Pages

Monday, October 8, 2012

நித்திய சேவையில் திரு வேங்கடவன்

திருமலை பெருமாள் ஏற்றுக்கொள்ளும் தினசரி சேவைகள்:-




கீழ்த்திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு செல்லும் போது, கடக்கும் மலைகள் ஏழு.
ஆதிசேஷன் உடல் போல் அமைந்திருக்கும் இந்த மலைகளின் பெயர்கள்:-



         1.விருஷபாத்ரி
         2.நீலாத்ரி
         3.நராயணத்திரி
         4.அஞ்சனாத்ரி
         5.வெங்கடாத்ரி


     
    

  திருப்பதி நித்திய சேவை 




அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி பெருமாளுக்கு அர்ப்பணிக்கும் சேவைகள்:-
சுப்ரபாதத்துடன் தினமும் துயில் எழுப்பி ஆரத்தி எடுத்து பால், வெண்ணைய் நைவேத்தியம் செய்கின்றனர். பெருமாள் பக்தர்களுக்கு ‘விஸ்வரூப சேவை சாதிக்கிறார்.
அதன் பிறகு பெருமாளுக்கு முந்தைய தினம் சாற்றியுள்ள மலர்களைக் களைந்து அபிஷேகம் நடக்கும். இதற்கு ‘தோமாலை சேவை எனப் பெயர். ஆகாய கங்கையில் இருந்து கொண்டு வரும் தீர்த்தத்தால் மூல மூர்த்திக்கு பாதுகாபிஷேகம் மட்டும் செய்து பின் அலங்கரிப்பர். தோமாலை சேவைக்குப் பின்பு கொலுவு. ஸ்ரீமூர்த்தியை தங்கச் கதவுகளை திறந்து வெளியே அழைத்து திருமணி மண்டபத்தில் கொலுவிருக்கச் செய்வர். பெருமாளின் முன் சேவார்த்திகள் அன்றைய திதி, வார, நட்சத்திர, யோக கரணம் பற்றிய விபரங்களையும், முந்தைய நாள் வரவு, செலவு கணக்கும் படிக்கின்றனர்.




பிறகு பெருமாளுக்கு ஸஹஸ்ர நாம அர்ச்சனை நடைவெறும். ஸுத்தி எனும்    நைவேத்தியம் செய்வார்கள். அப்பொழுது பிரதான மண்டபத்தில் உள்ள இரண்டு பெரிய மணிகளை அடிப்பார்கள். இதன் ஒலி ஏழுமலைகளிலும் எதிரொலிக்கும்.






 அடுத்து சாற்றுமுறை: மறை ஓதும் வைணவர்கள் திவ்யப்பிரபந்தப் பாடல்களை வாசிப்பார்கள். பக்தர்களுக்கு அதன் பின் பெருமாள் காட்சி தருவார். பெருமாளுக்கு 108 அர்ச்சனை நடைபெற்று நைவேத்தியம் செய்த பிறகு மீண்டும் ஒரு முறை கண்டாமணிகள் முழுங்குகின்றன. தோமால சேவை இரவும் ஒருமுறை நடைபெறுகிறது. இதில் சேவார்த்திகள் தவிர ஏனையோர் அனுமதிப்பதில்லை.


இரவு ஏகாந்த சேவை: சயன மண்டபத்தில் இந்த சேவை நடைபெற்று நைவேத்தியமாக அம்மாவாரி பாயசம் படைப்பர்.
மேலே கூறியவை நித்தியசேவை. இது தவிர பக்தர்களின் வேண்டுகோளுக்காக நிறைய சேவைகள், மற்றும் உற்சவ சேவைகள் உண்டு.











“மலையப்பன் வேண்டுவோருக்கு வேண்டியது தரும் கருணைக்கடல்.









7 comments:

  1. “மலையப்பன் வேண்டுவோருக்கு வேண்டியது தரும் கருணைக்கடல்.”


    அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள் !

    ReplyDelete
  2. // 1.விருஷபாத்ரி
    2.நீலாத்ரி
    3.நராயணத்திரி
    4.அஞ்சனாத்ரி
    5.வெங்கடாத்ரி//

    ஆஹா, எதையுமே ’த்ரி’த்துக்கூறாமல் [த்ரித்துக்கூறாமல்] உணமையை உணமையாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    தொடரும்...

    ReplyDelete
  3. மலையின் படம் என்னை மலைக்க வைத்தது.

    தொடரும்...

    ReplyDelete
  4. //இரவு ஏகாந்த சேவை: சயன மண்டபத்தில் இந்த சேவை நடைபெற்று நைவேத்தியமாக அம்மாவாரி பாயசம் படைப்பர்.//

    இந்த ஏகாந்த [சயன] சேவையில் தரப்படும்
    பாயாஸம் சாப்பிட்டால் நம் ஆயாஸம் தீருமோ? ;)

    தொடரும்....

    ReplyDelete
  5. //மேலே கூறியவை நித்தியசேவை. இது தவிர பக்தர்களின் வேண்டுகோளுக்காக நிறைய சேவைகள், மற்றும் உற்சவ சேவைகள் உண்டு.//

    ஆஹா! உங்கள் வலைத்தளத்தின் பக்தராகிய என் வேண்டுகோளுக்காக இதுபோன்ற பல ஆன்மிக சேவைகளைத் தாங்கள் தொடர வேண்டும் தாயே!

    அனைத்துப்படங்களும் அருமையோ அருமை.

    உலகெங்கும் பல கோயில்கள் இருந்தும் சில கோயில்களுக்கு மட்டுமே நம்மால் விருப்பத்துடன் தினமும் செல்ல முடிகிறது.

    நாம் பக்தியிலே ஒரேயடியாக மூழ்கி முத்தெடுக்க நினைத்தாலும், சில கோயில்களுக்குச் செல்ல நமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    அந்தக்குறையேதும் இல்லாமல் தடுத்தாட்கொள்ளும், தங்களின் வலைத்தளமும் புனிதமாகவே உள்ளது.

    இறைவன் எங்கும் இருக்கிறான் ... திருப்பதிக்குத் தான் செல்ல வேண்டுமா? என நினைத்து என்னை நானே கஷ்டப்பட்டு சமாதானம் செய்து கொண்டு விட்டேன், இப்போதெல்லாம்.

    தொடரட்டும் தங்களின் இந்த ஆன்மிகப் பணிகள்.

    மிகச்சிறப்பான இந்த இடுகைக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  6. “மலையப்பன் வேண்டுவோருக்கு வேண்டியது தரும் கருணைக்கடல்.”//

    கருணைக்கடல் படங்களும் அவர் நித்திய சேவைகளும் பார்க்க கேட்க ஆனந்தம் தான்.
    நன்றி.

    ReplyDelete
  7. ஆஹா... அருமை... அருமை...

    சிறப்பான பகிர்வு சகோதரி... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete