Pages

Tuesday, October 2, 2012

பாசக்கார கணவன்.


பாசக்கார கணவன்!

தனது அன்பு மனைவிக்கு  நினைவுச்சின்னமாக அழகிய உலக அதிசியமான தாஜ்மஹாலைக் கட்டினான் ஷாஜஹான்.
இதுபோல் பலபாசக்கார கணவன்மார்கள் பற்றி அவ்வப்போது தகவல் மூலம் அறிந்துகொள்கிறோம்.
இதுபோன்ற ஒரு அன்புக்கணவன் பற்றிய தகவல் சமீபத்தில் பத்திரிகையில் கண்டேன்.
பீகார் மானிலத்தில் கெலார் எனும் கிராமம் ஒரு பெரிய மலையின் பக்கத்தில் உள்ள குடிசைகள் சூழ்ந்த இடம்; அங்குள்ள மக்கள் குடி நீருக்கே மலையின் மறுபக்கம் சென்றுதான் கொண்டுவரவேண்டும்.
இக்கிராமத்தைச்சேர்ந்த "தசரத்மாஞ்சி" ஒரு ஏழை விவசாயி. 1959ம் வருடத்தில் ஒரு தினம் வழக்கம் போல குடி  நீரை  மலையின் மறுபக்கத்தில் இருந்து இவர் மனைவி "பாகுனி தேவி" கொண்டுவரும்போது மலையில் இடறி வீழ்ந்து படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு செல்ல மலையைச்சுற்றிக் கொண்டு 80கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.

படுகாயமுற்றவரை அவ்வளவு தொலைவு தூக்கிச்சென்றும் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவர் உடனே வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறிவிட்டார். இவர் வாழ்ந்த கிராமம் தவிர சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் மலையின் மறுபுறம் உள்ள இந்த மருத்துவமனையை நம்பித்தான் இருந்தனர். ஒட்டு மொத்த மக்களும் தினமும் பல அத்தியாவசியத் தேவைகளுக்கான மலையைச் சுற்றியே 80 கி.மீ. தொலைவு சென்று வந்தனர். துக்கத்தில் இருந்த மான்ஜிக்கு 'மலையின் குறுக்கே ஒருபாதை இருந்திருந்தால் தம் மனைவி இறந்திருக்கமாட்டாள்' மருத்துவச்சிகிச்சையும் விரைந்து கிடைத்திருக்கும் என நம்பினார்.
கிராம மக்களிடம் மலையைக் குடைந்து ஒரு பாதை ஏற்படுத்தலாம் என்று கூறினார். யாரும் ஒத்துழைக்காததால் அவர் ஒருவரே உளியும் சுத்தியலும் எடுத்துக் கொண்டு மலையை வெட்ட ஆரம்பித்தார். இவர் மனம் தளராமல் இரவு பகல் மழை குளிர் என்று எதையும் பொருட்படுத்தாமல் சுமார் 22 வருடம் தனி ஆளாக மலையை குடைந்து 30அடி அகலம், 360 அடி நீளம் 20அடி உயரம் கொண்ட ஒரு பாதையை அமைத்தார்.

'என் மனைவி மீது கொண்ட காதல் தான் இப்பெரும் பணியை செய்து முடிக்கும் சக்தியை எனக்குத் தந்தது. இப்பொழுது ஆயிரக் கணக்கான மக்கள் இப்பாதையில் மலையை கடந்து செல்வதைப் பார்க்கையில் பரவசமாக உள்ளது' என்று கூறினார் மான்ஜி.

ஆனால் இந்தப்பாதையை செப்பனிட்டு நல்ல சாலையாக அமைத்துத் தரவேண்டும் என்ற அப்பகுதி கிராம மக்களின் கோரிக்கை  கிடப்பில் போடப்பட்டது.People are made of flesh and blood and a miracle fiber called courage. – McLaughlin

தன் காதல் மனைவிக்கு நினைவுச் சின்னம் எழுப்பினார் ஷாஜஹான். அதைவிட மனைவியின் மேல் உள்ள பாசத்தால் 22 ஆண்டுகள் தனி ஆளாக மலையைக் குடைந்து வழி ஏற்படுத்திய மான்ஜியின் செயல் பாராட்டத் தக்கது அல்லவா? இவர் அமைத்த பாதை கரடுமுரடாக இருக்கலாம். ஆனால் இது தாஜ்மஹாலைவிட அழகானது இல்லையா?[தசரத் மான் ஜி படமும்  அவர் அமைத்த மலைப்பாதையின் படமும் 
உதவி:]

http://www.theindianblogger.com/interesting/remembering-a-man-who-moved-a-mountain-%E2%80%93-alone/
7 comments:

 1. //தன் காதல் மனைவிக்கு நினைவுச் சின்னம் எழுப்பினார் ஷாஜஹான்.

  அதைவிட மனைவியின் மேல் உள்ள பாசத்தால் 22 ஆண்டுகள் தனி ஆளாக மலையைக் குடைந்து வழி ஏற்படுத்திய மான்ஜியின் செயல் பாராட்டத் தக்கது அல்லவா? இவர் அமைத்த பாதை கரடுமுரடாக இருக்கலாம். ஆனால் இது தாஜ்மஹாலைவிட அழகானது இல்லையா?//

  மிகவும் அழகான் பதிவு. அந்த தாஜ்மஹாலை விட இது தான் இந்த மாஞியின் செயல் தான் அழகானது. பாராட்டுக்கள் அவருக்கும் அவரைப் பற்றி எழுதிய தங்களுக்கும்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 2. //மனைவியின் மேல் உள்ள பாசத்தால் 22 ஆண்டுகள் தனி ஆளாக மலையைக் குடைந்து வழி ஏற்படுத்திய மான்ஜியின் செயல் பாராட்டத் தக்கது அல்லவா? இவர் அமைத்த பாதை கரடுமுரடாக இருக்கலாம். ஆனால் இது தாஜ்மஹாலைவிட அழகானது இல்லையா?//

  ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே எழுதுகிறேன்:

  22 ஆண்டுகளாக தனி ஆளாக மலையையே குடைந்தவர், மனைவி ஒரு வேளை உயிருடன் இருந்திருந்தால், அவரையும் இதுபோல குடைகுடையென்று குடைந்திருப்பாரோ?

  இவர் அமைத்துள்ள பாதைபோலவே கரடுமுரடான ஆசாமியாக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது.

  சுமங்கலியாகப் போய்ச்சேர்ந்தாள் மஹராஜி. அவள் ஒருத்தி போனதால், அனைவருக்கும் இப்போ போக பாதை கிடைத்து விட்டதில், மகிழ்ச்சி தான்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 3. தாஜ்மஹாலைவிட அழகான
  பயனுள்ள பாதை !!!

  ReplyDelete
 4. அவருடைய பெரும் பணியை நினைத்து வியக்க வைக்கிறது...

  போற்றப்பட வேண்டிய மனிதர்...

  அறியாத தகவலுக்கு மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 5. பார்ப்பதற்கு அழகைவிட ஜீவாதாரத்
  தண்ணீருக்கு, எடுத்துவர ஒரு பாதையை தனியாளாக அமைத்துக் கொடுத்தது எவ்வளவு போற்றத் தகுந்த
  விஷயம்? பிரமிக்க வைக்கிறது. நல்ல விஷயங்கள் எவ்வளவு நடக்கிறது.
  நல்ல செய்தி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வரவுக்கு நன்றி. பிடியுங்க மலர்கொத்து!
   [im]http://2.bp.blogspot.com/-mErR6Wq7Mm8/TzEfsrxs7VI/AAAAAAAACfs/M6X3oIRpu98/s320/flower4.jpg[/im]

   Delete
 6. மான்ஜியின் செயல் கவர் ஸ்டோரியாக தொலைகாட்சியில் பார்த்து இருக்கிறேன்.
  இருந்தாலும் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் போது அது மேலும் அழகாய் விட்டது.
  //மான்ஜியின் செயல் பாராட்டத் தக்கது அல்லவா? இவர் அமைத்த பாதை கரடுமுரடாக இருக்கலாம். ஆனால் இது தாஜ்மஹாலைவிட அழகானது இல்லையா?//

  தாஜ்மஹலைவிட அருமையானது தான் மறுப்பதற்கு இல்லை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete