“துணையுடன் இன்புற்றிருக்க
மணமக்கள் தேவை விளம்பரத்தில் முன்பெல்லாம் ‘மணமகன் தேவை’ என்ற தலைப்பில் 8 பக்கங்களும், மணமகள் தேவை ஒரு பக்கத்திலும்
வரும். இப்பொழுது தலைகீழ் மாற்றம். மணமகள் பற்றாக்குறை. இக்காலம் பெண்கள் தங்கள் காலில்
சுய சம்பாத்தியத்தில் நிலைத்து வாழும் நிலையில் உள்ளதால், இல்லறம் இனிக்க கீழ்க்கண்டவற்றை
நினைவில் கொள்வது நல்லது.
முருங்கைக்காய் புகழ் பாக்கியராஜ் அவர்கள் இதழான
‘பாக்கியாவில்’ வாசகர் ஒருவரின் மனைவி அமைவது
இறைவன் கொடுத்த வரமா என்ற கேள்விக்கு மனைவி அமைவது நம்ம கையில் தான் இருக்கு, எனக்கூறி
மனைவி தேவதையா மாற கீழ்க்கண்டபடி நடக்க அறிவுறுத்தியுள்ளார்.
அனுபவஸ்த்தர் கருத்து உண்மையாகத்தான் இருக்கும்.
அது:
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது
3. கோபப்படக்கூடாது
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்கக்கூடாது
7. முக்கிய விழாக்களுக்கு அழைத்துப் போக வேண்டும்.
8. எதையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்
9. சொல்வதைப் பொறுமையாகக்
கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை
ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும்,
பாராட்ட வேண்டும்
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து
கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது, மனம் விட்டுப் பேச வேண்டும்
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒருமுறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
20. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும்
என்று எண்ண வேண்டும்.
21. உடல் நலமில்லாதபோது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
22. சின்ன சின்னத்
தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
23. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
24. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை’ என்று ஒதுங்கக்கூடாது.
25. அம்மா, அக்கா,
தங்கையிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.
26. சாப்பாடு வேண்டாமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்
27. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லிவிட்டுச் செல்ல
வேண்டும்.
28. சொன்ன நேரத்திற்கு வீட்டிற்கு வர வேண்டும்.
29. கல்யாண நாள், மனைவியின் பிறந்த நாள் கண்டிப்பாகத்
தெரிய வேண்டும்.
30. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
31. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
32. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்கூடாது.
33. சம்பள பணத்தை அப்படியே தந்து செலவுக்கு கேட்டு வாங்க
வேண்டும்.
ஆனால் நாமும் இதுபோலவே
நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவ்வை கூறியபடி:
இல்லாத ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்ற் முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.
மேலும்
நாம் அன்புடன் நடக்கவில்லை என்றால் “அவர்களுக்கும்”நறுக்குத்தெறித்தால் போல் நான்குவரி கூறி இருக்கிறாள்
அவ்வை.
அது
"பர்த்தாவுக்கேற்ற
பதிவிரதை என்றால் என்னாளும் கூடி இருக்கலாம்,
சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளாயின் கூறாமல் சன்னியாசம் கொள்."
என்பதே!!!!
இல்லறத்தை நல்லறமாக நடத்திச்செல்ல மிகவும் தேவையான அறிவுரைகள்.
ReplyDeleteபடங்கள் எல்லாமே அழகோ அழகு.
கொத்துக்கொத்தாக ரோஜாக்கள் கொள்ளை அழகு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
VGK
"பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை என்றால் என்னாளும் கூடி இருக்கலாம்,
ReplyDeleteசற்றேனும் ஏறுமாறாக இருப்பாளாயின் கூறாமல் சன்னியாசம் கொள்."
nice..
வாழ்க்கைதுணையுடன் இன்புற்றிருக்க பாக்கியராஜ் சொன்னதும் சரிதான்.நீங்கள் பகிர்ந்து கொண்ட விஷயமும் சரிதான்.
ReplyDeleteவிட்டுக் கொடுத்தல், சகிப்பு தன்மை, சின்ன விஷயத்திற்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டிக் கொண்டு இருந்தால் இல்லம் இனிமையாக இருக்கும்.
மனம் விட்டு பேசினாலே எல்லாம் நலமாக இருக்கும்.
படங்கள் செய்திகள் பகிர்வு அருமை.
ReplyDeleteஇந்த இருபத்தி ஒன்பது கட்டளைகளையும்
இனிதே செயல்படுத்தி இருக்கிறேனா எனத் தெரிந்துக்கொள்ள
இல்லக்கிழத்தியை,
இங்கே வாயேன் என்று
இரு கை கூப்பி அழைத்தேன்.
என்ன அவசரம் அப்படி உங்களுக்கு
என்று சொல்லிக்கொண்டே அவள்
என் முன் ஆஜரானாள்.
பதிவைப் பார்த்தாள்.
பதியைப் பார்த்தாள்.
முப்பதாவது ஒண்ணு இருக்கிறதே !
முக்கியம் அது இல்லயா என்றாள்.
ஆமாம் ஆமாம் என்றேன்..
என்ன ஆமாம் என்றாள்.
என்னென்ன சொல்கிறாயோ அத்தனைக்கும்
ஆமாம் என்றேன்.
முப்பதாவது மிக மிக முக்கியம்.
முன்னே பின்னே மத்தது இருந்தாலும்,
முதற்கண் இதைத்தான் எல்லா கணவன்மாரும்
கண்டிப்பா செய்யணும்
சமைக்கப்போகுமுன்னே
என்னென்ன சமைக்கணும் அப்படின்னு
பார்யாட்ட தெரிஞ்சுண்டு சமைக்கற
பர்த்தாதான் பாரிலே சுகமாய் இருப்பான்.
மத்தவனெல்லாம்? என்றேன்.
செத்தான். என்றாள்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
முதல் வருகைதந்து கவிதை மழை பொழிந்த தங்களுக்கு மலர் தந்து வரவேற்கிறேன்.
Delete[im]http://www.etravelreviews.com/gadget_images/travel0273_small.jpg[/im]
[im]http://www.incrediblesnaps.com/wp-content/uploads/2011/11/60-beautiful-flower-pictures-15.jpg[/im]
Delete33 கருத்துக்கள் தானா...?
ReplyDeleteஇன்னும் நிறைய இருக்கே...!!!
ReplyDeleteஅன்புள்ள பத்மா, நல்லதொரு பதிவு!
என் கணவரிடம் காட்டியதற்கு 33 யும் நான் செய்கிறேனே என்று ஒரே வாக்கியத்தில் முடித்து விட்டார்!
'கூறாமல் சந்நியாசம் கொள்' - மிகவும் பிடித்திருந்தது.
தனபாலன் ஸார், மீதியை நீங்கள் எழுதிவிடுங்களேன்!