சரஸ்வதி
பூஜை-ஆயுத பூஜை
-->
நமது அறிவைப் பெருக்கி, பல
கலைகளை வளர்த்து நாம் உபயோகிக்கும் பொருட்களை பாதுகாப்புடன் காப்பாற்ற
புத்தகங்கள், இசைக் கருவிகள், ஆயுதங்கள், வாகனங்களுக்கு பூஜை செய்து கலைமகள் அருள
வேண்டும் நன்னாள்
ஸ்ரீ ஸரஸ்வதி
துதி:
தேவி ஜெகன்மாதா ஜெய ஜெய
தேவி ஜெகன்மாதா
தேவி ஜெகன்மாதா ஜெய ஜெய
தேவி ஜெகன்மாதா
பொன்னிளம் காலையிலே-மென்
பூமணம்
பொங்கும் நன் நேரத்திலே-பல
வண்ணப் பறவைகளும் பொற்
ஜோதியை
வாழ்த்திடும் போதினிலே-நான்
என்னை மறந்திருந்தேன்-இயற்கையின்
இன்பத்தி
லாழ்ந்திருந்தேன்-எழில்
அன்னத்தில் ஏறி
வந்தாள்-ஸரஸ்வதி
ஆதிலக்ஷ்மி அலைமகளே
சரணமம்மா-இந்த
அகிலமெல்லாம் கோருவதுன்
கருணையம்மா
மாதர்களின் மனம் நிறைந்த
தெய்வமம்மா
துர்க்கை
துதி பாடி போற்றிடுவோம்
எந்த நாளுமே
ஸ்ரீ துர்க்கை அன்னை அருள்
என்றும் எம்மையாளுமே
அழகு அழகு எங்கள்
அம்மா-பார்க்க வாருங்கள்
பழக பழக பக்தி
பெருகும்-பாடவாருங்கள்
சரணம் சரணம் துர்க்கையம்மா
சரணம் சரணமே
பாட்டு பாடி போற்றி
நின்றால் இன்பம் பெருகும்-அந்த
பாடும் பாட்டை கேட்டு
நின்றால் உள்ளம் உருகுமே
கேட்டவுடன் கேட்ட வரம்
கொடுத்திடும் அன்னை
அவள் கோட்டை ஏறி துதித்து
நின்றால் துன்பங்கள் இல்லை
அழகு
அழகு.............................
வேற்காட்டில் கருமாரி நீ
அல்லவா
வேதம் புகழும் கண்ணபுர
தாயல்லவா
மதுரையிலே உன் நல்லாட்சி
புகழை சொல்லவா
மாகாளி ஸ்ரீ தேவி எம்மை
காக்கவா
அழகு
அழகு...................
ராகுதேவன் பூஜை ஏற்கும்
எங்களின் தாயே
ராகுகாலம் நாடி வந்தோம்
காத்திடுவாயே
அபிஷேகம் அலங்காரம்
யாவையும் உனக்கே
அன்னை உந்தன் அருள் மட்டும்
வழங்கிடு எமக்கே
அழகு அழகு
..............................
சின்னஞ்சிறு பெண்போலே
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ
துர்க்கை சிரித்திருப்பாள்
பெண்ணவளின் கண் அழகை பேசி
முடியாது
பேரழகுக்கு இணையாக
வேறொன்றும் கிடையாது.
மின்னலைப் போல் மேனி அன்னை
சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள்
எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் ஜடை போட்டு
பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக
நர்த்தனமும் ஆடிடுவாள்.
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ
வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
கல்வி [அஷ்ஷரப்பியாசம்-- விபரம் அடுத்த பதிவில்]
//மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
ReplyDeleteதேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்//
மிகவும் அற்புதமான பதிவு. அழகான படங்கள்.
தொடரும்....
//கல்வி [அஷ்ஷரப்பியாசம்-- விபரம் அடுத்த பதிவில்]//
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறோம்....மா!
இன்றைய கடைசி படத்திலேயே [சிம்பாலிக்காக] அதற்கான முத்திரையைப்பதித்துள்ளது சிறப்பாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் VGK
அருமை... அருமை...
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தாருக்கும் விழாக்கால வாழ்த்துக்கள் சகோதரி...
நன்றி...
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
ReplyDeleteதேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..