_31.html

  அன்புடன்
  VGK


  ReplyDelete
 5. வீட்டில் பலவகை பூஞ்செடிகள் இருப்பதால் பூக்களுக்கு என்றும் குறைவில்லை. முதல் நாளே செண்பகப்பூ மாலை, வெள்ளை இருவாட்சி பூ மாலை, மற்றும் வெள்ளெருக்கம்பூ மாலைகளில் பிள்ளையார் சும்மா ஜொலிப்பதைக் காண இரு கண்கள் பத்தாது.//

  பிள்ளையார் ஜொலிக்கிறார்.

  எல்லோருக்கும் எல்லா நலங்களும் தந்து செல்லட்டும்.

  ReplyDelete
 6. சிறப்பாக செய்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete