படித்ததில்…. பிடித்தது
அன்பு நட்புகளுக்கு,
இது எனது 100வது பதிவு. இந்த அளவுக்கு நான்
வருவதற்கு நட்பு வட்டங்களின் இடைவிடாத ஆக்கபூர்வமான கருத்துரைகளே முழுமுதல்
காரணமாகும். அவர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்மான நன்றிகள்.
வாரிசு இல்லாவிட்டாலும் வாழ்க்கை இருக்கு
குழந்தைகள் இல்லாத வீடு, மலர்கள் இல்லாத
தோட்டத்துக்குச் சமம் என்பார்கள். சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அருந்ததி
பிரபாகரனின் வீட்டுக்குள் நுழைந்தால் முதலில் வரவேற்பதே மலர்கள் நிறைந்த அவர்களது
தோட்டம்தான்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற
பிரபாகரனுக்கும், அவரது மனைவி அருந்ததிக்கும் திருமணமாகி 32 வருடங்கள்
ஆகின்றனவாம். குழந்தை இல்லை. வாரிசு இல்லாத வருத்தத்தில் வாழ்கையின் மற்ற பக்கங்களை
அனுபவிக்க, நேசிக்கத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தமது அனுபத்தை அடிப்படையாகச்
கொண்டு, குழந்தையில்லாத தம்பதியருக்கான அமைப்பையும் [9840704104, 9445354795]
தொடங்கி, வாரிசு இல்லாதவர்களுக்கு வாழும் கலையைப் பயிற்றுவித்துக்
கொண்டிருக்கிறார்கள்
“தாய்மைதான் ஒரு பெண்ணை முழுமையாக்குது….குழந்தை இல்லாத வாழ்க்கை வெறுமையானதுன்னெல்லாம்
நம்ம சமுதாயத்தால் புரைபோடிப் போன நம்பிக்கைகள் நிறைய இருக்கு. கல்யாணமாகிப்
புகுந்த வீட்ல காலடி வைக்கிற பெண்ணை, அடுத்த மாசத்துலேருந்தே குழந்தைக்காக
காத்திக்கிறதும், எப்படியாவது கிடைச்சிடாதாங்கிற தேடல்ல
சிகிச்சைகளுக்கும்,சாமியாருகளுக்குமா காசைக் கொட்டிக் கொடுத்து, கடைசியிலே ஏமாந்து
நிற்கற கொடுமை இந்த விஞ்ஞான உலகத்துலயும் தொடர்ந்துக் கிட்டுத்தான் இருக்கு.
இன்னொரு பக்கம் குழந்தை இல்லையேங்கிற ஏக்கத்திலே தற்கொலை பண்ணிக்கிறதும்,
கணவருக்கு ரெண்டாவது கல்யாணம் நடக்கறதை சகிச்சுக்கிட்டு, இன்னும் விரக்தி
அதிகமாகிப் புழுங்கறதும் பரவலா நடந்திட்டிருக்கிறதைப் பார்க்கறோம். இதல்லாம்
அனாவசியம்…. சமுதாயமோ, உங்களைச் சுத்தியிருக்கிறவங்களோ நினைக்கிற மாதிரி, குழந்தை
மட்டுமே வாழ்க்கையில்லை. குழந்தை இருந்தா ஓ.கே. இல்லாவிட்டால் டபுள் ஓ.கேன்னு
வாழ்க்கையை ரசிக்கவும் நேசிக்கவும் கத்திக்கொடுக்கற நோக்கத்துல தொடங்கினதுதான்
“குழந்தையில்லாத தம்பதியருக்கான அமைப்பு’.
மாற்றுத்திறனாளிகளுக்கு அமைப்பு இருக்கு…. ஆனா, குழந்தையில்லாதவங்களுக்கு பரஸ்பரம்
உதவி செய்யவோ, மனசைப் பகிர்ந்துக்கவோ அப்படி எந்த அமைப்பும் இல்லை. குழந்தை
இல்லைங்கிறதை வெளில சொல்லிக்கிறதுக்கே ஒரு மனத்தடை இருக்கு. அந்த மாதிரி
தம்பதியருக்குத்தான் இந்த அமைப்பு. இதுவரை ஆயிரக்கணக்கான தம்பதிகளுக்கு கவுன்சலிங்
கொடுத்து, வாழ்கையை முழுசா வாழக் கத்துக் கொடுதிருக்கோம்…”-படபடவெனப் பேசுகிற அருந்ததி, இதே பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்.
“கல்யாணமாகி,
4 வருஷங்கள் குழந்தையை எதிபார்த்துக் காத்திட்டிருந்தோம். குழந்தை பிறக்க
வாய்ப்பில்லைன்னு உறுதியா தெரிஞ்சதும், ரெண்டுபேரும் ஓரே நேரத்துல பேசி, ஒரு
பக்குவத்துக்கு வந்தோம்.’இதுதான் யதார்த்தம்னு தெரிஞ்சிச்சு… இனி
உனக்கு நான்… எனக்கு நீ… இனி எந்தக் காலத்துலயும், நமக்கு பிள்ளைங்க
இல்லையேங்கிறதை நினைச்சு வருத்தப் படக்கூடாது’ ன்னு
எங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். நல்லவேளையா, எங்க ரெண்டு பேரு
குடும்பங்களும் இந்த விஷயத்துல ரொம்ப நாகரிகமா நடந்துகிட்டாங்க. குழந்தையை பத்தி
எங்கக்கிட்ட ஒரு வார்த்தைகூடப் பேசினதில்லை. பொதுவா குழந்தயில்லாத பொம்பிளைங்களை,
கல்யாணம், வளைகாப்பு மாதிரியான விசேஷங்கள்ல ஒதுக்கி வைக்கிறதுதான் நம்ம சமூகத்துல
நடக்குது. ஆனா, எங்க குடும்பம் அதுலயும் விதிவிலக்கு.’அவங்களுக்கு குழந்தை இல்லை… அவங்க ஏதாச்சும் நினைச்சு வருத்தப்பட்டுடக் கூடாது….அவங்களை
முதல்ல கூப்புடுங்க’ன்னு எப்போதும் எனக்குதான் முதல் மரியாதை
நடக்கும்.
ஆனா,எங்க குடும்பம் மாதி மத்தவங்களும் இருக்கறதில்லையே… குழந்தை
இல்லாததை ஏதோ பாவச் செயலா பார்க்கிறவங்கதான் அதிகம். புதுசா அறிமுகமாகிற ரெண்டு
பேருக்குள்ள,ரெண்டாவது கேள்வியே,’குழந்தைங்க இருக்காங்களா?’ என்பதுதான்.
குழந்தை இல்லாதவங்க மனசு அப்போ என்ன பாடுபடும்? இப்படி நிறைய பேரோட வலிகளையும்
வேதனைகளையும் பார்த்திருக்கோம்.
‘கொள்ளி போட வாரிசு வேணுமே’ங்கிறாங்க.
இன்னிக்கு முதியோர் இல்லங்கள இருக்கிறவங்கள்ல, குழந்தை இல்லாதவங்களைவிட, குழந்தைங்க
இருக்கிறவங்கதான் அதிகம். பெத்தவங்களை அனாதையா விடற பிள்ளைங்க, அவங்களோட கடைசி
காலத்துல கொள்ளிபோடக் கூட இப்பல்லாம் வர்றதில்லை. வெளிநாட்ல உட்கார்ந்துக்கிட்டு,
‘நாங்க வரணும்னு வெயிட் பண்ண வேணாம்.எல்லாத்தியும் முடிச்சிடுங்கன்னு சொல்ற காலம்
இது. குழந்தியில்லையேங்கிற துக்கத்து எங்ககிட்ட வர்றவங்களுக்கு இப்படிப் பல
விஷயங்களையும் சொல்லிதான், கவுன்சலிங்கை ஆரம்பிக்கிறோம்.20,25 வயசு வரைக்கும்
தனியாதான் இருக்கோம். குழந்தைங்கிற பந்தம், திடீர்னுதான் நம்ம வாழ்க்கைக்குள்ள
வருது. அதுவும் கூட நிரந்தரமா நம்ம கூடவே இருக்கிறதில்லை. அவங்களுக்கொரு
வாழ்க்கைன்னு வந்ததும், தனித்தனியா பிரிஞ்சுபோயிடறாங்க. இடையில் வந்துட்டு,
இடையிலயே பிரியற ஒரு உறவு இல்லையேன்னு ஏங்கறதுல அர்த்தமே இல்லை.
‘குழந்தை இல்லாட்டி என்ன… தத்து
எடுத்துக்க வேண்டியதுதானே’ன்னு சிலர் கேட்கலாம். கணவன் பக்கத்துலேருந்து எடுக்கிறதா, மனைவி
பக்கத்துலேருந்து எடுக்கிறதாங்கிறது முதல் குழப்பம். ரெண்டுமே வேண்டாம்னு தெரியாத
குழந்தையை எடுத்து வளர்ப்பாங்க. பெத்த பிள்ளைங்களே சொல்பேச்சு கேட்காத இந்தக்
காலத்துல, தத்துப்பிள்ளை கேட்கும்னு என்ன நிச்சயம்? அப்படி ஒரு வேளை எதிர்த்து பேசினாலோ,
வீட்டுக்கு அடங்காமப் போனாலோ,’ யாரோ பெத்த பிள்ளை தானே… அதான் அப்படிப்
போயிருச்சு’ன்னு
அனாவசியப்பேச்சு வரும். அந்த அனுபவம் இன்னும் வேதனையானது. பெற்றால்தான் உறவா என்ன?
எங்களுக்கு ரெண்டு பேர் குடும்பங்கள்லேருந்தும் பதினஞ்சுக்கும் மேலான குழந்தைங்க
இருக்காங்க…” அசத்தலாகச் சொல்கிற அருந்ததி, குழந்தையில்லாத தம்பதியருக்கு சில
ஆலோசனைகளையும் முன் வைக்கிறார்.
40 வயதுக்கு மேல் குழந்தைக்காகக்
காத்திருக்கிறது வேஸ்ட். அந்த உண்மையை ஏத்துக்கிறது கொஞ்சம் சிரமமானதாத்தான்
இருக்கும். ஆனா, முடிவு பண்ணின பிறகு, வாழ்க்கையை எதிர்கொள்றது சிம்பிள்.
உங்க எதிர்காலத்தைத் திட்டமிடுங்க.
‘அதான் குழந்தை, குட்டி இல்லையே…
யாருக்காக ஓடி ஓடி சம்பாதிக்கிறே… யாருக்கு சேர்த்து வைக்கிறே’ன்னு சமுதாயம்
பேசும். காதுல வாங்கிக்காதீங்க. ஏன்னா, கடைசி காலத்துல உங்க சொந்தக்காரங்களோ,
நண்பர்களோ உதவிக்கு வராத நேரத்துல பணம்தான் உங்களுக்கு ஒரே ரட்சகன்.
கூட்டத்துல
இருக்கிறபோது,உங்கக்கிட்ட குழந்தையைப் பத்தி யாராவது பேச்செடுத்தாங்கன்னா,கண்ணைக்
கசக்க வேண்டாம்.அதைப் பத்தி தொடர்ந்து பேசறதுல உங்களுக்கு விருப்பமில்லைங்கிறதை
தெளிவா, அதே நேரம் கோபப்படாம சொல்லிடுங்க.
‘குழந்தைங்கதான் இல்லையே….
அதான் ஒண்ணும் வாங்கிட்டு வரலை’ன்னு சொல்லிக் கிட்டு வீட்டுக்கு வரும்
விருந்தாளிகள் கிட்டயும், முதல் முறையே நீங்க யாருங்கிறதை தெளிவுப்படுத்திருங்க.
‘முடிஞ்சா, எங்களுக்கு என்ன தேவையோ அதை வாங்கிட்டு வாங்க, இல்லேனா சும்மா வாங்க”என்று சொன்னால் அது
அவர்களை யோசிக்க வைக்கும்.
உங்களுக்கு பிடித்த
வேலையில் கவனம் வையுங்க. அது பொழுதுபோக்காக இருக்கலாம், சமூக சேவையாகவும்
இருக்கலாம், தெரிந்தவர்களின் குழந்தைகளை நேசிப்பதாகவும் இருக்கலாம். நீங்க தரும்
அன்புக்கு ஈடா, அதே அன்பு திரும்பக்கிடைக்கும்.--- அதிதி.
குங்குமம் தோழி,
அக்டோபர் 2012 இதழ்.
********************************************************************************
அருமையான பதிவு
ReplyDeleteகாலத்திற்கேற்ப தேவையான பதிவு
தன்னை சுற்றியுள்ள பொறுப்பற்ற சமூகத்தின் மூடத்தனமான ஏச்சு பேச்சுக்களினால் மனம் வெதும்பி போலி மந்திரவாதிகளையும், போலி மருத்துவர்களையும்,நம்பி தாய்மை அடைவதற்காக செலவழிக்கும் லட்சக்கணக்கான ரூபாய்களை
ஏற்க்கெனவே இந்த உலகத்திற்கு வந்து வாழ வழியில்லாமல் தவிக்கும் அநாதை குழந்தைகளின் வாழ்விற்கு செலவிடலாம்.
குழந்தையில்லா தம்பதிகளின் மனம் நோக நடந்துகொள்ளும் மக்கள் மீது வன்கொடுமை சட்டம் பாயவேண்டும்
அப்போதுதான் அவர்கள் திருந்துவார்கள்
தங்கள் செயலுக்கு வருந்துவார்கள்.
பதிவிற்கு பாராட்டுக்கள்
நூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
ReplyDeleteதங்களின் வெற்றிகரமான 100 ஆவது பதிவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமீண்டும் வருவேன்......
>>>>>>>>>>>>>>>>>>>>>>
படங்களில் காட்டியுள்ள ரோஜாக்கள் அத்தனையும் அழகோ அழகு ... தங்களின் 100 பதிவுகள் போலவே.
ReplyDeleteமீண்டும் மீண்டும் வருவேன்.....
>>>>>>>>>
தாங்கள் படித்த அருமையானதொரு கட்டுரையை இங்கு இன்று எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.
ReplyDelete//20,25 வயசு வரைக்கும் தனியாதான் இருக்கோம்.
குழந்தைங்கிற பந்தம், திடீர்னுதான் நம்ம வாழ்க்கைக்குள்ள வருது.
அதுவும் கூட நிரந்தரமா நம்ம கூடவே இருக்கிறதில்லை.
அவங்களுக்கொரு வாழ்க்கைன்னு வந்ததும், தனித்தனியா பிரிஞ்சுபோயிடறாங்க.
இடையில் வந்துட்டு, இடையிலயே பிரியற ஒரு உறவு இல்லையேன்னு ஏங்கறதுல அர்த்தமே இல்லை.//
அருமையான மிகவும் யதார்த்தமான வரிகள்.
கணவன் மனைவி என்ற புனிதமான உன்னதமான எதையும் தங்கு தடையின்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய ஓர் உறவைத் தவிர எதுவும் நிரந்தரமில்லை என்பதைப் புரிந்து கொள்வோருக்கு என்றும் துயரமில்லை.
அந்த நிரந்தரமான உறவே சிலருக்கு துரதிஷ்டவசமாக நிரந்தரமில்லாமல் போய் விடுகிறது.
பிறகு பிள்ளையாவது .. குட்டியாவது?
எல்லாமே மாயம். உலகே மாயம்.
தொடரும் >>>>>>>>
தாங்கள் படித்த அருமையானதொரு கட்டுரையை இங்கு இன்று எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.
ReplyDelete//20,25 வயசு வரைக்கும் தனியாதான் இருக்கோம்.
குழந்தைங்கிற பந்தம், திடீர்னுதான் நம்ம வாழ்க்கைக்குள்ள வருது.
அதுவும் கூட நிரந்தரமா நம்ம கூடவே இருக்கிறதில்லை.
அவங்களுக்கொரு வாழ்க்கைன்னு வந்ததும், தனித்தனியா பிரிஞ்சுபோயிடறாங்க.
இடையில் வந்துட்டு, இடையிலயே பிரியற ஒரு உறவு இல்லையேன்னு ஏங்கறதுல அர்த்தமே இல்லை.//
அருமையான மிகவும் யதார்த்தமான வரிகள்.
கணவன் மனைவி என்ற புனிதமான உன்னதமான எதையும் தங்கு தடையின்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய ஓர் உறவைத் தவிர எதுவும் நிரந்தரமில்லை என்பதைப் புரிந்து கொள்வோருக்கு என்றும் துயரமில்லை.
அந்த நிரந்தரமான உறவே சிலருக்கு துரதிஷ்டவசமாக நிரந்தரமில்லாமல் போய் விடுகிறது.
பிறகு பிள்ளையாவது .. குட்டியாவது?
எல்லாமே மாயம். உலகே மாயம்.
தொடரும் >>>>>>>>
குழந்தை பாக்யம் இல்லாதவர்களின் ஏக்கத்தினையும்
ReplyDeleteஅவர்களுக்கு சமுதாயத்தால் கொடுக்கப்படும் தொந்தரவுகளையும், அதனால் அவர்களின் மனம் எவ்வளவு தூரம் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதையும் நான் என் பல படைப்புகளில் ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளேன்.
அதேபோல மகனோ மகளோ பிறந்து விட்டாலே நம் வாழ்க்கை இன்பமயமாக அமைந்து விடாது என்பதையும் என் ஒருசில படைப்புகளில் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
//குழந்தை மட்டுமே வாழ்க்கையில்லை. குழந்தை இருந்தா ஓ.கே. இல்லாவிட்டால் டபுள் ஓ.கேன்னு வாழ்க்கையை ரசிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்// ;)))))
எல்லாம் நல்லபடியாக அமைந்து நாம் நல்லபடியாக சந்தோஷமாக வாழ ஓர் கொடுப்பிணை வேண்டும், என்பதே யதார்த்தம்.
தொடரும்.....>>>>>>>
1]
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/01/1-of-2_13.html
நாவினால் சுட்ட வடு பகுதி 1 / 2
படியுங்கோ....
>>>>>>>>>>>>>>
2]
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/06/1-of-3.html
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!
படியுங்கோ......
>>>>>>>>>
3]
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/11/blog-post_11.html
தை வெள்ளிக்கிழமை
படியுங்கோ......
>>>>>>>>>
4]
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/04/1-1-of-6.html
”அஞ்சலை” பகுதி 1 / 6
படியுங்கோ......
>>>>>>>>>>
5]
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/08/blog-post_15.html
”இனி துயரம் இல்லை”
படியுங்கோ......
>>>>>>>>>>>
6]
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/06/1-of-3.html
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!
படியுங்கோ......
>>>>>>>>>
7]
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html
மழலைகள் உலகம் மகத்தானது.
படியுங்கோ......
>>>>>>>>>>>>>>>>
8]
ReplyDeleteமுக்கியமா இதையும் படியுங்கோ
http://gopu1949.blogspot.in/2011/10/15.html
நீ முன்னாலே போனா ... நா ..
பின்னாலே வாரேன் பகுதி 1 / 5
படித்தால் மட்டும் போதாதுங்கோ;
எல்லாவற்றிற்கும் கருத்து எழுதி அனுப்புங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
அப்போத்தான் நீங்க படிச்சீங்களா
இல்லையான்னு எனக்குத் தெரியுங்கோ.
அன்புள்ள,
VGK
-oOo-
ஐயா,
Deleteதாங்கள் குறிப்பிட்டுள்ள பதிவுகளில் ஒரு சில முன்பே படித்துள்ளேன்.
இருப்பினும் மீண்டும் ஒருமுறை அனைத்தினையும் படித்துவிட்டு மீண்டும் கருத்தினை பகிர்ந்து கொள்கிறேன்.
தங்கள் அன்புக்கு நன்றி.
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎந்த மாதிரி இந்த சமூகம் பேசுவார்கள் என்பதை சொல்லி, அதற்கு உண்டான தீர்வும் நன்றாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... நன்றி...
வைகோ ஐயா அவர்களின் சில இணைப்புகளையும் படிக்க வேண்டும்... அவருக்கும் நன்றி...
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎந்த மாதிரி இந்த சமூகம் பேசுவார்கள் என்பதை சொல்லி, அதற்கு உண்டான தீர்வும் நன்றாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... நன்றி...
வைகோ ஐயா அவர்களின் சில இணைப்புகளையும் படிக்க வேண்டும்... அவருக்கும் நன்றி...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள் . அடுத்துக் குழந்தை இல்லை என்று கலங்குவார் மற்றைய குழந்தைகளைத் தமது குழந்தைகளாகக் கருதினால் போதும். இக்கால நிலைகள் எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அவர்கள் அன்புக்கு ஈடாக அதே அன்பு கிடைக்கும் என்று சொல்லியிருக்கின்றீர்கள். அனைத்தும் சிறப்பு
ReplyDelete