திருப்பதிக்கு அருகில் உள்ள கோவில்கள்.
பொதுவாக
திருப்பதி செல்பவர்கள் திருமலை சென்று திருவேங்கடவனை தரிசித்த பின்
திரும்பிவிடுவார்கள். கீழ்திருப்பதியிலும் தரிசிக்க வெண்டிய கோவில்கள் அனேகம்
இருக்கிறது. அவைகளில் முக்கியமாக தரிசிக்க வேண்டியது :
ஸ்ரீகோதண்டராமர்
கோவில்:- கோதண்டம் ஏந்திய ஸ்ரீராமர், சீதை லச்சுமணன் சகிதமாக திருமலைக்கு
எழுந்தருளியதாக வரலாறு. திருப்பதியின்
நடுப்பக்குதியில் உள்ளது.
ஸ்ரீவெங்கடேஸ்வர
ஸ்வாமி கோவில்:- ஸ்ரீநிவாச மங்காபுரம்
திருப்பதியில் இருந்து 10.கி.மீ.
தொலைவு.
ஸ்ரீவேத
நாராயண ஸ்வாமி கோவில்:- சென்னை-திருப்பதி வழியில் நாகலாபுரத்தில் உள்ளது.
இங்கு சுதர்ஸன சக்கரத்தை பிரயோகிக்கும் நிலையில் பெருமாள் ஏந்தியுள்ளார்.
ஸ்ரீகோவிந்தவரர்
சன்னதி:- இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீவாரி உற்சவங்கள் இங்கும்
நடைபெறுகின்றது
ஸ்ரீபத்மாவதி
தாயார் திருச்சானூர்:- திருமலையில் இருந்து 3. கி.மீ. தூரத்தில் உள்ளது கார்த்திகை
பிரம்மோற்சவம் மிகவும் விஷேம். அன்று திருமலையில் இருந்து உரிய மரியாதைகளுடன்
பட்டுப்புடவை, குங்குமம், புஷ்பம், மாலைகள் அம்மாகாருக்கு வந்து சேரும்.
ஸ்ரீகல்யாண
வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில்:- பத்மாவதி தாயார், பாலாஜி சகிதம் நின்ற கோலத்தில்
காட்சி தருகிறார். திருமலையில் இருந்து 3. கி.மீ. தூரம். இக்கோயில் ஐந்து
கோயில்களை தன்னகத்தே கொண்டது.
கபிலேஸ்வர
ஸ்வாமி கோயில்:- திருப்பதியில் உள்ள ஒரே ஒரு சிவன் கோயில் அடிவாரத்தில் இருந்து 3.கி.மீ.
கபில தீர்த்தம் விஷேசம். ஏழுமலை பிரசித்தி பெற்ற ஸ்தலம். இத்துடன் இந்த ஏழு
கோயில்களையும் தரிசிக்கலாம்.
suruttapalli |
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete
ReplyDeleteதிருப்பதிக்கு நான் 1987 ல் சென்றதே ஒரு miracle .
2001 ல் ஓய்வு பெற்றபின்னும் கூட போகவேண்டும் என்று நினைக்கிறேன்.
இயலவில்லை. அவன் அருள் இருந்தால் தான் கிட்டும்.
உங்கள் வலைப்பதிவுக்கு வந்தது
ஒரு இனிய தருணமாக அமைந்தது.
மிகவும் நன்றி.
சுப்பு ரத்தினம்.
மிக நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி
ReplyDeleteசிறந்த தொகுப்பு... மறுமுறை செல்லும் பொது உதவும்...
ReplyDeleteமிக்க நன்றி...
சிறப்பான படங்களுடன், அருமையான விளக்கங்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றியோ நன்றிகள்.
அன்புடன்
VGK
திருப்பதி போய் விட்டு நீங்கள் குறிபிட்டவற்றில் கோவிலில் இரண்டு கோவில் போய் இருக்கிறோம்.
ReplyDeleteநன்றி தகவலுக்கு.