நவராத்திரி நாயகிகளில் மூலவரின்
பெயர்களையும் கொண்டவர்தான் ஸ்ரீகீர்த்திமதி
ஸ்ரீ என்றால் லட்சுமி
கீர்த்தி என்றால் துர்கை
மதி என்றால் சரஸ்வதி
காஞ்சீபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் வழியில் கருவேப்பம்பூண்டி
என்ற ஸ்தலத்தில் நெல், கரும்பு வயல்கள் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் முப்பெரும்
தேவிகளும் அதிசயமான முறையில் காட்சி தருகிறார்கள்.
நவராத்திரி சமயத்தில் நட்பை
ஏற்றுப் போற்றுதலும் பக்தியை பெருகச் செய்தலுமே நவராத்திரி கொலுவின் முக்கிய
நோக்கமாகும்.
(இந்நாட்களில்
அஷ்டலட்சுமியரும் *மகாலஷ்மியுடன் இணைந்து நவ வடிவினராக தரிசனம் அளிப்பர். ஆதிலட்சுமி,
சந்தானலட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி,
வித்யாலட்சுமி, மகாலட்சுமி)
நவராத்திரியின்
ஒன்பது தினங்களும் நல்லவர்களைக்காக்க தீயவர்களை அழித்த எல்லாம் வல்ல
மகிஷாசுரமர்த்தினியின் பாதம் பணிந்து அன்னையின் அம்சங்களான தேவிகளை வழிபடுதல்
வேண்டும்.
அருள வேண்டும் தாயே
அங்கயற்கண்ணி நீயே
எனக்கு..
...................................
பொருளும் புகழும் பொருந்தி
வாழ
பூமியில் நான் கலையில்
சிறந்து வாழ . . .. அருள வேண்டும்
தாயே
கலைகள் கற்கவும் கற்பனை
செய்யவும்
காலம் கடாவாமல் கருத்தை
திருத்தவும்
உலகிலே நல்ல உண்மைகள்
பேசவும்
உன்னை நினைக்கவும் உயர்வாக
வாழவும்.. ............அருள வேண்டும் தாயே
அனைத்து சக்திகளுக்கும் ஆதார சக்தியான பராசக்தி, ஸ்ரீகீர்த்திமதி அன்னை என்னும் திருப்பெயர் கொண்டு பெரிய கண்ணாடி மாளிகையில் பத்மாசனம் இட்டு அருள்பாலிக்கிறாள.. அன்னையின் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteகருவேப்பம்பூண்டி ஆலயத்தின் சிறப்புக்கள்...
ReplyDeleteஇதுவரை சென்றதாக ஞாபகம் இல்லை...
நன்றி...
ஸ்ரீ என்றால் லட்சுமி
ReplyDeleteகீர்த்தி என்றால் துர்கை
மதி என்றால் சரஸ்வதி
ஆஹா!
அருமையான விளக்கம்.
அழகான படங்கள்
அற்புதமான கட்டுரை.
பாராட்டுக்கள்
வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
VGK