-->
-->
-->
-->
-->
ஒவ்வொரு ஆண்டும் 'நரகாசுரன் இறந்த தினத்தை' அவ்வசுரன் வேண்டுகோள்படி தீமைகள் அழிந்த தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.
தீபாவளி என்பது வாழ்வு ஒளிமயமாக விளங்கட்டும் என்ற கருத்தில் தீபங்களை ஏற்றி வழிபடும் ஒரு மங்களகரமான நிகழ்வு.
பலவருடங்களுக்கு முன் இவ்விழாவன்று வெடிகள், பட்டாசுகள் என்பது இல்லை. உண்மையில் பட்டாசு என்பது சீனாவில் இருந்து இறக்குமதியான ஒன்றாகும். அதனாலேயே அதற்கு 'சீனவெடி' என்று பெயர்.
அக்காலத்தில் பண்டிகையன்று இரவில் கொழுந்தி என்ற மரக்குச்சிகளை நுனியில் எரியவிட்டு வேகமாக சுற்றுவார்கள் அப்பொழுது தீப்பொறி பூக்களாக சொரியும். இது சிறிதும் ஆபத்தில்லாதது. ஆனால் இன்றோ? குழந்தைத் தொழிலாளர்கள் பல்கிப் பெருகும் ஒரு களமாக இத்தொழில் ஆகிவிட்டது.
பூவாகச்சிதறும் சட்டி வானத்திற்கு மருந்து அடைத்து அடியில் மண் பூசுவதற்கு ஒரு சட்டிவானத்திற்கு அந்த சிறுவன் வெறும் கூலி வெறும் சில பைசாக்கள்தான். கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் அளவில் விற்கப்படும் 1000 வாலா வெடிச்சரத்தின் அடக்கவிலை வெறும் 200 ரூபாய்தான்.
பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் கந்தகத்தில் கருக, நாம் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை நிமிட மகிழ்ச்சிக்காக கரியாக்க இடையில் இருப்பவர்கள் கொழுக்கவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் பழக்கம் வந்தது.
ஊரில் யாரேனும் இறந்தால் வெடிக்கப்படும் பட்டாசு இந்தத் தொழிலாளர்கள் மரணிப்பதற்காகவே வெடிக்கிறது.
-->
எனவே ஆபத்தான இந்தத் தொழிலில் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்காமல் தடுக்க நம்மால் முடிந்ததை வரும் தீபாவளியன்று செய்வோம். ஆம்! தீபதிருநாளில் தீபங்கள் ஏற்றி மட்டும் கொண்டாடுவோம்.
விடை கொடுப்போம் வெடிக்கு.
தீபதிருநாளில் தீபங்கள் ஏற்றி மட்டும் கொண்டாடுவோம்.
ReplyDeleteவிடை கொடுப்போம் வெடிக்கு.
ஆக்கபூர்வமான கருத்துக்குப் பாராட்டுக்கள்..
கருத்துக்கள் அருமை
ReplyDeleteகருத்துக்களோடு இணைக்கப்பட்ட படங்களும் அருமை.
தீபாவளி குறித்து 17.10.2009.லேயே நான் ஒரு பதிவை இட்டுள்ளேன் கீழ்கண்ட இணைப்பில் காண வேண்டுகிறேன்.
http://nizhalnijam.blogspot.in/2009/10/blog-post_
நடந்த சம்பவத்தை நினைத்தால் யாரும் பட்டாசையே வாங்க மாட்டார்கள்...
ReplyDeleteசிறப்பு பகிர்வுக்கு நன்றி...
புதிய template நல்லா இருக்கு... இந்த Followers Widget மட்டும் சிறிது சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்... (படம் மேல் வருகிறது)
தங்களின் கருதுக்கு நன்றி. தெரிந்தவரை சரி செய்திருக்கிறேன்.
Deleteநன்றியுடன் ,
பத்மாசூரி.
முதல் படத்தில் காட்டியுள்ள குட்டிக்குட்டி அகல் விளக்குகளின் அணிவகுப்பு அருமையாக உள்ளது.
ReplyDeleteமுத்துக்கள் போல ஒளிவீசி மகிழ்விக்கின்றன.
......
கடைசி படத்தில் உள்ள ஐந்து தீபங்களும் அழகோ அழகு தான்.
ReplyDeleteஆனாலும் அடியிலே ஓலைப்பாயை அல்லவா விரித்துள்ளார்கள்.
திடீரென தீப்பற்றிக்கொண்டால் ஆபத்து ஆகுமே!
எனக்கு ஒரே விசாரமாக உள்ளதுங்கோ.
இரண்டாவது படத்தில் பூவானம் [கலசம்] பூமழை பொழிவதுபோல ஜோராக உள்ளதுங்கோ.
ReplyDeleteநான்காவது படமும் நல்ல அழகு.
ஆறாவது படம் அட்டகாசம். சூப்பரான காட்சி.
சமையலில் கடுகு தாளித்தது போல ஆனால் கலர் கலராக ;)))))
.....
//தீபதிருநாளில் தீபங்கள் ஏற்றி மட்டும் கொண்டாடுவோம்.
ReplyDeleteவிடை கொடுப்போம் வெடிக்கு.
ஆக்கபூர்வமான கருத்துக்குப் பாராட்டுக்கள்..//
அதே அதே !
ஏதோ நம்மால் முடிந்ததை நாம் செய்ய முயற்சிப்போம்.
இதன் பின்னணியில் கோடி கோடியாக கோடிக்கணக்கான பணமும், பல்வேறு இதர விஷயங்களும் அடங்கியுள்ளன.
பல ஏழை மக்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கியுள்ளது.
முற்றிலும் இதைத் தடுப்பது என்பது இனி இயலாததோர் விஷயமே.
நல்ல பகிர்வு. சந்தோஷம். பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிக்ள்.
இனிய தீபாவளி அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்.
அன்புடன்
VGK
தங்களின் பதிவிற்கு முதல் முறை வருகை தந்தேன்.அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நன்றி
ReplyDeleteமுதல் வருகைக்கு மிக்க நன்றி. உங்களுக்கு மலர்க்கொத்து காத்திருக்கு எனது
Delete"மாதேஸ்வரன் மதுரையில்" வாழ்க. பத்மாசூரி.