இன்று மின் அஞ்சலைத் திறந்தால் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அன்பின்
சீனா அவர்கள் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க என் சம்மதம் கேட்டிருந்தார். ஒரு
கணம் ஆசிரியர் பொறுப்பேற்க மனது கிடந்து துடித்தாலும் கீழ்கண்ட காரணங்களினால்
தயக்கம் ஏற்பட்டது.
முதலில், ஒரு சில காரணத்தினால்
மாதத்திற்கு ஒரு ஜி.பி. அளவைத் தாண்டாமல் இணையத்தினை பயன் படுத்தி வருகிறேன்.
அடுத்து, கடவுளின் பூஉலக அவதாரம் போல் மின்சாரம் எப்பொழுது வரும், போகும் என்பதை
அறிய முடியவில்லை.
வீட்டின் பயன் பாட்டிற்கான யு.பி.எஸ்.
ல் கணணியை பயன் படுத்திய போது, கண்ணியின் பேக் அப் பேட்டரி அவுட். மேலும் என்
தம்பி மகன் ஆசையாக கொடுத்த 02 மாடல் (pockaet PC)ல் தான் படங்களை எடுத்து வந்தேன்.
அதன் சார்ஜர் மற்றும் பேட்டரி மின் அழுத்தம் காரணமாக அவுட். இவை இரண்டுமே எங்கு
தேடியும் கிடைக்கவில்லை. அட சார்ஜர் போனாலும் இப்பொழுது பேட்டரியை நேரடியாக வைத்து
சார்ஜ் செய்யும் ‘டச் அப்’ மாடல் கிடைக்கிறது.
ஆனால் அந்த செல்போனின் பேட்டரி மாடல்:- PH17B rating 3.7 VDC=1200M Ah- எங்கு தேடியும்
கிடைக்கவில்லை (அப்பா! தலைப்புக்கேற்ற காரணம் கிடைத்து விட்டது; இதனை குறிப்பிடுவதின்
நோக்கமே, இதனைப் பார்ப்பவர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்குமென்ற நம்பிக்கை தான்).
அடுத்து என் தயக்கத்திற்கு
முக்கிய காரணம், சமீபகாலமாகத் தான்
நல்லவர்கள் நாலு பேர்களின் தளத்தினைபார்த்து
[பார்க்க நாலு பேருக்கு நன்றி]
http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/09/blog-post_14.html -sept14th
என் எழுத்துக்களை பட்டை தீட்டி வருகிறேன்! ஒரளவு தெளிந்த தன்னம்பிக்கை பெற்றவுடன் ஆசிரியர் பொறுப்பேற்க விருப்பம் தெரிவிப்பதாக கூறி இருக்கிறேன்.
http://thamaraimalar-chandrasekar.blogspot.in/2012/09/blog-post_14.html -sept14th
என் எழுத்துக்களை பட்டை தீட்டி வருகிறேன்! ஒரளவு தெளிந்த தன்னம்பிக்கை பெற்றவுடன் ஆசிரியர் பொறுப்பேற்க விருப்பம் தெரிவிப்பதாக கூறி இருக்கிறேன்.
திரு.சீனா அவர்களின் மின் அஞ்சல் தகவலும் எனது பதிலையும் கீழே:
"வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற் க
அன்பின் சந்திர வம்சம்
அறிவது நலனே ! விழைவதும் அஃதே !
வலைச்சரம் பற்றி அறிந்திருக்கலாம்
15.10.2012 திங்கட்கிழமை மு தல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் அழைக்கிறேன்.
இணக்கம் தெரிவித்த பின் மேல் விபரம் அனுப்புகிறேன்.
உடன் பதில் மடல் அனுப்ப வேண்டுகிறேன்.
இந்தியாவில் இருந்தால் அலைபேசி எண் பகிர்ந்தால் தொடர்பினிற்கு உதவும்.
தொடர்புக்கு : 98406 24293
நல் வாழ்த்துகள்
நட்புடன் சீனா"
"அய்யா ,தங்களின் மின் அஞ்சல் கண்டேன். சமீபகாலமாகத்தான் தெரிந்தவரையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். இவ்வளவு பெரிய பொறுப்பு ஏற்க இன்னும் சிறிது கால அவகாசம் தேவை. தங்களின் அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி. அன்புடன் பத்மாசூரி."
மேலும் மின் தடங்கள் குறித்து என்ன சொல்வது? இருக்கும் நேரத்தைவிட இல்லாத
நேரம் தான் அதிகமாக இருக்கிறது. கடல் போன்ற பொறுமை வேண்டும் என்பார்கள். அந்தக்
கடலும் சமயத்தில் பொங்கிவிடுகிறது.
எனவே புத்தர் போதித்த கருத்து
படி நடக்க முயற்சிப்போம்.
“நாம் எப்போதும் ஆட்டைப்
பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் கண்களைப் பாருங்கள். என்ன துன்பம்
வந்தாலும் அதன் கண்களில் எந்த சலனமும் தெரியாது”.
உண்மையான காரணம்...
ReplyDeleteஇங்கேயும் அப்படித்தான் - Power Cut 13 hours to 16 Hours...
அருமையான பதிவு.
ReplyDeleteமின்தடை, மின் இணைப்புகள் இருந்தாலும் சமயத்தில் நெட் கிடைக்காமல் இருப்பது, பேட்டரி பிரச்சனை, சார்ஜர் பிரச்சனை, இன்வெட்டெர் பிரச்சனை என பல பிரச்சனைகளை நாம் சந்திக்கத்தான் வேண்டியுள்ளது.
இதே பிரச்சனைகளில் நானும் அடிக்கடி மாட்டுவதால் அதிகமான பதிவுகளுக்குச் செல்ல முடியாமல் உள்ளது.
வலைச்சர ஆசிரியராக வரும் 15.10.2012 முதல் இல்லாவிட்டாலும் கூட பிறகு எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
அதற்கான ஒருசில முக்கியத்தகவல்களையும், முன் ஏற்பாடுகளையும் உங்களுக்கு நான் சொல்கிறேன்.
தொடரும்.....
முதல் பின்னூட்டத்தில் தொடரும் போட்டேனா?
ReplyDeleteஅடுத்த பின்னூட்டத் தொடர்ச்சியை டைப் அடித்தேனா?
அதை அனுப்புவதற்குள் மின்தடையாகி எல்லாமே கோவிந்தா ஆகிவிட்டது.
மற்ற சில விஷயங்கள் பிறகு நாளை e-mail மூலம் தெரிவிக்கிறேன்.
VGK
வலைச்சர ஆசிரியர் பொறுப்பு தங்களைத் தேடி வந்துள்ளது கேட்க மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteதிறமையுள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு தேடிவருவது இயற்கையே. உங்களைத் தேடி வந்ததில் வியப்பு இல்லை தான்.
15.10.2012 இல்லாவிட்டாலும் பிறகு ஒரு நாள் தாங்கள் அந்த வாய்ப்பினை சுலபமாக ஏற்றுக்கொள்ளலாம். அதற்கான சுலபமான வழிமுறைகளை நான் உங்களுக்கு ஆலோசனைகளாக மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.
அதைத் தாங்கள் பொறுப்பேற்று செய்வதனால், உங்களைப்பற்றி மற்ற பலருக்கும், மற்ற பல பதிவர்களைப்பற்றி தங்களுக்கும் தெரியவரும்.
அட்வான்ஸ் வாழ்த்துகள்.
இப்போ மீண்டும் POWER CUT ஏற்படலாம். அதனால் மற்றவை நாளை மெயில் மூலமாக அனுப்புகிறேன்.
அன்புடன்
VGK
இயன்ற போது வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க வாழ்த்துகள் !
ReplyDeleteஆட்டின் கண் ஏன் சலனமில்லாமல் இருக்கிறது தெரியுமா?
ReplyDeleteஅதற்க்கு ஏற்கெனவே நன்றாக தெரியும்
தன்னை வயிற்று குழிக்குள் தள்ளுவதர்க்காகத்தான்
மனிதர்கள் வளர்க்கிறார்கள் என்று
அதனால் அதை எதிர்கொள்ள சலனமில்லாமல்
இருக்கிறது வேறொன்றுமில்லை
ஆனால் மனிதனால் அவ்வாறு இருக்க முடியாது