Pages

Saturday, October 13, 2012

பொற்சிலை



பொற்சிலை

     காண்போரை விழிமலரச் செய்யும் இந்திய கலைநுட்பங்களில் ஐம்பொன்னால் உருவாக்கப்படும் சிலைகளும் ஒன்று கும்பகோணத்திற்கு அருகே உள்ள சுவாமி மலயில் ஏராளமான ஐம்பொன் சிலைகளின் உற்பத்திக் கூடம் உள்ளது.
     இங்கு நுற்றுக் கணக்கான பாரம்பரியக் கலைஞர்கள் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிக வெப்பத்தில் கருமையான அதே சமயம் நுணுக்கமான தொழில் நுட்பமும் பணியாகும் இது. மேலும் விடாத ஆர்வமும், உழைப்பும், அர்பபணிப்பும் இந்த தொழிலுக்குத் தேவை. ஒரு ஐம்பொன் சிலையை செய்து முடிக்க கரு உருவாக்குவது தொடங்கி, கண் திறப்பது முடிய பல படிகளை கடக்க வேண்டும்.
     முதற்கட்டமாக மெழுகில்- ஒருவகை மரங்களில் உருகி வழியும் மெழுகில் (பாலக் காட்டு மெழுகு எனப் பெயர்) சமஅளவு குங்கிலயம் கலந்து உருக்கவேண்டும். கைக்குவாகாக வரும் இக்கலவையைக் கொண்டு விக்கிரத்தின் மாடலைச் செய்கிறார்கள்.
     பின் காவிரிக் கரையில் மட்டும் கிடைக்கும் வண்டல் மண்ணை வகைப்படுத்தி, அந்த மழுகு விக்கரகத்தின் மீது பூசி ‘மோல்ட் செய்ய வேண்டும். மோல்டின் கீழ் பகுதியில் சிறிய துளை முக்கியம். பின்பு அதை சாண எருவிராட்டி நிரம்பிய அடுப்பில் வைத்து நன்கு சூடாக்க வேண்டும். சூட்டில் மோல்டின் உள்ள மெழுக்கு கரைந்து துளையின் வழியே வெளியேறி விடும். ‘மோல்டு கூடு மட்டும் இருக்கும். பிறகு சிலையின் அளவுக் கேற்ப செம்பு 70 பங்கு, பித்தளை 20பங்கு ஈயம் 10 பங்கு மீதி வெள்ளி தங்கம் மதிப்பை பெறுத்து போட்டு மூசை என்னும் கரி அடுப்பில் அதிகபட்ச வெப்பதில் உருக்கி விராட்டி அடுப்பில் செக்கச் சிவந்து கிடைக்கும் மோல்டில் உள்ள சிறு துளையின் வழியாக கவனமாக ஊற்றவேண்டும்.
     பின்பு ஒரு நாள் கழித்து மோல்டை உடைத்தால் உள்ளே (‘அதற்கு கரு எனப் பெயர்) ஐம்பொன் சிலை பிசிறு தட்டி இருக்கும்.
    






























அதற்கு அடுத்த கட்டம் தான் கலை நுணுக்கத்தை வெளியே கொண்டுவரும் வேலை. அந்த சிலையை அரம், சீவாளி கொண்டு ராவி செதுக்கி, பின் நகாசு வேலை செய்து பளபளப்பாக்கி இறுதியில் சிலையின் கண்ணத் திறப்பார்கள் 




மேற் சொன்ன வேலைகளில் கடும் உழைப்பும், ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் புலனடக்கம் போன்றவையும் தேவை.

4 comments:

  1. அருமையான நுட்பமான திறனுள்ள சிலை செய்வது பற்றிய பகிர்க்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. மிகச்சிறப்பான பகிர்வு.
    படங்களும் அருமை.
    விளக்கங்களும் அழகு.

    நானும் இந்தக் கலைக்கூடத்தில் பல மணி நேரங்கள் தங்கி, அவர்களின் திறமைகளைக்கண்டு வியந்து மகிழ்ந்து வந்துள்ளேன்.

    அதுபோலவே கலைக்கூடம் ஸ்வாமிமலையில் உள்ளது.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  3. சிலையைத்தான் பார்க்கின்றோம் . சிலைக்குள் மறைந்திருக்கும் பலரின் அர்ப்பணிப்பும் வேலைப்பாடும் புரிவதில்லை . ஒரு சிலை வாங்கும்போது பலரின் பசி தீர்க்க உதவுகின்றோம் என்பது புரிவதில்லை அறிய தகவலைத் தந்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி. உங்கள் தேடல் தொடரட்டும் . வாழ்த்துகள்

    ReplyDelete
  4. உலோகத்தை உலையிலிட்டு உருக்கி
    சிலையை வடிக்கிறார்கள்
    நாமெல்லாம் அவன்
    வடிவைக்கண்டு வணங்க

    அதற்க்கு பரிகாரமாக நம் போன்ற மனிதர்களை
    அந்த இறைவன் துன்ப குடத்திலிட்டு நம்மை கண்ணீர் வடிக்க செய்து நம் வினைகளை நீக்கி நம்மை
    தூயவன் ஆக்குகிறான்
    படங்கள் அருமை
    பாராட்டுக்கள்

    ReplyDelete