Pages

Monday, November 14, 2011

புரியாதபுதிர்


இறைவன் படைப்பு பல இரகசியங்களை உள்ளடக்கியது. ஆனால் காரண காரியமன்றி எந்தஒரு உயிரும் படைக்கப்படவில்லை. ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம், நோக்கம் இருப்பதாக கூறுவார்கள்.

உதாரணமாக, மகாபாரதத்தில் ஸந்துனு மஹாராஜாவிற்கும் பாகீரதியான கங்காதேவிக்கும் பிறந்த வசுவின் அவதாரங்களான 9 பேர்களில் பீஷ்மர் தவிர்த்து ஏனைய கந்தர்வர்கள், ஒரு சாபத்தினால் மானிடர்களாக பிறக்கவேண்டி வந்தபோது, அவர்கள் கங்காதேவியிடம் மேற்படி சாபத்தினை கூறி தாங்கள் பூலோகத்தில் பிறந்தவுடன், கங்கையில் போட்டுவிடவேண்டும் என வேண்டியதற்கு ஏற்ப, கங்காதேவியும் அவ்வாறே செய்ததாக மகாபாரதம் கூறுகிறது.

ஆனால் சில உயிர்களின் பிறப்பின் நோக்கம் என்ன என்பது நமது அறிவிற்கு எட்டுவதில்லை.

எனது ஒரே மகனின் குழந்தைப்பருவத்தில் காய்ச்சலில் வரும் வலிப்பினால் (FEBRIAL FITS)அவதிப்பட்டான்.
மருத்துவக்கண்காணிப்பிலேயே வளர்ந்து வந்தான்.சிறுவயதில் இருந்தே அபரிமிதமான அறிவுத்திறனும், கற்பனை வளமும் கொண்டிருந்தான்.
உதாரணமாக காகம் அதன் அலகினய் தரையில் தேய்ப்பதைப் பார்த்தால் "காகம் A எழுதுவதாக கூறுவான்

பெருமாள் கோவிலில் இறைவனை சேவித்து, துளசிதீர்த்தம் பெற்றுவந்தபின் , ராமர் பட்டாபிஷேகப் படத்தினை பார்த்து, அதில் அனுமன் ராமர் பாதத்தில் அமர்ந்து  ராமர் பாதத்தை தாங்கி இருப்பதைப்பார்த்து, அனுமன் "துளசிதீர்த்தம்" தா எனக்  கேட்பதாக கூறுவான்.

அன்னபூர்ணியின் கையில் உள்ள சிறு அன்னக்கரண்டியைப் பார்த்து, கரண்டி சிறியதாக இருப்பதால் "ஊறுகாய்" போடுவதாக கூறுவான்.

அவன் எழுதியவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன். மேலோட்டமாக பார்த்தால் இவை கிறுக்கலாக தோன்றும். ஊன்றி கவனித்தால் இதில் நமது இதய மற்றும் சிறுனீ ரக வடிவம் தெரியவரும். இதில் ஒருவடிவம் சரஸ்வதியின் வீணை என்று கூறினான்.

(ஆரம்பத்தில் "FEBRIYAL FITS என்ற மருத்துவ உலகம் இறுதியில் “MASSIVE CARDIYAC ARREST" என கூறியது)

ஆனால் இதில் ஏதோ புரியாத செய்தி இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.

தெரிந்தவர்கள் தெரியப்படுத்தினால் நன்றி கூறுவேன்.

இறைவன் எங்கள் மூலமாக இந்த உயிரினை படைத்ததின் அர்த்தம் என்ன?
4 comments:

 1. இறைவன் படைப்பு பல இரகசியங்களை உள்ளடக்கியது. ஆனால் காரண காரியமன்றி எந்தஒரு உயிரும் படைக்கப்படவில்லை. ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம், நோக்கம் இருப்பதாக கூறுவார்கள்./

  இரகசியமாகவே இருந்துவிட்டுப்போகட்டும் தாயே!
  இனிய நினைவுகளில் இயைந்திருக்கலாம்..

  எதுவுமே அர்த்தமற்ற கிறுக்கல்களாக எனக்குத் தோன்றவில்லையே..
  ஆயிரமாயிரம் செய்திகளைத்தாங்கி நிற்கும் பொக்கிஷம்..

  மிக மிக கனமான பொக்கிஷப்பகிர்வு!

  ReplyDelete
 2. இராஜராஜேஸ்வரி said...[im]http://www.desicomments.com/dc1/01/71910/71910.jpg[/im]

  ReplyDelete
 3. [im]http://www.stevemcgraw.com/em_lin/animated/rain.gif[/im]

  ReplyDelete
 4. //எதுவுமே அர்த்தமற்ற கிறுக்கல்களாக எனக்குத் தோன்றவில்லையே..
  ஆயிரமாயிரம் செய்திகளைத்தாங்கி நிற்கும் பொக்கிஷம்.. //

  நாம் அவற்றைப் புரிந்து கொள்ளும் ஒருநாள் நிச்சயமாக வரும். vgk

  ReplyDelete