Pages

Monday, October 29, 2012

சைவமும்... சமணமும்

மதுரைக்கு தென்கிழக்கில் உள்ளது தூத்துக்குடி மாவட்டம். இங்கு கோவில்பட்டி சங்கரன் கோவில் பாதையில் வருவது கழுகு மலை என்னும் சிற்றூர். ஊர் என்னவோ சிறு கிராமம்தான். ஆனால் ‘இது ஒரு சர்வதேச சுற்றுலாத்தலமாக’, ஐ.நா. சபையினால் சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 38 இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் விஷயம் உள்ளுர் மக்கள் கூட அறிந்திடாத ஒன்றாகும்.


        உள்ளுர் மக்களுக்கு இது ஒரு முருகன் கோவில், அவ்வளவுதான். ஆனால் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள வெட்டுவான் கோயிலும், மலையில் வரிசையாக செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும், கல்வெட்டுகளும் இந்த கழுகு மலைக்கு சர்வதேச அந்தஸ்தை அளித்துள்ளது.          ராமாயணத்தில் ஜடாயு என்னும் கழுகின் சகோதரர் இங்கு வணங்கி வழிபட்டதால் கழுகுமலை எனப் பெயர். மயில் மீது அமர்ந்திருக்கும் முருகன் பெயர் கழுகாசலமூர்த்தி.


        சுமார் 300 அடி உயரமுள்ள மலையில், 30 அடி தூரத்திற்கு மலை குடையப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது முருகன் கருவறை. முருகனுக்கு இடப்பக்கம் மயில் தோற்றமளிப்பது அபூர்வக்காட்சி.


          கோயிலின் அருகில், பளிங்கு போன்ற நீர் நிறைந்த தெப்பக்குளம். குளத்தின் அடியில் ‘காக்காப்பொன்’ என்ற உலோகத்துகள்களால் நீர் படு சுத்தமாக உள்ளது.

          மலையின் உச்சியில் இருந்து சிறிதுசிறிதாக செதுக்கி உண்டாக்கப்படும் குடைவரை கோயில்களில், வடக்கில் எல்லோரா குகைக் கோயிலைப் போல் இங்கும் இருப்பதால் இது தென் இந்தியாவின் எல்லோரா என்ற சிறப்புச் பெற்றது.

        பாண்டிய மன்னன் காலத்தில் ஒரே கல்லில் சுமார் 8மீட்டர் ஆழத்தில் சதுரமாக செதுக்கப்பட்ட இக்கோயில் கோபுரத்தில் பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் காட்சி அளிக்கின்றனர்.


சமண மதம் தழைத்திருந்த கால கட்டத்தில் இங்கு சமணர்களால் செதுக்கப்பட்ட புத்தபிரானின் திரு உருவங்கள் ஏராளமாக வரிசையாக காட்சி அளிகின்றன.


          மலையைக் குடைந்தது; ஒரே கல்லில் மேலிருந்து கீழாக கோபுரத்தை செதுக்கியது; மலை முழுவதும் சிற்பங்களைச் செதுக்கியது போன்ற காரணத்தினால் இது சர்வதேச் சுற்றுலா பெருமையைப் பெறுகிறது. இங்கும் திருவண்ணாமலையில் உள்ளதுபோல்  கிரிவலம் பெளர்ணமியில் நடக்கிறது.


          மதுரை பக்கம் சுற்றுலா வந்தால் ஒரு எட்டு கழுகுமலையையும் தரிசிக்கலாம்.
          மதுரை-விருதுநகர்-கழுகுமலை-சங்கரன் கோயில்-திருநெல்வேலி-குற்றாலம்-ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை என்று வலம் வரலாம்.

12 comments:

 1. தகவல்களும்படங்களும் அருமை
  பாராட்டுக்கள்

  ReplyDelete
 2. சர்வதேச சுற்றுலாத்தளம் பற்றி அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_30.html

  கழுகுமலை கழுகாசலமூர்த்தி

  சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரை உலகறியச் செய்த அருமையும் இந்த கழுகாசல மூர்த்திக்கே சாரும். பாட்டுக்கொரு பாரதி இங்கு வந்து பாடியதும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதராலும், சங்கீத மும்மணிகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதராலும், கழுகுமலைப் பிள்ளைத் தமிழ் பாடிய சிதம்பரக் கவிராயராலும், நாடக உலகில் புகழ்பெற்ற எம்.ஆர். கோவிந்தசாமி அவர்களாலும், ஏனைய புலவர்களாலும் புகழ்பெற்றது கழுகுமலை

  ReplyDelete
 4. பலமுறை சென்றதுண்டு...

  படங்கள் மிகவும் அருமை...

  நன்றி...

  ReplyDelete
 5. கழுகுமலை பற்றிய மிக அருமையான புத்தம் புதிய தகவல்கள். ;)

  >>>>>>>

  ReplyDelete
 6. காட்டியுள்ள அனைத்துப்படங்களும், குறிப்பாக சிற்பங்களும் மிகச்சிறப்பாகவே உள்ளன ! ;)))))

  ReplyDelete
 7. // கோயிலின் அருகில், பளிங்கு போன்ற நீர் நிறைந்த தெப்பக்குளம். குளத்தின் அடியில் ‘காக்காப்பொன்’ என்ற உலோகத்துகள்களால் நீர் படு சுத்தமாக உள்ளது.//

  என் குழந்தைப்பருவத்தில், ஆரம்பப்பள்ளி படிக்கும்போது, இந்த “காக்காப்பொன்” என்னும் பொருளை ஒரு பையன் கொண்டுவந்து எங்களிடம் காட்டி, மிகவும் அலட்டிக்கொண்டான். வைரம் போல மின்னியது. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது. மகிழ்ச்சி. ;)))))

  >>>>>>>>

  ReplyDelete
 8. //‘இது ஒரு சர்வதேச சுற்றுலாத்தலமாக’, ஐ.நா. சபையினால் சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 38 இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் விஷயம் உள்ளுர் மக்கள் கூட அறிந்திடாத ஒன்றாகும்.//

  ஆஹா! உண்மையிலேயே தெரியாத ஓர் புது விஷயம் தான். சந்தோஷம்.

  என் பெரிய அக்காவின் பெரிய பிள்ளை TNEB இல் முதன் முதலாக சேர்ந்த போது, இதே கழுகுமலையில் தான் POSTING போட்டார்கள். அங்கு சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினான். அவனின் தாய் மாமாவாகிய என்னை, அங்கு ஒருமுறை வந்துபோகும்படி எவ்வளவோ அழைத்தான். ஆனால், என்னால் என் பணி நிமித்தமாக, அவ்விடம் சென்றுவர முடியாமலேயே போய்விட்டது.

  அந்த என் மனக்குறையை தாங்கள் இந்தப்பதிவின் மூலம் நிறைவேற்றிக்கொடுத்து விட்டீர்கள்.

  சந்தோஷம்...

  >>>>>>>>>>

  ReplyDelete
 9. அனைத்துப்படங்களும் அருமையோ அருமை. குறிப்பாக கீழிருந்து மூன்றாவது படமும், மேலே காட்டியுள்ள முதல் படமும் மிகவும் பிடித்துள்ளது.

  விளக்கங்களும் ஜோர் ஜோர்.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

  மொத்தத்தில் கலக்கிட்டீங்கோ ! ;)))))

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 10. பின்குறிப்பு:

  அன்று கழுகுமலையில் TNEB இல் வேலைபார்த்து வந்த என் பெரிய அக்காவின் மூத்த பிள்ளையே என் மூன்றாவது மகனுக்கு 2009 இல் மாமனாராகவும், எனக்கு மூன்றாவது சம்பந்தியுமாகவும் அமைந்தார்.

  அதாவது அன்று பெண்பார்க்கும் படலம் மட்டுமே முடிந்த நிலையில் இருந்த அவரின் பெண்ணுக்கே, இடையில் வந்த அவளின் பிறந்தநாளுக்காக, சுடிதார் வாங்க நான் போயிருந்தேன்.

  “சுடிதார் வாங்கப்போறேன்” படியுங்கோ

  இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html

  சுடிதார் வாங்கப்போறேன் பகுதி 1 / 3

  ReplyDelete
 11. அது புத்தர் சிலை அல்ல சமணர் மகாவீரர் உடையது..

  ReplyDelete
 12. அது புத்தர் சிலை அல்ல சமணர் மகாவீரர் உடையது..

  ReplyDelete