Pages

Sunday, October 7, 2012

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தரிசனம்!


ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தரிசனம்!

     வ்வொரு மனமும் விரும்புவது, மேன்மேலும் வளர்ச்சி என்பதைத் தான். பணம், சொத்து… என்று, எதை நினைத்தாலும், இன்னமும் வேண்டும் என்றுதான் விரும்புகிறது. அப்படிப்பட்ட விருப்பங்களில் ஏமாற்றம் எதிர்ப்பட்டால் திகைத்து தடுமாறுகிறது. அந்தத் தடுமாற்றத்தாலும் பயத்தாலும்,தவறுகளைச் செய்கிறது; துன்பங்களில் சிக்குண்டு தவிக்கிறது. இத்தகைய நிலைகளில் சிக்காமல், பக்தர்களை முறைப்படுத்துபவள்
                         ஸ்ரீராஜராஜேஸ்வரி.



மகாமேருவின் உச்சியில் சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரியாக வீற்றிருப்பவள் இவள்தான். லலிதா என்றும் திரிபுரசுந்தரி என்றும் கொண்டாடப்படுவள் இவளே. இவளுடைய சிறப்பைக் கூறுகின்ற துதி, ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம். அந்தத் துதியில் ‘ஆத்ம ஸ்வரூபிணி என்றே வர்ணிக்கப் படுகிறாள் அம்பிகை!



கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில், ராஜராஜேஸ்வரி நகரில் அமைந்திருக்கிறது, அன்னையின் திருக்கோயில். இங்கே ஞானாக்ஷி   ராஜராஜேஸ்வரி என்று கொண்டாடப்படுகிறாள் அம்பிகை. சுமார் ஆறடி உயரத்திருமேனியுடன் தரிசனம் தருகிறாள் தேவி. திராவிட கட்டடக் கலையை ஒட்டி அமைந்துள்ளது திருக்கோயில்!





இந்தத் திருக்கோயிலில், நவராத்திரி காலங்கள் மிகச் சிறப்பாககொண்டாடப் படுகின்றன. அந்தச் சமயத்தில் தேவி வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்கிறாள். அன்னபூரணி, கஜாலக்ஷ்மி என்று அன்னையின் திருக்கோலத்தைத் தரிசிக்கும்போது, இனம் புரியாத பரவசம் மேலிடுகிறது. இதைத் தவிர, ஸ்ரீசக்ர மகாமேருவுக்கும் இங்கே தனிக்கோயில் அமைந்துள்ளது, கூடுதல் சிறப்பு. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், சுதை வடிவங்கள், முகமண்டபம், அகன்ற பெரிய பிராகாரம் என்று விஸ்தாரமாகவும், அழகாகவும் அமைந்திருக்கிறது திருக் கோயில்.





























செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருந்திரளான பக்தர்கள் வரிசையில் நின்று அம்பிகையைத் தரிசிகிறார்கள். பிரம்மோத்ஸவமும், நவராத்திரியும் இங்கு நடைபெறும் பெருந்திருவிழாக்கள் என்றால் மிகையில்லை.

செல்லும் வழி: பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலை வழியில், பெங்களூரில் இருந்து சுமார், 1 கி.மீ. தொலைவில், ஆலயத்தின் முகப்பு வளைவைக் காணலாம்.


8 comments:

  1. ஞானாக்ஷி ராஜராஜேஸ்வரி என்று கொண்டாடப்படும் அருமையான ஆலயம் பலமுறைத்ரிசித்திருக்கிறோம்..

    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. //இத்தகைய நிலைகளில் சிக்காமல், பக்தர்களை முறைப்படுத்துபவள்
    ஸ்ரீராஜராஜேஸ்வரி.//

    அருமை. நீண்ட நாட்களுக்குப்பின் இந்த அம்பாளினை இங்கு தரிஸிக்க வைத்துள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    தொடரும்... VGK

    ReplyDelete
  3. //மகாமேருவின் உச்சியில் சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரியாக வீற்றிருப்பவள் இவள்தான்.

    லலிதா என்றும் திரிபுரசுந்தரி என்றும் கொண்டாடப்படுவள் இவளே.

    இவளுடைய சிறப்பைக் கூறுகின்ற துதி, ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்.

    அந்தத் துதியில் ‘ஆத்ம ஸ்வரூபிணி’ என்றே வர்ணிக்கப் படுகிறாள் அம்பிகை!//

    ’ஆத்ம ஸ்வரூபிணி’யாகிய ஸ்ரீஇராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு அடியேனின் அனந்த கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

    தொடரும்.... vgk

    ReplyDelete
  4. அனைத்துப்படங்களும் அழகோ அழகு! பாராட்டுக்கள்.
    மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    தொடரும்.... vgk

    ReplyDelete
  5. தாங்கள் வலைச்சர ஆசிரியர் பணியினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    அதற்கான சுலபமாக வழிமுறைகளை நான் தனியே மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன். நான் கொஞ்சம் மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதாலும், மின் தடை போன்ற தொல்லைகளாலும், யோசித்து, தங்களுக்குப் புரியும் வண்ணம் மெயில் எழுதி அனுப்ப நேரம் இல்லாமல் உள்ளது. எப்படியும் ஒரு நாள் அந்த மெயில் தங்களுக்கு வந்து சேரும்.

    இதற்கிடையில் இந்த வலைச்சர இணைப்புக்குச் செல்லுங்கள். அங்கு பின்னூட்டப்பகுதிக்குச் சென்று, அன்பின் சீனா ஐயாவுக்கு நான் எழுதிய கருத்துக்களையும், அவர் எனக்கு அளித்துள்ள பதில்களையும், அதற்கு நான் எழுதியுள்ள பதில்களையும் பொறுமையாகப் படியுங்கள்.

    அங்கும் நான் இதே ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளைப்பற்றி மேலும் விபரமாக எழுதியுள்ளேன்.

    இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/search?updated-max=2012-10-08T06:00:00%2B05:30

    என்றும் அன்புடன்,
    VGK

    ReplyDelete
  6. படங்கள் அருமை... ஐயாவின் கருத்தையும் அறிந்தேன்...

    நன்றி சகோதரி...

    ReplyDelete
  7. ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம். அந்தத் துதியில் ‘ஆத்ம ஸ்வரூபிணி’ என்றே வர்ணிக்கப் படுகிறாள் அம்பிகை!//

    ஆதம்ஸ்வரூபிணியின் படங்கள் அம்மனைப்பற்றிய செய்திகள் எல்லாம் அறிந்து சந்தோஷம்.
    நன்றி.

    ReplyDelete