Pages

Monday, October 22, 2012

ஸ்ரீ ராஜ மாதங்கீ

-->
உலகில் நம் விவகாரங்களுக்கு முக்கியமானது பேச்சு. இதையே சப்தம், வாக்கு என்பார்கள். இவ்வாக்கிற்கு ஆதாரமான சக்திகளில் மாதங்கிதேவி முக்கியமானவள் 


.
மாதங்கிதேவி ஸ்ரீராஜராஜேஸ்வரிக்கு மந்திரி நிலையில் உள்ளவள். ஆகையால் மந்திரிணீ என்னும் பெயரில் அழைக்கப்படுகிறாள்


மந்திரியின் தயவினால் ராஜாவின் மகிழ்ச்சிக்குப்பாத்திரமாவது போல் மாதங்கியை நாடியவர்கள் ராஜராஜேஸ்வரியின் அருளை அடைவது திண்ணம்.
மாதங்கிதேவியால் செயல் படுத்த முடியாதது எதுவும் இல்லை.
வாக்கு வல்லமை, சக்தி, பிறரை தன் வசமாக்கிக் கொள்ளும் தன்மை, பயமற்ற நிலை
பதட்டமற்ற நிலை, வல்லமை,போன்றவை ஸ்ரீமாதங்கி அருளால் கிடைக்கும்.


வாக்வாதினீ, லகுலீ என்று மாதங்கிக்கு இரு தோழிகள். வாக்வாதினீ நம்மை திறம்பட பேசவைக்கும் சக்தி. நகுலீ பிரதிவாதியின் வாக்கு வன்மையை மயங்கும்படி செய்வதாகும்.



ஸ்ரீமாதங்கீ தேவி மரகதமணி போன்ற நிறத்தினையும், கையில் வீணையை மீட்டிய
 நிலையிலும் காட்சி தருவாள்.



-->
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்போது எளிதாய் நல்காய்
எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும்
-->
கல்விக் கண்ணை திறப்பவளே
கனிவுடன் கருணை சுரப்பவளே
சேவிப்பர் முன்னே வருபவளே

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
மேய உணர்விக்கு மென்னம்மை-தூய
உருப் பளிங்கு போல் இருப்பாள்
என் உள்ளத்துனுள்ளே இருக்க
இங்கு வாராது இடர்.

 


கலைமகள் நீயே! அலைமகள் நீயே!
அலைகடல் துயரில் தோணியும் நீயே
மலைமகள் நீயே! முதுமகள் நீயே!
தலைமகள் நீயே! தாயும் நீயே!
சங்கரி போற்றி சாம்பவி போற்றி
மற்றோர் பிறவி வரா வண்ணம்
காப்பாய் போற்றி

கல்வி [விவரம், நாளைவிஜயதசமியில்]

 


4 comments:

  1. //மந்திரியின் தயவினால் ராஜாவின் மகிழ்ச்சிக்குப்பாத்திரமாவது போல் மாதங்கியை நாடியவர்கள் ராஜராஜேஸ்வரியின் அருளை அடைவது திண்ணம்.//

    ஆஹா! மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் வரிகள்.

    //மாதங்கிதேவியால் செயல் படுத்த முடியாதது எதுவும் இல்லை.//

    அச்சா! பஹூத் அச்சா! நீங்களே மாதங்கிதேவிபோல எனக்கு இன்று காட்சியளிக்கிறீர்கள்.

    எப்படியாவது அந்த ஸ்ரீராஜராஜேஸ்வரியின் அருளை கிட்டச்செய்தால் சந்தோஷமே.

    அழகான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    விளக்கங்களும் அருமையோ அருமையே.
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  2. வாக்கு வல்லமை, சக்தி, பிறரை தன் வசமாக்கிக் கொள்ளும் தன்மை, பயமற்ற நிலை
    பதட்டமற்ற நிலை, வல்லமை,போன்றவை ஸ்ரீமாதங்கி அருளால் கிடைக்கும்.

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. அருமை... படமும் பகிர்வும் சிறப்பு...

    நன்றி...

    ReplyDelete
  4. படங்களும்
    விளக்கங்களும் அருமை
    பாராட்டுக்கள்

    ReplyDelete