‘கொஞ்சம் வைத்துக் கொண்டு அதில் அதிக நிறைவைக் காண்பவனே எல்லாம் உடையவன்’ என்பது ஞானிகளின் வாக்கு’. அனைவரும் இதை அறிந்துள்ளோம். ஆனால் தேவைக்கு அதிகமாக சேர்த்து முடிவில் மனநிம்மதி இழக்கிறோம்.
இதோ பாரீஸின் புற நகர்ப்பகுதியில் உள்ளது வெர்சைல்ஸ் (versailles) என்னும் இடம் இங்கு பிரெஞ்சு மன்னர்கள் வாழ்ந்த வெர்சைல்ஸ் அரண்மனையைக் கண்டால் கண்களை இமைக்க மறந்து விடுவோம்.
பிரெஞ்சு அரசர்கள் வேட்டைக்குச் செல்லும் போது தங்கி ஓய்வு எடுக்க கட்டப்பட்டது இது.
இந்த அரண்மனையை கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆனது. இந்த அரண்மனையின் நீளம் 500 மீட்டர், 19000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அரண்மனையை சூழ்ந்திருக்கும் தோட்டங்கள் மட்டும் 1800 ஏக்கர். எங்கும் ஏராளமான நீர் ஊற்றுக்கள், சிலைகள், கலைவண்ணமிக்க சிற்பங்கள், பூத்துக் குலுங்கும் மலர்கள்
என சொர்க்கலோகம் போல் இருக்கும்.
அரண்மனையின் உள்ளே ஒவ்வொரு இடமும் அக்கால அரசர்களின் ஆடம்பர வாழ்வை சுட்டிக் காட்டுகிறது. உள்ளே இருக்கும் ‘கண்ணாடி ஹால்” ஸ்தம்பிக்க வைக்கிறது. பிரம்மாண்டமான ஜன்னல்கள் தோட்டத்தை பார்க்க வசதியாக கட்டப்பட்டுள்ளது. தோட்டத்தின் அழகை 17 வளைவுகளில் பதிக்கப்பட்ட 357 கண்ணாடிகள் பிரதிபலிக்கின்றன. அறையின் சீலிங்கில் தொங்கும் 17 பெரிய சாண்டிலியர்கள் மற்றும் சிறிய சாண்டிலியர் விளக்குகளில் ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகளை ஏற்றலாம்.
இத்தனை மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் அந்த பெரிய ஹாலின் தோற்றம் பிரமிக்கவைக்கும். கம்பளங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்கள் போன்றவற்றையும், பிற்காலத்தில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகளையும் பார்க்கும் போது, அறிஞர்கள் கூறியது தான் நினைவுக்கு வருகிறது.
‘இருப்பதைக் கொண்டு அதில் நிறைவைக் காண்பவனே எல்லாம் உடையவன்’
நன்றி ----சாந்த
குமாரி சிவகடாட்சம் {குமுதம் சினேகிதி}
அருமையான பிரும்மாண்டமான அழகிய படங்களுடன் மிகவும் அற்புதமான விளக்கங்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
தொடரும்.....
//இருப்பதைக் கொண்டு அதில் நிறைவைக் காண்பவனே எல்லாம் உடையவன்’//
ReplyDeleteஅழகோ அழகான பொன்மொழி ! ;)
தொடரும்....
‘இருப்பதைக் கொண்டு அதில் நிறைவைக் காண்பவனே எல்லாம் உடையவன்’
ReplyDelete//‘கொஞ்சம் வைத்துக் கொண்டு அதில் அதிக நிறைவைக் காண்பவனே எல்லாம் உடையவன்’ என்பது ஞானிகளின் வாக்கு’. அனைவரும் இதை அறிந்துள்ளோம். ஆனால் தேவைக்கு அதிகமாக சேர்த்து முடிவில் மனநிம்மதி இழக்கிறோம்.//
ReplyDeleteநிறைவான நீதிக்கருத்தினைச் சொல்லும் பதிவு.
”ஆடியடங்கும் வாழ்க்கையடா ....
ஆறடி நிலமே சொந்தமடா ......”
என்ற பாடல் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
கடைசியில் காட்டியுள்ள ஓரிரு படங்கள் மட்டும் திறக்காமல் உள்ளன.
காட்டியுள்ள மற்ற அனைத்தும் வெகு அற்புதமான அழகான படங்கள் தான்.
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
அன்புடன்
VGK
இருப்பதைக் கொண்டு அதில் நிறைவைக் காண்பவனே எல்லாம் உடையவன்//
ReplyDeleteஅருமையாக சொன்னீர்கள்.
படங்கள் எல்லாம் அழகு.
பகிர்வுக்கு நன்றி.
இப்போது எல்லாப்படங்களுமே தெரிகின்றன.
ReplyDeleteஎல்லாமே சூப்பர் மேடம்.
பகிர்வுக்கு நன்றிகள்.
VGK
மிக்க நன்றி !
Deleteபிரமிக்க வைக்கும் படங்கள்...
ReplyDeleteமுடிவில் உண்மையான கருத்து...
நன்றி...
(பதினோராவது படம் வரவில்லை-கவனிக்கவும்)
சரிசெய்துவிட்டேன். தகவலுக்கு நன்றி.
Deleteபடங்களும் தகவலும் அருமையாக உள்ளது
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி! பிடியுங்க பூங்கொத்து!
Delete[im]http://3.bp.blogspot.com/-B0hIYzNpL-g/TzEgL4jAP5I/AAAAAAAACf4/_ppnfDd35tk/s320/flower5.jpg[/im]