குகையில்
கோயில்கள் !
உடலுக்கு நன்மை தரும் பாதாம்
பருப்பு. அதுபோல் கர்நாடகாவில் உள்ள பாதாமி
என்னும் ஊரிலுள்ள குகைக் கோயில்கள் மனதிற்கு இன்பம் தரும்; மேலும் இது ஒரு
அமைதியான சுற்றுலாத் தலமும் கூட.
இது சாளுக்கிய வம்சத்தின் தலை
நகரமாக விளங்கிய காலத்தில், மலையைக் குடைந்து (மலையை வெட்டி அல்ல!) ஏராளமான
சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 1200 வருடங்கள் கடந்தும்
அழகுச் குறையாமல் இந்தக் குகைக் கோயில்கள் சிற்பங்கள் மிளிர்கின்றன.
பச்சை வண்ண பெரிய ஏரியும், அதில்
ததும்பி நிற்கும் தண்ணீரும், அதைச் சுற்றி அமைந்திருக்கும் சிவப்பு வண்ண
மலைகளையும் காணக் கண் கோடி வேண்டும்.
பாதாமி கோயில்கள் மூன்று
தலங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் தலத்தில், கணபதி, முருகன்,
சிவன் வீற்றிருக்க, அடுத்த தலத்தில் ஆதிசேஷன் மீது அமர்ந்திருக்கும் விஷ்ணு சிலை
கம்பீரமாக காட்சி அளிக்கிறது. (ஆதி சேஷன் மீது விஷ்ணு அமர்ந்த கோலம் மிகவும்
விசேஷமானது. காணக்கிடைக்காதது. படம் கீழே)
இத்தலத்தின் தூண்களிலும், மேல
விதானத்திலும் கலை அம்சமிக்க சிற்பங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது தலத்தில் புத்தர் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் பல்வேறு
விதங்களில் காட்சி தருகிறார். அருகே கல் கோபுரத்துடன் கூடிய கோயில், ஏரியை ஒட்டி
காட்சி அளிக்கும்.
இந்தக் கோயில் சைவ, வைணவ,
புத்தமத்தினை எடுத்துக் காட்டும் விதத்தில் உள்ளது. இந்த குகைக் கோயில்கள்
பெங்களூரு, ஹுப்ளிக்கு அருகில் பாதாமீ என்னும் சிறு கிராமத்தில் உள்ளன. நமது
பாரம்பரியத்தையும் கலையுணர்வையும் எடுத்துக் காட்டும். இது போன்ற இடங்களுக்கு
முடிந்தால் சுற்றுலாவாகச் செல்லலாம்.
பச்சை வண்ண பெரிய ஏரியும், அதில் ததும்பி நிற்கும் தண்ணீரும், அதைச் சுற்றி அமைந்திருக்கும் சிவப்பு வண்ண மலைகளையும் காணக் கண் கோடி வேண்டும்.
ReplyDeleteஅருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
நெய்யில் வறுத்த பாதாம் பருப்புகள் போன்ற ருசியான பதிவு. ;)
ReplyDeleteபடங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை.
தினம் ஒரு பதிவுக்குப் பாராட்டுக்கள்.
அன்புடன்
VGK
85 அல்லது 86ம் வருடம்
ReplyDeleteஇந்த இடத்திற்குச் சென்று நீங்கள் காட்டிய
பாசிக்குளத்தின் படிகள் வழியே இறங்கி
அந்த பாசியில் வழுக்கி விழ நேரிட்டு பின்
எப்படியோ சமாளித்து எழுந்து வந்தது நினைவுக்கு வந்தது.
என்னவோ தெரியவில்லை !
இந்த அற்புதமான குகை கோவில்களைப்
பராமரிக்காமல் இருந்தார்கள்.
இன்னமும் அப்படியே தான் இருக்கிறதா ?
சுப்பு ரத்தினம்.
சில அறியாத தகவல்கள்...
ReplyDeleteநன்றி...