Pages

Thursday, October 25, 2012

காலம்... கலிகாலம்





-->
விஷ்ணுவின் 10 அவதாரங்களில் பத்தாவது அவதாரம் கல்கி அவதாரம். கலிபுருஷன் குதிரை வாகனத்தில் வருவார் என்பது புராணம்.
பாண்டவர்களின் வனவாசத்தின்போது,கலிபுருஷன் ஒரு குதிரை மீதமர்ந்து இவைகளுக்கு அர்த்தம் என்ன என்று கேட்டான்.




குதிரைக்காரன் (கலிபுருஷன்) தருமரைப் பார்த்து கேட்ட நான்கு கேள்விகள்:
1.பெரிய கிணறுவிளிம்பில் காசு ஒன்று தொங்கியது. காசைப் பற்றியபடி பெரிய மலை ஒன்று தொங்கியது. இத்தனை பளுவிலும் காசு கிணற்றில் விழவில்லை.
தருமர்:-  கலிகாலம் வந்து விட்டதின் அடையாளம் மக்கள் அறநெறியில் இருந்து விலகுவார்கள். சிறிய காசு அளவுக்கு தருமம் செய்வர். மலை அளவு பாவச் செயல்கள் செய்வர். காலப் போக்கில் சிறிய அளவு தர்மமும் நசிந்து போகும். அப்பொது மலை அளவு பாவச் சுமையை சுமந்த படி நரகத்தில் கிடந்து உழல்வர்.



2. ஐந்து கிணறுகள். நடுவில் ஒன்றும் சுற்றிலும் நான்கும் உள்ளன. நான்கு கிணற்றில் நீர் குறைந்தால் நடுவில் உள்ள கிணறு நீரை மற்ற கிணற்றிற்கு அளிக்கும் ஆனால் நடுவில் உள்ள கிணறு நீர் குறைந்தால் மற்றவை நீர் தராது.
தருமர்:- நடுவில் உள்ள கிணறு தந்தை. நான்கும் மகன்கள், மகன்களை பாடு
பட்டு வளர்ப்பார் தந்தை. ஆனால் தந்தை தளர் உற்றதும் மகன்கள் உதாசீனப்
படுத்துவர். –கலிகாலம்
3. பசுமாடு, கன்றிடம் பால் குடிக்கும் ?
தருமர்:- பெற்றோர் செய்யும் இழி செயல் குழுந்தையை வைத்து பணம் சம்பாதிப்பர்.
4. விசித்திர மிருகம், இழி சொல் கூறுகிறது. மலதுவாரம் வழியே உணவு உட் கொண்டது?
தருமர்:- தர்மத்தின் வேர் அறுபடும். புரட்சி, முற்போக்கு சிந்தனை என பேசி ஏமாற்றுவர் வேதியர் ஒழுக்க நெறியில் இருந்து தவறுவர். அரசர் வேதவித்தகர்களை இகழ்ந்து பேசுவர்.    கலிவந்தது !


நமது முன்னோர் தீர்க்கதரிசிகள். இக்காலத்தில் நடைமுறையில் உள்ளதை முன்பே கணித்திருக்கிறார்கள்.



7 comments:

  1. உங்களுக்கு
    அதில் என்ன சந்தேகம் ?

    ReplyDelete
  2. நமது முன்னோர் தீர்க்கதரிசிகள்.

    இக்காலத்தில் நடைமுறையில் உள்ளதை முன்பே கணித்திருக்கிறார்கள்.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. //நமது முன்னோர் தீர்க்கதரிசிகள். இக்காலத்தில் நடைமுறையில் உள்ளதை முன்பே கணித்திருக்கிறார்கள்.//

    ”கலிகாலம்” இன்னும் என்னென்ன நடக்குமோ???????

    நல்ல பகிர்வு, பாராட்டுக்கள். VGK

    ReplyDelete
  4. குதிரைப்படங்கள் எல்லாமே ஹை ஹை [HIGH] ஜோர் ஜோர்! ;)

    ReplyDelete
  5. விளக்கம் அருமை...

    படங்கள் சூப்பரோ சூப்பர்...

    ReplyDelete
  6. குதித்து குதித்து
    ஓடுவதால்தான் அது குதிரை

    அன்று குதிரையாக இருந்தது இன்று
    வண்டியாக உருமாரி தரையில் ஓடுகிறது
    படகாக மாறிதண்ணீரில் மிதந்து ஓடுகிறது
    வானூர்தியாகி விண்ணில் பறக்கிறது

    ஆனால் நாம் நம் மன வானில்
    ஒரே இடத்திலேயே இருந்துகொண்டு
    குண்டு சட்டியில் குதிரை ஒட்டுகின்றோம்

    குதிரைகளில் இத்தனை வகைகளா!
    அழகோ அழகு.

    கலி கால மனிதர்கள்
    எல்லா காலத்திலும் உண்டு
    ஆனால் அவைகளை உடனுக்குடன்
    வெளிச்சம் போட்டு காட்ட
    இக்காலத்தில் உள்ளதுபோல
    ஊடகங்கள் இல்லை

    அதனால் அவைகள்
    வெளிச்சத்திற்கு வரவில்லை.

    ஆனால் அவைகள் எழுத்துக்களாகவும்
    கோயில்களில் சிலைகளாகவும்
    அருமையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
    என்பது உண்மை.

    பதிவுக்கு
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  7. குதித்து குதித்து
    ஓடுவதால்தான் அது குதிரை

    அன்று குதிரையாக இருந்தது இன்று
    வண்டியாக உருமாரி தரையில் ஓடுகிறது
    படகாக மாறிதண்ணீரில் மிதந்து ஓடுகிறது
    வானூர்தியாகி விண்ணில் பறக்கிறது

    ஆனால் நாம் நம் மன வானில்
    ஒரே இடத்திலேயே இருந்துகொண்டு
    குண்டு சட்டியில் குதிரை ஒட்டுகின்றோம்

    குதிரைகளில் இத்தனை வகைகளா!
    அழகோ அழகு.

    கலி கால மனிதர்கள்
    எல்லா காலத்திலும் உண்டு
    ஆனால் அவைகளை உடனுக்குடன்
    வெளிச்சம் போட்டு காட்ட
    இக்காலத்தில் உள்ளதுபோல
    ஊடகங்கள் இல்லை
    அதனால் அவைகள்
    வெளிச்சத்திற்கு வரவில்லை.
    ஆனால் அவைகள் எழுத்துக்களாகவும்
    கோயில்களில் சிலைகளாகவும்
    அருமையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
    என்பது உண்மை.

    பதிவுக்கு
    பாராட்டுக்கள்

    ReplyDelete