பொதுவாக அனைத்து பண்டிகைகளும்
ஒரு நாள் விசேஷமாகச் கொண்டாடப்படும். ஆனால் சக்தி வழிபாடு மட்டும் நவராத்திரி என்று
ஒன்பது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நோக்கமே அக்கம் பக்கம் உள்ள அனைவர்களையும்
ஒரு இடத்தில் ஒன்று சேர்த்து ஒரு நல்ல புரிதலையும் ஒருவருக்கொருவர் மகிழ்வுடன் அளவளாவி
நட்பினை வளர்த்துக் கொள்வது தான். இதனால் தான் மற்ற தினங்களில் கோயில்களுக்கு வருபவர்களை
கவனித்தால், இறைவன் தரிசனத்திற்குப் பின் ஒரு இடத்தில் அமர்ந்து ஒருவருக்கொருவர் பேசி
மகிழ்வது தெரியவரும்! இது பழமையும் புதுமையும் கலந்து பரிமணிக்க வழி காட்டும் ஒரு
விழாவாகும்.
புரட்டாசி அம்மாவசைக்கு
பின் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது நவராத்திரி.
படைத்தல், காத்தல்,
அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட
அன்னையின் அருள் வேண்டி தொழுதலே நவராத்திரி வழிபாடு ஆகும்.
துர்க்கா, லட்சுமி,
சரஸ்வதி என மூன்று தேவிகளையும் மும்மூன்று
தினங்களில் வழிபடுவார்கள். பத்தாம் நாள் ராஜராஜேஸ்வரியை வழிபடுவார்கள்.
நவராத்திரி சமயத்தில் நட்பை ஏற்றுப் போற்றுதலும்
பக்தியை பெருகச் செய்தலுமே நவராத்திரி கொலுவின் முக்கிய நோக்கமாகும்.
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை...
ReplyDeleteநன்றி...
எல்லோருக்கும் என் இனிய நவராத்திரி நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைய பதிவு சிறப்பாகவே உள்ளது.
படங்கள் அத்தனையும் அழகு தான்.
எனக்கு மேலே உள்ள முதல் படமும்
கீழே அடியிலே ஜொலிக்கும் அதுவும் ரொம்ப ரொம்ப புடிச்சுப்போச்சு.
பாராட்டுக்கள்
வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
VGK