உ
அம்பிகையின் ஆயிரம் திருநாமங்கள்
ஓம் ஸ்ரீமாத்ரே நம:
அருள் அன்னை
ஸ்ரீ மஹாராக்ஞ்யை
மாட்சிமை தங்கிய பேரரசி .
ஸ்ரீமத் ஸிம்ஹாஸனே ச்வர்யை
ஸிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பரதேவதை.
சிதக்னி குண்ட ஸம்பூதாயை
பேரறிவு என்னும் தீச்சுடரினின்று
தோன்றியவள்.
தேவகார்ய ஸமுதயதாயை
இந்திரியங்களைப் பண்படுதுதலில் கண்ணும்
கருத்துமாய் இருப்பவள்.
உத்யத்பானு ஸஹஸ்ராபாயை
எண்ணிக்கையிலடங்காத சூரியப் பிரகாசத்தை
உடையவள்.
சதுர்பாஹூ ஸமன்விதாயை
நான்கு கரங்களை உடையவள்.
ராகஸ்வரூப பாசாட்யாயை
பற்றுதல் என்னும் பாசத்தை
உடைத்திருப்பவள்
க்ரோதாகார அங்குச உஜ்ஜ்வலாயை
வெறுப்பு என்னும் அங்குசத்தை ஆயுதமாக
உடைத்திருப்பவள்.
மனோரூப இக்ஷூ கோதண்டாயை
மனோதத்துவம் என்னும் கரும்பை வில்லாகக்
கொண்டிருப்பவள்.
ஓம் பஞ்சதந்மாத்ர ஸாய காயை
ஐந்து இந்திரியங்களை அம்பாகக் கொண்டவள்.
நிஜாருண ப்ரபாபூரமஜ்ஜத் ப்ரஹ்மாண்டமண்டலாயை
அன்னை பராசக்தி சிவப்பு நிற வடிவினள்.
அத்தகைய சிவப்பு அண்டமெங்கும் வியாபித்திருக்கிறது.
சம்பக அசோக புந்நாக செளகந்திக
லஸத் கசாயை
சம்பகம், அசோகம், புன்னாகம், செளகந்திகம்
இவைகளின் புஷ்பங்களுடன் சோபிக்கிற கூந்தலை உடையவள்.
குருவிந்த மணிச்ரேணீ கனத்கோடீர
மண்டிதாயை
பத்மராக மணிகள் வரிசையாய்ப்
பதிக்கப்பட்டு ஒளி வீசும் அழகிய கிரீடத்தை அணிந்தவள்.
அஷ்டமீசந்த்ர விப்ராஜத் அலிகஸ்தல
சோபிதாயை
பாதி நிலாப் போன்ற அழகிய நெற்றியை
உடையவள்.
முகசந்த்ர கலங்காப மிருகநாபி
விசேஷகாயை
நிறைநிலாவில் கரும்படிவங்கள் தென்படுவதற்கு
நிகராக அன்னை பராசக்தியின் முக விலாசத்தில் கஸ்தூரித் திலகம் திகழ்கின்றது.
வதனஸ்மர மாங்கல்ய க்ருஹதோரண
சில்லிகாயை.
அன்னை புருவங்கள் மன்மதனுடைய வீட்டு
வாயிலில் கட்டப்பட்டிருக்கும் தோரணங்கள் போன்று கவர்ச்சிகரமாக இருக்கின்றன.
வக்த்ரலக்ஷ்மீ பரீவாஹசலன் மீனாபலோசனாயை
அன்னையின் அழகிய முகவிலாசம் என்னும்
தடாகத்தின் கண் விளையாடித்திரியும் மீன்களுக்கு நிகரான கண்களை உடையவள்.
நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட
விராஜிதாயை
அலரும் தறுவாயிலிருக்கும் அழகிய செண்பகப்
புஷ்பத்தை ஒத்திருக்கும் மூக்கை உடையவள்.
தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண
பாஸுராயை
நட்சத்திரங்களைத் தோற்கடிக்கவல்ல அழகிய
மூக்குத்தியை உடையவள்.
கதம்பமஞ்சரீ க்லுப்த கர்ணபூர
மனோஹராயை
அழகிய கடம்பப் புஷ்பத்தைக் காதில் அணிந்திருப்பவள்.
தாடங்கயுகலீபூத தபனோடுப மண்டலாயை.
சந்திரனையும், சூரியனையும் இரண்டு
காதுகளுக்குரிய தோடுகளாக அணிந்திருப்பவள்.
பத்மராக சிலாதர்ச பரிபாவி கபோலபுவே
பத்மராகத்தால் செய்யப்பட்டுள்ள
கண்ணாடிக்கு மிக்கதான அழகு வாய்ந்த கன்னத்தை உடையவள்.
நவவித்ரும பிம்பஸ்ரீ
ந்யக்காரிதசனச்சதாயை
புதிய பவளம், கோவைப்பழம் ஆகியவைகளுக்கு
மிக்கதான் சிவந்த உதடுகளை உடையவள்.
சுத்தவித்யாங் குராகார
த்விஜபங்க்தித்வய உஜ்ஜ்வலாயை
அன்னையின் பல்வரிசைகள் இரண்டும் சுத்த
ஞானம் முளைத்திருப்பது போன்று மிளிர்கின்றன.
கர்ப்பூரவீடிகா ஆமோதஸமாகர்ஷி
திகந்தராயை
அன்னை மெல்லும் தாம்பூலத்தினின்று
வருகின்ற நறுமணமானது பிரபஞ்சம் முழுதயும் கவரவல்லதாம்.
நிஜஸல்லப மாதுர்ய விநிர்பர்த்ஸித
கச்சப்யை 27
சரஸ்வதியின் வீணைக்குக் கச்சபி என்பது
பெயர். அத்தகைய வீணையையும் தோற்கடிக்கவல்ல இனிய குரலை உடையவள்.
மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்
காமேசமானஸாயை
அம்பிகையின் புன்சிரிப்பில்
வசப்பட்டவராகக் காமேசுவர சிவனார் அமைந்துள்ளார்.
அனாகலித ஸாத்ருச்ய சிபுகஸ்ரீ
விராஜிதாயை
வாக்தேவதைகள் உட்பட யாராலும் வர்ணிக்க
முடியாத முகவாய்க் கட்டின் அழகு படைத்திருப்பவள்.
காமேச பத்த மாங்கள்ய ஸுத்ரசோபித
கந்தராயை.
காமேசுவரம் கட்டிய மங்கலநாணுடன்
பிரகாசிக்கும் கழுத்தினள்.
கனகாங்கத கேயூர கமனீய புஜான்விதாயை
தங்கத் தோள்வளைகளை அணிந்திருப்பவள்.
ரத்ன க்ரைவேயசிந்தாக லோல முக்தாபல
அன்விதாயை
அசைகின்ற முத்துக்களுடன் கூடிய இரத்தினப்
பதக்கம் பொருந்திய அட்டிகை அணிந்தவள்.
காமேசுவர ப்ரேமரத்ன மணி ப்ரதிபண
ஸ்தன்யை
காமேசுவரருடைய உள்ளத்தைக் கவரவல்ல ஸ்தன
பாரங்களை உடையவள். 33
நாப்யாலவால ரோமாளி லதாபல
குசத்வய்யை
நாபி என்னும் பாத்தியிலிருந்து முளைத்து
மேலே வந்த கொடிக்கு நிகரான ரோமத்தினின்று பழுத்த கனி போன்ற இரண்டு ஸ்தன பாரங்களை உடையவள்.
லக்ஷ்யரோம லதா தாரதா ஸமுந்நேய
மத்யமாயை
மிக மெல்லிய இடையை உடையவள்.
ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த
வலித்ரயாயை
மூன்று மடிப்புக்களை வயிற்றில் உடையவள்.
அருணாருண கெளஸும்ப வஸ்த்ரபாஸ்வத்
க்டீதட்யை
சிவப்புப் பட்டாடையுடன் விளங்குகிற இடையை
உடையவள்.
ரத்னகிங்கிணிகா ரம்ய ரசனாதாம
பூஷிதாயை
இரத்தினச் சதங்கைகளோடு விளங்கும் ஒட்டியாணம்
அணிந்திருப்பவள்.
காமேசஞாத ஸெளபாக்ய மார்தவ ஊருத்வய
அவன்விதாயை
மேனியில் காமேசுவரருடைய செம்பாதி
மயமானவள்.
மாணிக்ய முகுடாகார ஜானுத்வய
விராஜிதாயை
மாணிக்க முகுடம் போன்ற முழந்தாள்களை
உடையவள்.
இந்த்ரகோப ப்ரிக்ஷிப்த ஸ்மரதூணாப
ஜங்கிகாயை
அம்பிகையின் முழங்கால்கள் மன்மதனுடைய
அம்பறாத் தூணி போன்று அழகிய வடிவுடையவையாம்.
கூடகுல்பாயை
உருண்டு திரண்டகுதிகளை உடையவள்
கூர்மப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதான்
விதாயை
ஆமையின் முதுகு போன்று வளைந்திருக்கும்
புறங்கால்களை உடையவள்.
நகதீதிதி ஸ்ங்சந்ந நமஜ்ஜன
தமோகுணாயை
தன்னை வணங்கும் பக்தர்கள் உள்ளத்தில்
அக்ஞான இருளைத் தன் கால் நகங்களில் உள்ள காந்தியால் அகற்றுபவள்.
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோரு ஹாயை
தாமடையினும் மிக்க அழகு வாய்ந்த பாதங்களை உடையவள். 45
ஸிஞ்ஜான மணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்பு ஜாயை
ஒலிக்கும் ரத்தினப் பரல்கள் கொண்ட சிலம்புகளை
அணிந்திருக்கும் அழகிய பாதங்களை உடையவள்.
மராளீ மந்தகமனாயை
அழகிய அன்ன நடை உடையவள்
மஹாலாவண்ய சேவதயே
அழகுக் களஞ்சியமாய் இருப்பவள்.
ஸர்வாருணாயை
ஆடை,ஆபரணம், உருவம் அனைத்திலும் சிவப்பு நிறமானவள்.
அனவத்யாங்க்யை
உடல் அமைப்புலும் உறுபுக்கள் அனைப்பிலும் குறைவில்லா
நிறைநிலை உடையவள்.
50
ஸர்வாபரண பூஷி தாயை
வித விதமான நகைகளை உடையவள்.
சிவகாமேச்வர அங்கஸ்தாயை
பிரபஞ்த்தைப் படைப்பதற்கு எண்ணம் கொண்ட காமேசுவரருடைய இடது
தொடையின் மீது அமர்ந்திருந்து அச்செயலுக்கு அவருக்குத் துணைபுரிகின்றவள்.
சிவாயை
சிவன் என்னும் சொல் மங்களத்தைக் குறிக்கிறது. அது பெண்பாலாக
வடிவெடுக்குமிடத்துச் சிவா அல்லது சிவை என்பதாம்
ஸ்வாதீன் வல்லபாயை
கருத்தில் அம்பிகைக்கும் சிவனாருக்கும் வேற்றுமையற்ற பண்பை
உடையவள்.
ஸுமேருமத்ய ச்ருங்கஸ்தாயை
மேருமலையின் சிகரத்தில் இருப்பவள்.
ஸ்ரீமந்நகர நாயிகாயை
ஸ்ரீ நகரம் என இயம்பப்பெறுகிற பிரபஞ்சத்துக்குத் தலைவியாக
இருப்பவள்.
சிந்தாமணி க்ருஹ அந்தஸ்தாயை
சிந்தாமணியில் இனிது விற்றிருப்பவள்..
பஞ்சப்ரம்மாஸன ஸ்திதாயை
சிருஷ்டிக் கர்த்தாவாகிய பிரம்மா,விஷ்ணு,ருத்திரன்,ஈசானன்,
சதாசிவம் ஆகிய
ஜந்து மூர்த்திகளைக் கொண்டு அமைந்துள்ள
ஆசனத்தின் கண் எழுந்தருளியிருப்பவள்.
மஹாபத்ம அடவீ ஸம்ஸ்தாயை
தாமரைக் காட்டில் நன்கு உறைந்திருப்பவள்.
கதம்பவன வாஸின்யை
கதம்பவனத்தில் வசிப்பவள்
ஸுதாஸாகர மத்யஸ்தாயை
அமிர்தக் கடலின் நடுவில் வீற்றிருக்கிறவள்
காமாக்ஷ்யை
கவர்ச்சிகரமான கண்பார்வை உடையவள்.
காமதாயின்யை
பக்தர்கள் விரும்புகிறதை எடுத்து வழங்குகிறவன்.
தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமான ஆத்மவை பவாயை
தேவர்களாலும் ரிஷிகளாலும் யாண்டும் போற்றிப்
பாராட்டப்படுபவள்.
பண்டாஸுர வதோத் யுக்த சக்திஸேனா ஸமன் விதாயை
பண்டாசுரனுடைய அழிவுக்கு ஏற்ற சேனைகளையாண்டும் ஆயுத்தமாக
வைத்திருக்கிறவள்.
ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துரவ்ரஜ ஸேவிதாயை
சம்பத்கரீ தேவதைகளால் ஆதரிக்கப்பட்ட யானைகளால்
போற்றப்படுபவள்.
அச்வாரூட அதிஷ்டிதா ச்வ கோடி கோடிபி: ஆவ்ருதாயை
அச்வாரூட தேவதையால் பரிபாலிக்கப்பட்ட எண்ணிக் கையிலடங்காத
குதிரைகளால் சூழப்பட்டிருப்பவள்.
சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதாயை
ஸ்ரீ சக்கரத்தின் மீது எல்லாவித ஆயுதங்களுடன்
வீற்றிருப்பவள்.
கேயசக்ர ரதாரூட மந்திரிணீ பரிஸேவிதாயை
கேயசக்கரம் என்னும் ரதத்தில் ஏறியிருக்கும் மந்த்ரிணீ
தேவியால் சேவிக்கப்பட்டவள்.
கிரிசக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதாயை
கிரிசக்கரம் என்னும் தேரில் ஏறியிருக்கும் த்ண்டநாதா அல்லது
வாராஹியால் வழி காட்டப்பட்டவள். 70
ஜ்வாலாமாலினிகா ஆக்ஷிப்த வஹ்னி ப்ராகார மத்யகாயை
ஜ்வாலாமாலினி சக்தியால் அமைக்கப்பட்ட அக்னிமண்டலத்தின்
மத்தியில் இருப்பவள்,
பண்டஸைன்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதாயை
பண்டாசுரனுடைய சேனைகளை அழிப்பதில் ஊக்கம் படைத்திருந்த
சக்தியிடம் மகிழ்வு கொண்டவள்.
நித்யாபராக்ரம ஆடோபநிரீக்ஷண ஸமுத்ஸுகாயை
நித்யா தேவதைகளின் வல்லமையைப் பார்ப்பதில் ஊக்கம்
படைத்திப்பவள்.
பண்டபுத்ர வதோத்யுக்த பாலாவிக்ரமநந்திதயை
தன் குழந்தையான பாலாதேவி பண்ட புத்திரர்களை அழிப்பதில்
காட்டிய பராக்கிரமத்தைப் பார்த்து மகிழ்ந்தவள்.
மந்த்ரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதாயை
மந்த்ரிணீ நிகழ்த்திய விஷங்க வதத்தைக் கண்டு மகிழ்ந்தவள்.
விசுக்ர ப்ராணஹரண வாராஹீவீர்ய நந்தி தாயை
விசுக்ரனை மாய்த்த வாராஹியின் பராக்கிரமத்தை மெச்சியவள்.
காமேச்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேச்வராயை
காமேசுவரருடைய முகத்தைத் தரிசித்ததன் விளைவாகக் கணேசனைத்
தோற்றுவித்தவள்.
மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷி தாயை
மஹா கணேசரால் விக்னம் என்கின்ற யந்திரம் பழுது பட்டுப்
போவதைப் பார்த்துப் பரம திருப்தியடைந்தவள்.
பண்டாஸுரேந்த்ர நிர்முக்த சஸ்த்ரப்ரத்யஸ்த்ர வர்ஷிண்யை
பண்டாசுரன் எய்த பாணங்களைப் பொழிந்தவள்.
கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருத்யை
நராயணனுடைய பத்து அவதாரங்களும் அம்பிகையினுடைய
நகக் கண்களினின்று தோன்றி வரும்படி செய்தவள். 80
மஹா பாசுபதாஸ்த்ரா க்னிநிர்தக்தாஸுர ஸைனிகாயை
மஹாபாசுபத அஸ்திரத்தால் அசுரப் படைகளைக் கொளுத்துபவள்.
காமேச்வராஸ்த்ர நிர்தக்தா ஸபண்டாஸுர சூன்ய காயை
காமேசுவர அஸ்திரத்தால் பண்டாசுரனை மாய்த்தவள்.
ப்ரம்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவஸம்ஸ்துத வைபவாயை
பிரம்மா, விஷ்ணூ,சிவன் ஆகிய தேவர்களால் போற்றப்பட்டவள்.
ஹரநேத்ராக்னிஸம்தக்த காமஸம்ஜீவன
ஓஷத்யை சிவனாருடைய நெற்றிக்கண்ணினால் சாம்பலாக்கப்பட்ட
மன்மதனுக்கு மறுபடியும் உயிர் கொடுத்தவள்.
ஸ்ரீமத்வாக்பவ கூடைகஸ்வரூப முகபங்கஜாயை
வாக்பவம் அல்லது வசீகரமான ஞான அறிகுறிகளோடு கூடிய முகத்தை
உடையவள்.
85
கண்டாத: கடிபர்யந்த
மத்ய கூட ஸ்வரூபிண்யை
அன்னை பராக்தியின் வடிவத்தில் கழுத்திலிருந்து இடுப்புவரை
உள்ள பகுதிக்கு மத்திய கூடம் என்று பெயர்.
சக்தி கூட ஏகதாபன்னகட்யதோ பாகதாரிண்யை
அன்னை பராசக்தியின் வடிவத்தில் இடுப்புக்குக் கீழ் இருக்கும்
பகுதிக்குச் சக்தி கூடம் என்று பெயர்.
மூலமந்த்ர ஆத்மிகாயை
மூலமந்த்ர மயமாயிருப்பவள்.
மூலகூடத்ரய கலேபராயை
மூலமந்த்ரத்தின் மூன்று கூடங்களைச் ச்ரீரமாக உடையவள்.
குலாம்ருதஏக ரஸிகாயை
சஹஸ்ராரத்திலிருந்து வடிகின்ற அமிர்தத்தைப் பானம்
பண்ணுவதில் மகிழ்வடைகின்றவள்.
குலஸங்கேதபாலின்யை
குலத்தை ஒட்டிய அடிப்படைக் கோட்பாடுகளை முறையாகக் காப்பவள்.
குலாங்கனாயை
குலமாது ஒருத்திக்குரிய பண்புகளை நன்கு காப்பவள்.
குலாந்தஸ்தாயை
குலம் என்னும் திரிபுடியில் அறிவு மயமாயிருப்பவள்.
கெளலின்யை
சிவசக்தி மயமாயிருப்பவள்
குலயோகின்யை
குலத்தோடு நன்கு கூடியிருப்பவள்.
அகுலாயை
குணங்களுக் கெல்லாம் அதீத நிலையில் இருப்பவள்.
ஸமயாந்தஸ்தாயை
சமயத்தினுள் வீற்றிருப்பவள்.
ஸமயாசார தத்பராயை
சமய அனுஷ்டானத்தில் ஆழ்ந்து கருத்துச் செலுத்துகிறவள்.
மூலாதாரஏக நிலயாயை
மூலாதாரத்தை தன் முக்கியமான இருப்பிடமாகக் கொண்டிருப்பவள்.
ப்ரம்மக்ரந்தி விபேதின்யை
பிரம்மக் கிரந்தி முடிச்சை அவிழ்த்தெடுப்பவள் 100
மணிபூராந்த ருதிதாயை
மணிபூரம் என்னும் ஆதாரத்தில் எழுந்தருளியிருப்பவள்.
விஷ்ணுக்ரந்தி விபேத்ன்யை
விஷ்ணுமுடிச்சை உடைத்து அப்பால் செல்லுபவள்.
ஆக்ஞாசக்ர அந்த்ரால ஸ்தாயை
ஆக்ஞா சக்கரத்தின்கண் எழுந்தருளி யிருப்பவள்.
ருத்ரக்ரந்தி விபேதின்யை
ருத்ர முடிச்சைத் தாண்டி அப்பால் செல்பவள்.
ஸ்ஹஸ்ரார அம்புஜாரூடாயை
ஸஹஸ்ராரம் அல்லது ஆயிரம் இதழ்களை உடைய தாமரையிலே
எழுந்தருளியிருப்பவள்.
ஸுதாஸார அபிவர்ஷிண்யை
ஸுதா என்னும் அமிர்தத்தை ஸஹஸ்ராரத்தினின்று
பொழியும்படி செயிபவள்.
தடில்லதா ஸமருச்யை
மின்னல்கொடிபோன்று பிரகாசிக்கிறவள். மின்னல்
கொடிக்கு நிகரான சோபை உடையவள்.
ஷட்ச்க்ரோபரி ஸம்ஸ்திதாயை
ஆறு ஆதாரங்களுக்கும் மேலே ஏழாவது ஞான பூமியில்
சுயஞ் ஜோதி மயமாக வீற்றிருப்பவள். 108
மஹாஸக்த்யை
பேராற்றல் படைத்தவள்
குண்டலின்யை
மூன்றரை வட்டமிட்டிருக்கும் பாம்புபோன்று மூலா தாரத்தில்
இருக்கும் ஆத்ம சக்தி.
பிஸதந்து தனீயஸ்யை
தாமரை நூல் போன்று காட்சிக்கு எளிதில் அகப்படாதவள்.
பவான்யை
பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கவும் அதில் ஜீவர்களுக்கு உயிர்
கொடுக்கவும் வல்லவள்.
பாவனா கம்யாயை
பாவனையின் வாயிலாக அடையப் பெறுபவள்.
பவாரண்ய குடாரிகாயை
பிறவிப் பெருவனமாகிய காட்டை அழிக்கும்
கோடாரி போன்றவள்.
பத்ரப்ரியாயை
நல்லார்க்கு இனியவள்.
பத்ரமூர்த்யை
மங்களமான வடிவினள்.
பக்த ஸெளபாக்ய தாயின்யை
பக்தர்களுக்கு நலன்கள் யாவையும்
வழங்குபவள்.
பக்திப்ரியாயை
பக்தியில் பிரியமுள்ளவள்.
பக்தி கம்யாயை
பக்தி நெறியால் அடையப்படுபவள்
பக்தி வச்யாயை
பக்திக்கு வசமாகிறவள். 120
பயாபஹாயை
பயத்தைப் போக்குகிறவள்.
சாம்பவ்யை
இனிமையை நல்குபவள்.
சாரதா ஆராத்யாயை
சாரதையினால் ஆராதிக்கப்படுகிறவள்.
சர்வாண்யை
நில வடிவத்தில் இருப்பவள்.
சர்மதாயின்யை
இன்பத்தையும் பாதுகாப்பையும் நல்குபவள்
சாங்கர்யை
நன்மையைச் செய்பவள்
ஸ்ரீகர்யை
திருவை உருவாக்குகிறவள்
ஸாத்வ்யை
யாண்டும் பதிவிரதையாக இருப்பவள்.
சரச்சந்த்ர நிப ஆனனாயை
சரத்காலத்தில் முற்றிலும் தூயதாய்த்
திகழ்கிற சந்திரனுக்கு நிகரான முகத்தை உடையவள்.
சாதோதர்யை
மெல்லிய இடையை உடையவள். 130
சாந்திமத்யை
சாந்தமே உருவெடுத்தவள்
நிராதாராயை
புறப்பொருள் எதையும் தனக்கு ஆதாரமாக் தேட
வேண்டிய அவசியம்.
நிரஞ்சனாயை
மாசு படியாதவள்
நிர்லேபாயை
மேற்பூச்சு இல்லாதவள்
நிர்மலாயை
அழுக்குப் படியாதவள்
நித்யாயை
யாண்டும் இருந்தபடி இருப்பவள்.
நிராகாராயை
வடிவம் எடுக்காதவள்.
நிராகுலாயை
குழப்பமற்றவன்
நிர்குணாயை
குணங்களுக்கு அப்பாற்பட்டவள்.
நிஷ்களாயை
அவயவங்கள் அல்லது உறுப்புக்கள்
அமையப்பெறாதவள்.
சாந்தாயை
அமைதியே வடிவெடுத்தவள்.
நிஷ்காமாயை
காமம் அல்லது ஆசை ஏதும் இல்லாதவள்.
நிருபப்லவாயை
அழிவற்றவள்.
நித்யமுக்தாயை
யாண்டும் யாதொன்றிலும் கட்டுண்ணாது
இருப்பவள்.
நிர்விசாராயை
விகாரம் ஏதும் இல்லாதவள்.
நிஷ்ப்ரபஞ்சாயை
பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டவள்.
நிராச்ரயாயை
ஆச்ரயம் ஒன்றும் இல்லாதவள்
நித்ய சுத்தாயை
யாண்டும் சுத்தமாக இருப்பவள்.
நித்ய புத்தாயை
எப்பொழுதும் பேரறிவு சொரூபமாய்
இருப்பவள். 150
நிரவத்யாயை
அவத்யம் ஏதும் இல்லாதவள்
நிரந்தராயை
இடைவெளி இல்லாதவள்
நிஷ்காரணாயை
காரணம் இல்லாதவள்.
நிஷ்களங்காயை
குற்றம் இல்லாதவள்.
நிருபாதயே
உபாதி ஒன்றுமே இல்லாதவள்
நிரீச்வராயை
யாருடைய ஆளுகைக்கும் அடிமைப்படாதவள்.
நீராகாயை
ஆசை இல்லாதவள்.
ராகமதன்யை
பற்றுதலைப் போக்கடிக்கின்ற்வள்.
நிர்மதாயை
மதம் பிடியாதவள்
மதநாசின்யை
மத்த்தை ஒழித்துத் தள்ளுபவள்.
நிச்சிந்தாயை
கவலை இல்லாதவள். 160
நிரஹங்காராயை
அஹங்காரம் இல்லாதவள்.
நிமோஹாயை
மோஹம் அல்லது மயக்கம் கொள்ளாதவள்.
மோஹ நாசின்யை
மோஹத்தை அல்லது மயக்கத்தை அழிப்பவள்.
நிர்மமாயை
மமகாரம் இல்லாதவள்.
மமதாஹந்த்ர்யை
மமகாரத்தைப் போக்கடிப்பவள்.
நிஷ் பாபாயை
பாபம் ஒன்றும் இல்லாதவள்.
பாப நாசின்யை
பாபத்தைப் போக்கடிப்பவள்.
நிஷ்க்ரோதாயை
கோபம் இல்லாதவள்
க்ரோத சமன்யை
கோபத்தைத் துடைப்பவள்.
நிர்லோபாயை
உலோபம் இல்லாதவள். 170
லோப நாசின்யை
பக்தர்களிடத்து உலோபம் உருவெடுத்தால்
அதைத் துடைத்துத் தள்ளுபவள்.
நிஸ்ஸம்சயாயை
சந்தேகம் இல்லாதவள்.
ஸம்சயச்க்ந்யை
சம்சயத்தை அகற்ருபவள்.
நிர்பவாயை
பிறப்பில்லாதவள்.
பவ நாசின்யை
பிறவியைப் போக்கடிப்பவள்.
நிர்விகல்பாயை
விகல்பம் இல்லாதவள்.
நிராபாதாயை
துன்புறுத்த்ப்படாதவள்.
நிர்பேதாயை
பேதமில்லதவள்.
பேத நாசின்யை
அழிவில்லாதவள். 180
ம்ருத்யு மதன்யை
மரணத்தைத் துடைத்துத் தள்ளுபவள்.
நிஷ்க்ரியாயை
கிரியை அல்லது வினையொன்றும் இல்லாதவள்
நிஷ்பரிக்ரஹாயை
பொருள் படையாதவள்
நிஸ்துலாயை
ஒப்பில்லாதவள்
நீலசிகுராயை
நீலநிறமுள்ள கூந்தலையுடையவள்.
நிரபாயாயை
அபாயம் இல்லாதவள்.
நிரத்யயாயை
வரம்பு கடக்காதவள்.
துர்லபாயை
எளிதில் அடையப்பெறாதவள்
துர்கபாயை
அணுக முடியாதவள்.
துர்காயை
கடக்கமுடியாத பாங்கைப் படைத்தவள்.
துக்கஹந்த்ர்யை
துக்கத்தைப் போக்கடிக்கின்ற்வள்
சுகப்ரதாயை
சுகத்தைக் கொடுப்பவள்.
துஷ்டதூராயை
துஷ்டர்களால் அடையப் படாதவள்
துராசாரசமன்யை
துராசாரத்தைப் போக்குபவள்.
தோஷவர்ஜிதாயை
தோஷங்கள் இல்லாதவள்.
ஸர்வக்ஞாயை
நிறைஞானம் உடையவள்.
ஸாந்த்ர கருணாயை
அத்யந்தக் கருணை உடையவள்.
ஸமானாதிக வர்ஜிதாயை
தனக்கு ஒப்புயர்வில்லாதவள்.
ஸர்வசக்திமய்யை
எல்லாவிதமான மங்களங்களோடு கூடியவள். 200
ஸத்கதிப்ரதாயை
நல்லகதியைக் கொடுப்பவள்.
ஸர்வேச்வர்யை
எல்லார்க்கும் ஈஸ்வரி.
ஸர்வமய்யை
யாவுமாய் இருப்பவள்.
ஸர்வமந்த்ர ஸ்வரூபிண்யை
எல்லாமந்த்ரங்களின் வடிவங்களாக
இலங்குபவள்.
ஸர்வயந்த்ர ஆத்மிகாயை
எல்லவிதக் கருவிகளாக இருப்பவள். 205
ஸர்வதந்த்ர ரூபாயை
எல்லாவிதத் தந்த்ரங்களாக
அமைந்திருப்பவள்.
மனோன்மன்யை
மனதிலே உன்மனாயத்தை அல்லது உன் மனீ
பாவத்தைக் கொண்டிருப்பவள்
மஹாதேவ்யை
பெரியதில் எல்லாம் மிகப் பெரியதாய்
இருப்பவள்.
மஹாலக்ஷ்ம்யை
ஒப்புயர்வற்ற திருமகள். 210
ம்ருடப்ரியாயை
சிவனாருகுப் பிரியமானவள்.
மஹாரூபாயை
பெரிய வடிவத்துடன் இருப்பவள்.
மஹாபூஜ்யாயை
பெரிதும் போற்றப்படுவள்.
மஹாபாதக நாசின்யை
பெரும் கேடுகளையெல்லாம் போக்குபவள்.
மஹாமாயாயை
மகாமாயையாய் இருப்பவள்.
மஹாஸத்வாயை
மிகப்பெரிய சத்வத்தோடு கூடியிருப்பவள்.
மஹாசக்த்யை
அளப்பரிய வல்லமையை உடையவள்.
மஹாரத்யை
உயிர்களனைத்துக்கும் சுகத்தைக்
கொடுப்பவள்.
மஹைச்வர்யாயை
சகலவிதமான ஐசுவரித்துடன் கூடியிருப்பவள்.
மஹாவீர்யாயை
அளப்பரிய வீர்யத்துடன் கூடியிருப்பவள்.
மஹாபலாயை
மேலான வல்லமையைப் படைத்திருப்பவள்.
மஹாபுத்த்யை
பேரறிவு படைத்தவள்.
மஹாஸித்த்யை
மிகப் பெரிய ஸித்தி சொரூபிணியாய்
இருப்பவள்.
மஹாயோகேஸ்வர ஈச்வர்யை
அரும்பெரும் யோகேஸ்வர்களுக்கெல்லாம்
ஈஸ்வரியாக இருப்பவள். 225
மஹாதந்த்ராயை
அற்புதமான த்ந்த்ர சாஸ்திரங்களின்
வடிவினள்.
மஹாமந்த்ராயை
தந்த்ர சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள
சாதனங்களுக்கு ஏற்ற மந்த்ரங்களின்சொரூபமாக் இருப்பவள்.
மஹாயந்த்ராயை
அற்புதமான யந்த்ரங்கள் அல்லது சக்கரங்களின்
மயமாக இருப்பவள்.
மஹாசனாயை
அமர்வதற்கேற்ற பெரிய இடத்தை
அமைந்திருப்பவள்.
மஹாயாக க்ரம ஆராத்யாயை
பெரிய யாகத்தை முறையாகாச் செய்வதன் மூலம்
போற்றப்படுபவள்.
மஹாபைரவ பூஜிதாயை
மஹாபைரவரால் பூஜிக்கப்பெறுபவள்.
மஹேச்வர மஹாகல்ப மஹாதாண்டவ ஸாக்ஷிண்யை
மஹாகல்பம் என்று சொல்லப்படுகிற பெரும்
பிரளய காலத்தில் மகேச்வரர் புரிகிற மகாதாண்டவத்துக்கு ஸாக்ஷிணியாக இருப்பவள்.
மஹாகாமேசமஹிஷ்யை
மஹா காமேசனுடைய மஹிஷீ அல்லது பெண் கூறாய்
இருப்பவள்.
மஹாத்ரிபுரஸுந்தர்யை
பூரண அழகோடு விளங்கிக் கொண்டிருப்பவள்.
சது:ஷஷ்ட்யுபசார ஆட்யாயை
அறுபது நான்கு உபசாரங்களோடு
ஆராதிக்கப்படுபவள். 235
சது:ஷஷ்டி கலாமய்யை
அறுபது நான்கு கலைகள் மயமாக இலங்குபவள்.
மஹா சது: ஷஷ்டி கோடி யோகினீகண ஸேவிதாயை
மிகமிகத் திறமை வாய்ந்த அறுபத்து நான்கு கோடி யோகினீகளின் கூட்டங்கள்.
கூடி அவர்களால் சதா சேவிக்கப்படுபவள்.
மனுவித்யாயை
மனுவினால் அடையப்பெற்ற வித்தை வடிவினள்.
சந்த்ரவித்யாயை
சந்திரனால் உபாசிக்கப்பெற்ற வித்யா
வடிவினளாய் இருப்பவள்.
சந்த்ரமணடல மத்ய காயை
சந்திரமண்டலத்தின் மத்தியிலே
வீற்றிருப்பவள். 240
சாருரூபாயை
அழகிய வடிவத்தை உடையவள்.
சாருஹாஸாயை
அழகுய புன்சிரிப்பு உடையவள்.
சாருசந்த்ர கலாதராயை
அழகிய சந்திர கலையைத் தரித்துக்
கொண்டிருப்பவள்.
சராசர ஜகந்நாதாயை
ஜங்கமமாகவும் ஸ்தாவரமாகவும் இருக்கும்
ஜகத்துக்குத் தலைவியாக இருப்பவள்.
சக்ரராஜ நிகேதனாச்யை
சக்கரங்களுள் தலையானதாகிய ஸ்ரீ
சக்கரத்தில் வீற்றிருப்பவள்.
பார்வத்யை
பர்வதராஜனுடைய புதல்வி.
பத்மநயநாயை
தாமரைப் புஷ்பம் போன்ற கண்களை உடையவள்.
பத்மராக ஸமப்ரபாயை
பத்மராகம் என்கிற ரத்தினத்துக்கு ஒப்பான
பிரபை அல்லது ஒளியை உடையவள்.
பஞ்சப்ரேதாஸன ஆஸீனாயை
ஐந்து பிரேதங்களாலாகிய ஆசனத்தில்
வீற்றிருப்பவள்.
பஞ்சப்ரம்ம ஸ்வரூபிண்யை
ஐந்து மூர்த்திகளின் வடிவத்தில்
இருப்பவள். 250
சின்மய்யை
வாலறிவே வடிவெடுத்தவள்.
பரமான்ந்தாயை
பேரின்ப வடிவினள்.
விஞ்ஞானகன ரூபிண்யை
திரண்ட பேரறிவு வடிவினள்.
த்யான த்யாத்ரு த்யேய ரூபாயை
தியான ரூபமாகவும்,தியானம் பண்ணுபவன்
ரூபமாகவும் தியானத்துக்கு இலக்காக இருக்கும் பரவஸ்து ரூபமாகவும் இருப்பவள்.
தர்மாதர்ம விவர்ஜிதாயை
தர்மம், அதர்மம் ஆகிய இரண்டோடும்
சம்பந்தப் படாதவள். 255
விச்வரூபாயை
தோன்றியுள்ள அனைத்துமாய் இலங்குபவள்.
ஜாகரிண்யை
ஜாக்ரதாவஸ்தையிலிருக்கும் ஜீவாத்ம
மயமாயிருப்பவள்.
ஸ்வபந்த்யை
சொப்பனாவஸ்தை சொரூபமாயிருப்பவள்.
தைஜஸாத்மிகாயை
தைஜஸன் அல்லது ஹிரண்ய கர்ப்பன்
மயமாயிருப்பவள்
ஸுப்தாயை
சுஷுப்தி அவஸ்தையிலிருப்பவள்.
ப்ராக்ஞாத்மிகாயை
ஈசுவரியாக இருப்பவள்.
துர்யாயை
துரிய ஸ்வரூபகாயிருப்பவள்
ஸர்வாவஸ்தா விவர்ஜிதாயை
அவஸ்தைகள் அனைதுக்கும் அப்பாற்பட்டவள்.
ஸ்ருஷ்டிகர்த்ர்யை
படைத்தல் என்னும் கிருத்தியத்தைச்
செய்பவள்.
ப்ரம்மரூபாயை
சிருஷ்டி கர்த்தாவாகிய நான் முகப்
பிரம்மாவின் வடிவத்தில் இருப்பவள்.
கோப்த்ர்யை
காப்பாற்றுவள்.
கோவிந்த ரூபிண்யை
கோவிந்தன் அல்லது விஷ்ணு ரூபமாக
இருப்பவள்.
ஸம்ஹாரிண்யை
துடைத்துத்தள்ளுபவள்.
ருத்ரரூபாயை
ருத்ரனுடைய வடிவத்திலிருப்பவள்.
திரோதானகர்யை
மறைத்து வைத்திருப்பவள். 270
ஈச்வர்யை
ஈசுவரன் மயமாய் இருப்பவள்.
ஸதாசிவாயை
ஸதாசிவனார் சொரூபமாக இருப்பவள்
அனுக்ரஹதாயை
அனுக்ரஹத்தைக் கொடுப்பவள்.
பஞ்சக்ருத்ய பராயணாயை
ஐம்பெரும் தொழில்களில் கண்ணும்
கருத்துமாயிருப்பவள்.
பானுமண்டல மத்யஸ்தயை
சூரிய மண்டலத்தின் நடுவிலிருப்பவள்
பைரவ்யை
பைரவருடைய பத்தினியாகப் பொலிபவள்.
பசுமாலின்யை
பசும் என்னும் தெய்விகத்தை மாலையாகக்
கொண்டிருப்பவள்.
பத்மாஸனாயை
பத்மத்தை ஆசனமாகக் கொண்டிருப்பவள்.
பகவத்யை
பகம் அல்லது தெய்விக மகிமை ஆறுக்கும் அதிஷ்டான தெய்வமாக இருப்பவள்.
பத்மநாப
ஸஹோதர்யை
பத்மநாபன் அல்லது விஷ்ணூவுடன்
பிறந்தவள். 280
உன்மேஷ நிமிஷ உத்பந்த விபன்ன புவனாவல்யை
கண்களைத் திறப்பதாலும்,மூடுவதாலும்
பிரபஞ்சத்துக்கு உற்பத்தியையும் ஒடுக்கத்தையும் உண்டுபண்ணுவபவள்.
ஸஹஸ்ரசீர்ஷ்வதனாஅயை
ஆயிரம் தலைகளையும் முகங்களையும் உடையவள்.
ஸஹஸ்ராக்ஷ்யை
எண்ணிக்கையிலடங்காத கண்களை உடையவள்.
ஸஹஸ்ரபதே
எண்ணிக்கையிலடங்காத பாதங்களை உடையவள்.
ஆப்ரம்மகீட ஜனன்யை
சிருஷ்டிகர்த்தாவாகிய பிரம்மதேவன் முதல்
புழு ஈறாக ஜீவகோடிகளனைத்தையும் தோற்றுவித்தவள்.
வர்ணாச்ர்ம விதாயின்யை
வர்ணம், ஆச்ரமம் ஆகிய இரண்டையும்
ஏற்படுத்தியவள்.
நிஜாஞ்ஞாரூப நிகமாயை
வேத வடிவத்தில் இலங்குபவள்.
புண்யாபுண்ய பலப்ரதாயை
புண்ணியம்,பாபம் ஆகியவைகளினுடைய பலனைக்
கொடுப்பவள்.
ச்ருதிஸீமந்த ஸிந்தூரீ க்ருத பாதாப்ஜ
தூலிகாயை
சுருதிகள் என்று சொல்லப்படுகின்ற
பெண்பாலர்களுடைய கூந்தலின் வகிட்டில் அமைக்கப் பெற்றிருக்கும் சிந்தூரமானது
அம்பிகையினுடைய பாதக்கமலங்களின் தூளிகைகளாகும்.
ஸகலாகம ஸந்தோஹ சுக்திஸம்புட மெளக்திகாயை
வேதங்களின் தொகையாகிய முத்துச்சிப்பி
என்னும் சிமிழுக்குள் வைக்கப்பட்டிருக்கும் முத்தை ஆபரணமாக் உடையவள். 290
புருஷார்த்தப்ரதயை
புருஷார்த்தங்களைக் கொடுப்பவள்.
பூர்ணாயை
நிறைநிலையிலிருப்பவள்.
போகின்யை
போக மயமாக இருப்பவள்.
புவனேச்வர்யை
புவனத்துக்குத் தலைவியாய் இருப்பவள்
அம்பிகாயை
தாயாக இருப்பவள்.
அனாதிநிதனாயை
ஆதியும் அந்தமும் இல்லாதவள்.
ஹரி ப்ரம்மேந்த்ர ஸேவிதாயை
ஹரி, பிரம்மன், இந்திரன் ஆகிய தேவர்களால்
சேவிக்கப்படுபவள்
நாராயண்யை
சிவனாகவும் விஷ்ணுவாகவும் இலங்கும்
பரவசஸ்துவே
நாராயணீ என்னும் பராசக்தியாகவும்
இலங்குகிறது.
நாதரூபாயை
ஓசை வடிவினள்.
நாமரூப விவர்ஜிதாயை
நாமத்துக்கும் ரூபத்துக்கும்
அப்பாற்பட்டவள். 300
ஹ்ரீங்கார்யை
ஹ்ரீம் என்னும் பீஜமந்த்ர வடிவினள்.
ஹ்ரீமத்யை
லஜ்ஜையே வடிவெடுத்தவ்ள்.
ஹ்ருத்யாயை
ஹிருதயத்திகண் வீற்றிருப்பவள்.
ஹேயோபாதேய வைஜிதாயை
புறக்கணிக்கப்படுவது, ஏற்புடையதாவது ஆகிய
ஐரண்டு நிலைகளிலும் கட்டுப்படாதவள்.
ராஜ ராஜ அர்சிதாயை
அரசர்களொக்கெல்லாம் அரசனாய் இருபவனால்
ஆராதிக்கப்படுகிறவள்.
ராக்ஞ்யை
ராணியாக இருப்பவள்.
ரம்யாயை
சந்துஷ்டியை உண்டு பண்ணுவபவள்.
ராஜீவ லோசனாயை
ராஜீவத்தைப் போன்ற கண்களை உடையவள்.
ரஞ்ஜன்யை
மகிழ்வூட்டுபவள்
ரமண்யை
விளையாடுபவள். 310
ரஸ்யாயை
சுவையைத் தருபவள்.
ரணத் கிங்கிணி மேகலாயை
ஒலிக்கின்ற சதங்கைகளுடன் அமைக்கப்
பெற்றுள்ள ஒட்டியாணத்தை அணிந்திருப்பவள்.
ரமாயை
இலக்ஷ்மி வடிவினளாய் இருப்பவள்.
ராகேந்து வதனாயை
பூரணச்சந்திரம் போன்ற முகத்தை உடையவள்.
ரதி ரூபாயை
ரதியாக வடிவெடுத்திருப்பவள். 315
ரதிப்ரியாயை
ரதிதேவியினிடம் அன்பு வைத்துள்ளவள்.
ரக்ஷாகர்யை
காப்பாற்றுபவள்.
ராக்ஷஸக்ன்யை
ராக்ஷஸர்களைத் துடைத்துத் தள்ளுபவள்.
ராமாயை
பெண்பால் மயமான யாவுமாயிருப்பவள்.
ரமண லம்படாயை
தன் கணவனோடு கூடியிருப்பதில் இச்சை
உடையவள்..
காம்யாயை
விரும்பப்படுகிறவள்.
கானகலாரூபாயை
காமக்கலை வடிவினளாக இருப்பவள்.
கதம்பகுஸும ப்ரியாயை
கதம்பப் புஷ்பங்களில் பிரியம்
வைத்திருப்பவள்.
கல்யாண்யை
மங்களகரமானவள்.
ஜகதீகந்தாயை
உலகுக்கு வேர் போன்று இருப்பவள்
கருணாரஸ ஸாகராயை
கருணை என்னும் ரஸக்கடலை ஒத்தவள்.
கலாவத்யை
கலைகளை உடையவள்.
கலாலாபாயை
லலைகளையே பேச்சாகப் படைத்தவள்.
காந்தாயை
கட்டழகே வடிவெடுத்தவள்.
காதம்பரீ ப்ரியாயை
காதம்பரீ என்னும் மதுபானத்தில் பிரியம்
உள்ளவள். 330
வரதாயை
வரங்களைக் கொடுப்பவள்.
வாமநயனாயை
அழகான கண்களை உடையவள்.
வாருணீமத விஹ்வலாயை
வாருணீ என்னும் மதுவைப் பருகி
ஆனந்தத்தில் திளைத்திருப்பவள்.
விச்வாதிகாயை
விச்வத்துக்கு அப்பாற்பட்டவள்.
வேத வேத்யாயை
வேதங்களால் அறியப்படுகிறவள். 335
விந்த்யாசல நிவாஸின்யை
விந்திய மலையில் இனிது வீற்றிருப்பவள்.
ஓம் விதாத்ர்யை நம:
உலகைத்தாங்கி இருக்கிறவள்.
வேத ஜனன்யை
வேதங்களைத் தோற்றுவிக்கிறவள்.
விஷ்ணுமாயாயை
மஹாவிஷ்னூவினுடைய மாயாசக்தி சொரூபமாக இருப்பவள்.
விலாஸின்யை
லீலை அல்லது விளையாட்டே
வடிவெடுத்தவள். 340
க்ஷேத்ர ஸ்வருபாயை
க்ஷேத்ரத்தைத் தன்னுடைய சொந்த
வடிவமாககொண்டிருப்பவள்.
க்ஷேத்ரேச்யை
க்ஷேத்திரத்துக்கு இறைவியாக இருப்பவள்.
க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞபாலின்யை
க்ஷேத்ரத்தையும் க்ஷேத்ரக்ஞனையும் பரிபாலிப்பாள்.
க்ஷயவ்ருத்தி விநிர்முக்தாயை
தேய்வும் வளர்ச்சியும் இல்லாதவள்.
க்ஷேத்ரபால் ஸமர்ச்சியாயை
க்ஷேத்டதிரமாகிய உடலைப்பரிபாலித்து வரும்
ஆத்ம சாதகர்களால் நன்கு ஆராதிக்கப்படுகிறவள்.
விஜயாயை
யாண்டும் வெற்றியை உண்டு பண்ணுவள்.
விமலயை
மாசு இல்லாதவள்.
வந்த்யாயை
வந்தனைக்குரியவள்.
வந்தாருஜன வத்ஸலாயை
பக்த ஜனங்களுக்கு அருள் புரியவள்.
வாக்வாதின்யை
தெளிந்த வார்த்தையை இயம்புபவள். 350
வாமகேச்யை
அழகான கூந்தலை உடையவள்.
வஹ்நிமண்டல வாஸின்யை
வஹ்னி மண்டலத்தில் வசிப்பவள்.
பக்திமத் கல்பலதிகாயை
பக்த்ர்களுக்குக் கற்பகக்கொடி போன்று
நலம் புரிபவள்.
பசுபாச விமோசின்யை
ஜீவாத்மாக்களைப் பிறவி என்னும் பாசத்தினின்று
விடுவிப்பவள்.
ஸம்ஹ்ருதசேஷ பாகண்டாயை
பாகண்டாக்களை யாண்டும் சம்ஹாரம்
செய்பவள்.
ஸாதாசார ப்ரவர்த்திகாயை
நல்லொழுக்கத்தில் செல்லும் படி தூண்டுதல்
செய்கிபவள்.
தாபத்ரயாக்னி ஸந்தப்த ஸமாஹ்லாதன
சந்த்ரிகாயை
மூன்று விதமான துன்பங்களால்
தகிக்கப்படுவர்களை இரக்கத்தோடு உற்சாகப்படுத்துபவள்.
தருண்யை
திரட்சி அடைந்திருப்பவள்.
தாபஸ ஆராத்யாயை
தபஸ்விகளால் ஆராதிக்கப்படுகிறவள்.
தனுமத்யாயை
ஒடுங்கிய இடையை உடையவள். 360
தனுமத்யாயை
தமோகுணத்தை அகற்றுபவள்.
சித்யை
ஞானவடிவினளாக இருப்பவள்
தத்பத லக்ஷ்யார்த்தாயை
தத் என்ற பதத்தின் குறியாய் இருப்பவள்.
சிதேகரஸ ரூபிண்யை
ஞானானந்த வடிவானவள்.
ஸ்வத்மானந்த ல்வீபூத ப்ரஹ்மாத்யானந்த
ஸந்தத்யை
யாண்டும் பரபானந்தத்தில்
திளைத்திருப்பவள்.
பராயை
பர என்னும் சொல்லின் ஸ்வரூபமாய்
இருப்பவள்.
ப்ரத்யக்சி தீரூபாயை
அந்தர்முகதிருஷ்டியில் இருக்கும் அறிவு
வடிவினள்.
பச்யந்த்யை
பச்யந்தீ என்னும் ஓசை வடிவினளாக
இருப்பவள்.
பரதேவதாயை
தேவதைகள் அனைத்துக்கும் மேலான தேவதையாக
இருப்பவள்.
மத்யமாச்யை
மத்யமா என்னும் வாக்குவடிவத்தில்
இருப்பவள்.
வைக்ரீரூபாயை
வைகரீ என்னும் வாக்கு வடிவத்தில்
இருப்பவள்.
பக்தமானஸ ஹம்ஸிகாயை
பக்த்ர்களுடைய மனதிலே வீற்றிருக்கின்ற
அன்னப்பறவைக்கு ஒப்பானவள்.
காமேச்வர ப்ராண நாட்யை
காமேச்டரருடைய உயிர் நாடியாக இருப்பவள்.
க்ருதக்ஞாயை
நிகழ்ந்து வருகிற செயல்களை எல்லாம்
அறிகின்றவள்.
காமபூஜிதாயை
மன்மதனால் ஆராதிக்கப்படுகிறவள்.
ச்ருங்காரரஸ ஸம்பூர்ணாயை
சிருங்கார ரஸத்தைப் பூரணமாக
உடைத்திப்பவள்.
ஜயாயை
வெற்றி வடிவினள்.
ஜாலந்தர ஸ்திதாயை
ஜாலந்தரம் என்னும் க்ஷேத்திரத்தில் விஷ்னுமுகீ
என்னும் பெயர் படைத்தவளாக வீற்றிருப்பவள்.
ஓட்யாண பீடநிலயாயை
ஒட்டியாணம் என்கிற பீடத்தின் கண் இனிது
வீற்றிருப்பவள்.
பந்துமண்டல வாஸின்யை
பிந்து மண்டலத்தில் வசிப்பவள். 380
ரஹோயாக க்ரமாராத்யாயை
ரஹோயாகம் என்னும் முறைமையோடுகூடிய
வழிபாட்டின் வாயிலாகப் போற்றப்படுபவள்.
ரஹஸ்த்ர்ப்பண் தர்ப்பிதாயை
ரஹஸ்யமான தர்ப்பணத்தால்
மகிழ்விக்கப்படுகிறவள்.
ஸத்ய: ப்ரஸாத்ன்யை
முறையாக் வழிபாடு செய்கிறவனுக்கு
உடனட்ச்டியாக அனுக்ரஹம்செய்வள்
விச்வ சாக்ஷிண்யை
அகிலாண்டங்களின் நடைமுறைகளுக்குக்
கண்காணிப்பு வைத்திருப்பவள்.
.
ஸாக்ஷி வர்ஜிதாயை
தான் இருப்பத்ற்குச் சாட்சியாக வேறு
யாரும் இல்லாதவள்.
ஷடங்கதேவதாயுக்தாயை
ஆறுவிதமான அங்கதேவதைகளொடு கூடியிருப்பவள்.
ஷாட்குண்ய பரிபூரிதாயை
ஆறுவிதமான குணங்களொடுநிரம்பியிருப்பவள்.
நித்யக்ளின்னாயை
எப்போதும் இரக்கத்தோடு கூடியிருப்பவள்.
நிருபமாயை
தனக்குநிகர் யாருமில்லாத்வள்.
நிர்வாணஸுகதாயின்யை
விளக்க முடியாத சுகமாகிய முக்துயைக்
கொடுப்பவள். 390
நித்யா ஷோடசிகாரூபாயை
பதினறுவித விபூதிகளோடு கூடிமிளிர்வள்.
ஸ்ரீ கண்டார்த்த சரீரிண்யை
பரமேஸ்வரனுடை சரீரத்தின் செம்பாதியைத்
தன்மயமாக வைத்திருப்பவள்.
ப்ரபாவத்யை
பிரபைகள் யாவையும் தன் ஸ்வரூபமாக
உடைத்திருப்பவள்.
பரஸித்தாயை
கண்கூடாக விளங்கிக் கொண்டிடுப்பவள்.
பரமேச்வர்யை
அனைத்துக்கும் ஈசுவரியாயிருப்பவள்
மூலப்ரக்ருத்யை
அனைத்துக்கும் முதற்காரணமாய் இருப்பவள்.
அவ்யக்தாயை
தோற்றத்தில் இல்ல்லதவள். 398
வ்யக்தா வ்யக்த வ்யக்த ஸ்வரூபுண்யை
தோன்றியிருப்பவகளும் தோன்றாமல்
இருப்பவைகளுமான அனைத்தின்வடிவெடுத்திருப்பவள்.
வ்யாபின்யை
எங்கும் நிறைந்திருப்பவள் 400
விவிதாகாராயை
வெவ்வேறு விதமான வடிவங்களை
எடுத்திருப்பவள்.
வித்யா அவித்யா ஸ்வரூபுண்யை
வித்யா வடிவத்திலும் அவித்யா
வடிவத்திலும் இருப்பாவள்.
மஹாகாமேசநயன குமுத ஆஹ்லாத கெளமுத்யை
மகாகாமேசருடைய கண்களாகிய குமுதப்
புஷ்பங்களை மலரச் செய்யும் சந்திரிகையாக இருப்பவள்.
பக்தஹார்த தமோபேத பானுமத் பானுஸந்தத்யை
பக்தர்களுடைய ஹிருதயத்திலிருக்கும் இருளை
அகற்றவல்ல சூரிய கிரணப்பிழம்பை ஒத்தவள்.
சிவதூத்யை
சிவனைத்தூதனாக அனுப்புகிறவள்.
சிவ ஆராத்யாயை
சிவனால் ஆராதிக்கப்படுகிரவள்.
சிவமூர்த்யை
சிவனைத் தன் வடிவமாக உடைத்திருப்பவள்.
சிவங்கர்யை
மங்களத்தை விளைவிப்பவள்.
சிவப்ரியாயை
சிவனுடைய அன்பிகுரியவள்.
சிவபராயை
சிவனுக்கு மிக்காளாக இருப்பவள். 410
சிஷ்டேஷ்டாயை
சிஷ்டர்களைத் தனக்குச் சொந்தமாக்கிக்
கொள்கிறவள்.
சிஷ்ட பூஜிதாயை
சிஷ்டர்களால் பூஜிக்கப்படுகிறவள்.
அப்ரமேயாயை
அளப்பரியவள்.
ஸ்வப்ரகாசாயை
இயல்பாகவே ஒளிமயமாயிருப்பவள்.
குலேச்வர்யை
குலத்துக்குத் தலைவியாய் இருபபவள்
குலகுண்ட ஆலயாயை
குலகுண்டம் என்று இயம்பப்படுகிற இடத்தை ஆலயமாகக்
கொண்டுள்ளவள்.
கெளலாமார்க தத்பரஸேவிதாயை
கெளலமார்க்கத்திலேயே கண்ணும் கருத்துமாய்
இருப்பவர்களால் உபாசிக்கப்படுகிறவள்
குமார கணநாதாம் பாயை
குமரக் கடவுளுக்கும் ஜணபதிகும் தாயாக
இருப்பவள்.
துஷ்ட்யை
திருப்தி வடிவினள்.
புஷ்ட்யை
நிறைவே வடிவானவள்.
மத்யை
அறிவு வடிவினள்
த்ருத்யை
தைரிய வடிவினள்
சாந்த்யை
அமைதியே வடிவெடுத்தவள்
ஸ்வஸ்திமத்யை
மெய்ப்பொருளாய் இருப்பவள்
காந்த்யை
அழகுடையவள்
நந்தின்யை
மகிழ்ச்சியை ஊட்டுபவள். 450
விக்ன நாசின்யை
இடையூறுகளை அகற்றுபவள்.
தேஜோவத்யை
பொலிவைஉடையவள்.
த்ரிநயனாயை
மூன்று கண்களை உடையவள்
லோலாக்ஷீ காமரூபுண்யை
அசைகின்ற கண்களை உடையவளாகவும் காதல்
வடிவினளாகவும் இருப்பவள்
மாலின்யை
மாலையை அணிந்திருப்பவள்
ஹம்ஸின்யை
அன்னப்பறவை மயமாயிருப்பவள்.
மாத்ரே
பெற்றெடுத்தவள்.
மலயாசல வாஸின்யை
மலய மலையிலே வசித்திருப்பவள்
ஸுமுக்யை
மலர்ந்த முகத்தை உடையவள்
நளின்யை
தாமரைப் புஷ்பம் போன்றவள். 460
ஸுப்ருவே
அழகுய புருவங்களை உடையவள்
சோபனாயை
பேரழகே வடிவெடுத்திப்பவள்.
ஸூரநாயிகாயை
தேவர்களிகெல்லாம் தலைவி.
காலகண்ட்யை
காலகணடருடைய கொரூபத்தில் இருப்பவள்..
காந்திமத்யை
ஒளிமயமாய் இருப்பவள்.
க்ஷோபிண்யை
உணர்ச்சியை உறுதிப்படுத்துபவள்.
ஸூக்ஷ்ம ரூபிண்யை
நுண்ணிய வடிவெடுத்திருப்பவள்.
வஜ்ரேச்வர்யை
வஜ்ரம் எனப்படும் பேராற்றல் வடிவினள்.
வாமதேவ்யை
வாமதேவருடைய சக்தியாக இருப்பவள்.
வயோசவஸ்தா விவர்ஜிதாயை
வயதாகிக் கொண்டிருத்தல் என்னும் பாங்கில்
கட்டுப் படாதிருப்பவள்.
ஸித்தேச்வர்யை
சித்தர்களுக்கு ஈசுவரியாக இருப்பவள்.
ஸித்த வித்யாயை
சித்த வித்யாவடிவமாக இருப்பவள்.
ஸித்தமாத்ரே
சித்தர்களுக்கெல்லாம் தாயாயிருப்பவள்
யசஸ்வின்யை
யசஸ் அல்லது கீர்த்திக்குச் சொந்தமானவள்
விசுத்திசக்ர நிலயாயை
விசுத்தி என்று சொல்லப்படுகின்ற சக்கரத்தைத்
தன் இருப்பிடமாகக் கொண்டவள்.
ஆரக்தவர்ணாயை
இலேசாக சிவந்த நிறம் உடையவள்
த்ரிலோசனாயை
மூன்று கண்களை உடையவள்.
கட்வாங்காதி ப்ரஹரணாயை
கட்வாங்கம் முதலிய ஆயுதங்களை உடையவள்.
வதனைகஸமன்விதாயை
ஒரு முகத்தை உடையவள்.
பாயஸான்ன ப்ரியாயை
பாயஸம் என்னும் போஜனத்தில் விருப்பம்
உள்ளவள். 480
த்வக்ஸ்தாயை
த்வக் அல்லது மேல் தோலுக்கு
அபிமானியாயிருப்பவள்
பசுலோக பயங்கர்யை
பசு உலகுக்குப் பயத்தை உண்டுபண்ணுவள்.
அம்ருதாதி மஹாசக்தி சம்வ்ருதாயை
அம்ருத முதலிய மகா சக்திகளால் இனிது
சூழப் பெற்றிருப்பவள்.
டாகினீச்வர்யை
டாகினி என்னும் பெயர் பெற்றுள்ள
ஈசுவரியாக இலங்குகின்றாள்.
அனாஹதாப்ஜ நிலயாயை
அனாஹத சக்கரத்தின் கண் எழுந்த்ருளியிருப்பவள்.
ச்யாமாபாயை
சியாமள வர்ணத்தோடு கூடியவள்.
வதனத்வயாயை
இரண்டு முகங்களை உடையவள்.
தம்ஷ்ட்ரோஜ் ஜ்வலாயை
கோரைப் பற்களுடன் பொலிபவள்.
அக்ஷமாலாதி தரயை
அக்ஷமாலை முத்லியவற்றைத்
தாங்கியிருப்பவள்.
ருதிரஸம்ஸ்திதாயை
ருதிரதாதுவின் அபிமான தேவதையாக அமைந்திருப்பவள். 490
காலராத்திரி சக்த்யெளக வ்ருதாயை
காலராத்திரிமுதலிய சக்தித் திரள்களால்
சூழப்பட்டவள.
ஸ்னிக்தெளதன் ப்ரியாயை
நெய்கலந்து சமைத்த அன்னத்தில் பிரியமுள்ளவள்.
மஹாவீரேந்த்ர வரதாயை
மகாவீரேந்திரர்களுக்கு வரங்களைக்
கொடுப்பவள்.
ராகிண்யம்பா ஸ்வரூபிண்யை
ராகிணீ என்று அயைக்கப்பெறுகின்ற யோகினீ
வடிவினளாய் இருப்பவள்.
மணிபூராப்ஜ நிலயாயை
மணிபூரம் என்னும் யோகச் சக்கரத்தைத் தன்
வாசஸ்தலமாக உடைத்திருப்பவள்..
வதனத்ரய ஸம்யுதாயை
மூன்று முகங்களை உடையவளாக இருப்பவள்.
வஜ்ராதிக ஆயுதோபேதாயை
வஜ்ராயதத்தையும் அதனோடு கூடிய ஏனைய
ஆயுதங்களையும் உடையவள்.
டாம்ர்யாதிபி: ஆவ்ருதாயை
டாமரி முதலான மூர்த்திகளால்
சூழப்பெற்றவள்.
ரக்தவர்ணாயை
சிவப்பு நிறமுள்ளவள்.
மாம்ஸநிஷ்டாயை
மாமிசத் தாதுவின் அதிஷ்டான
தேவதையாயிருப்பவள். 500
ஸ்ரீ
சக்கரம்
அழகே வடிவான சர்வசக்தி படைத்த
அன்னை, சிந்தாமணி கிருஹத்தில் வசிப்பவள், ஸ்ரீசக்கரத்தின் நாயகி. நான்கு
கரங்ககளுடன் திகழ்பவள். அனுக்கிரகம் என்ற பாசத்தை ஏந்தியவள் கரும்புவில்லை மற்றொரு
கையில் ஏந்தியவள். வாக்கில் இனிமை கொண்டவள் அம்பிகை. அம்பாளின் வாக்கு மகிமையால்
தான் காளிதாசன் கவியாகி பல இதிகாசங்களைப் படைத்தார்.
அன்னை ராஜராஜேஸ்வரியை லலிதா
சகஸ்ரநாமத்தின் மூலம் பூஜிக்க வேண்டும். அதன் ஒவ்வொரு நாமாவிற்கும் பலன் உண்டு.
அருளும் கருணையும் கொண்டவள். ஆதலால் ‘மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே’ எனத் துதிக்கலாம். ஆதிசக்தியானவள், ஆதிலஷ்மி மற்றும்
ஆதி சரஸ்வதி என மூன்று ரூபத்தில் நமக்கு அருள்கிறாள்.
லலிதா சகஸ்ரநாமத்தினை
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சொல்லி பூஜித்தால் மூன்று தேவியின் அருளையும்
பெறலாம்.
வரவேண்டும்
வரவேண்டும் தாயே
அருளவேண்டும் தாயே!
ஆயிரம் பாராட்டுக்கள்...
ReplyDelete"மஹாசக்தி ராஜராஜேஸ்வரி"
ReplyDeleteமீண்டும் இந்தத்தலைப்பினால் என்னை அப்படியே சொக்க வைத்து விட்டீர்கள்!
அதனால் நான் அனைத்து ஸ்லோகங்களையும் உச்சரித்துக்கொண்டே இருந்து விட்டேன். அதனால் பின்னூட்டமிட தாமதம்.
தொடரும்......
கடைசியில்
ReplyDelete//வரவேண்டும் வரவேண்டும் தாயே
அருளவேண்டும் தாயே!//
வரவேண்டும் வரவேண்டும் தாயே
அருளவேண்டும் நீ யே!
என்றால் இன்னும் அழகாக இருக்குமோ?
தொடரும்.....
//அன்னை ராஜராஜேஸ்வரியை லலிதா சகஸ்ரநாமத்தின் மூலம் பூஜிக்க வேண்டும்.//
ReplyDeleteஅதே அதே ....
அப்படியே தான் செய்தேன்,
அப்படியே தான் செய்கிறேன்,
அப்படியே தான் செய்வேன்
//அதன் ஒவ்வொரு நாமாவிற்கும் பலன் உண்டு.//
நிச்சயமாக !
//அருளும் கருணையும் கொண்டவள்.//
அனுபவித்து அறிந்தவனே நானும் !!
மிகவும் ருசியோ ருசியான வார்த்தைகள் !!
//ஆதலால் ‘மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே’ எனத் துதிக்கலாம். //
த தா ஸ் து !!!
தொடரும்.....
//பண்டாஸுர வதோத் யுக்த சக்திஸேனா ஸமன் விதாயை
ReplyDeleteபண்டாசுரனுடைய அழிவுக்கு ஏற்ற சேனைகளையாண்டும் ஆயுத்தமாக வைத்திருக்கிறவள்.//
[மின் தடையினால் மீண்டும் வருகையில் தாமதம்.]
மேற்படி ஸ்லோகமும் அதன் அர்த்தமும் அருமையோ அருமை தான்.
அத்ன் அடியில் காட்டப்பட்டுள்ள
அம்பாளின் படம் அழகோ அழகு தான்.
துஷ்டர்களையும்
ராக்ஷஸர்களையும்
அஸத்துக்களையும்
கச்சடாக்களையும்
சப்ஜாடாக
அழிக்கட்டும்.
நமக்கும் மகிழ்ச்சியே.
ஆனால்
ஸாதுக்களையும்
நலம் நாடுவோரையும்
உண்மையான நலம் விரும்பிகளையும்
மறக்காமல்
மன்னித்து
அம்பாள்
அருள்
புரியட்டும்.
அதுதான் நமக்கு மேலும்
மகிழ்ச்சியைத்தரும்.
தொடரும் ......
எவ்வளவு படங்கள்
ReplyDeleteஎவ்வளவு ஸ்லோகங்கள்
எவ்வளவு அர்த்தங்கள்
எவ்வளவு பொறுமையாக
பதிவு செய்துள்ளீர்கள்.
அசாத்ய உழைப்பும்மா உங்களுடையது. ;)))))
தொடரும்.....
”மஹாசக்தி ராஜராஜேஸ்வரி”
ReplyDeleteநம் அனைவரையும் ரக்ஷிக்கட்டும்.
நிச்சயம் ரக்ஷிப்பாள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
பா ரா ட் டு க் க ள்
வா ழ் த் து க ள்
ந ன் றி யோ ந ன் றி க ள்.
அன்புடன்
VGK
நவராத்திரியில் இதை வெளியிட்டு எல்லையில்லா புண்ணியத்தைத் தேடிக்கொண்டீர்கள். எனக்கும் மனப்பாடமாகத் தெறியும். பலவருஷங்களாக அம்பிகையின்
ReplyDeleteநாமங்கள் சொல்லிவருகிறேன். பூராவும் படித்து மிகவும்
ஸந்தோஷத்தை அனுபவித்தேன். எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். அன்புடன்