Pages

Thursday, October 18, 2012

கோவையில் அருள்மழை




-->
கோவையில் அருள்மழை
     முப்பெருந் தேவியரான துர்க்கை லட்சுமி சரஸ்வதி ஆகியோர் தான் நவராத்திரி நாயகிகள். இவர்கள் ஒன்றாக உள்ள இடத்தில் செல்வ வளம் கொழிக்கும்; அருள் வெள்ளம் பொங்கும் ஞானம் கடல் எனப் பொங்கும்.
        மூன்று தேவிகளும் ஒரே கருவறையில் கொலுவிருந்து அருள் தரும் கோவில் கோவையில் இருக்கிறது.


கோவையில் ஈச்சனாரி என்னுமிடத்தில் 13,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது ஈச்சனாரி விநாயகர் கோயில். இங்கு தான் மகாலட்சுமிக்கும் கோயில் அமைந்துள்ளது.
இத்திருக் கோயில் பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி விநாயகர் கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் ஆதி சேஷன் மீது அரங்கன் ஆசீர்வதிக்கிறார்.


திருக்கோயிலுள் மூன்று மண்டபங்கள். முதலாவது வேத மண்டபம். அடுத்துள்ளது நவக்கிரக மண்டபம். அடுத்த மண்டபத்தில் வேலைப்பாடு நிரம்பிய கருட கம்பம் உள்ளது. கருவறையில் மூலவராக முப்பெருந்தேவிகளும் அருள்பாலிக்கின்றனர். தினமும் காலையில் சூரியனின் பொற்கிரணங்கள் சந்நதியின் நடுவில் இருக்கும் அலைமகளாம் லட்சுமியின் முகத்தில் பிரதிபலிக்கும் அற்புதக் காட்சி தெவிட்டாதது.








உச்சி நேரத்தில் சூரியன் முப்பெருந்தேவியைகளையும் தன் கதிர்களால் பூஜித்து வழிபடும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
        கிழக்கு நோக்கி இருக்கும் மூன்று தேவியர்களையும் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் நமக்கு குறைவின்றி அருள் தரும் வகையில் சிற்பங்கள் அமையப் பெற்றுள்ளது. மகாலட்சுமியின் முன்னால் மகாமேரு இருப்பது சிறப்பானது. சித்திரை முதல் நாள் கருவறையில் நீர் நிரப்பி அதில் தாமரை மலர்களை மிதக்கச் செய்யும் காட்சி காணக்கிடைக்காதது.




இங்கு நவராத்திரி கொலு மிகவும் விசேடம். விஜய தசமி அன்று, முதல் அட்சரத்தை குழந்தைகள் இங்கு ஒன்று கூடி ஆரம்பிக்கின்றனர்.




 

 

 

 

7 comments:

  1. ஒருமுறை சென்றதாக ஞாபகம்...

    சிறப்பான கோவிலின் தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  2. "கோவையில் அருள்மழை"

    கோவைக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். ;))))

    சிறந்த தலைப்பில்
    நிறைந்த பதிவு.


    தொடரும்....

    ReplyDelete
  3. //மூன்று தேவிகளும் ஒரே கருவறையில் கொலுவிருந்து அருள் தரும் கோவில் கோவையில் இருக்கிறது.//

    ஆஹா! கேட்கவே புல்லரிக்கிறது. ;)

    ReplyDelete
  4. //கோவையில் ஈச்சனாரி என்னுமிடத்தில் 13,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது ஈச்சனாரி விநாயகர் கோயில். இங்கு தான் மகாலட்சுமிக்கும் கோயில் அமைந்துள்ளது.//

    எங்கேயோ பார்த்த ஞாபகம் ??????

    எங்கேயோ வேறு யார் பதிவிலோ இதைப்பற்றியெல்லாம் ஏற்கனவே ஊன்றிப் படித்து மகிழ்ந்ததுபோல ஸ்வப்ன ஞாபகம் எனக்கு வருகிறது.

    ReplyDelete
  5. எல்லாப்படங்களுமே அழகோ அழகு.

    அதுவும் அந்தக்கடைசி படம் ஆஹா!

    இரண்டு தோழிகளும் வாயெல்லாம் பல்லாக எதையோ பற்றி இரகசியமாகப் பேசி மகிழ்வது சூப்பரோ சூப்பர் தான்.

    இதுபோல பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் எதையாவது சில படங்களை இணைப்பது வழக்கமே! ;)

    சினிமாவில் வரும் காமெடி ரோல் போல ... அதுவே வாசகர்களுக்கு மகிழ்வளிக்கவும் கூடும்.

    நீங்க எங்கேயோ போய்ட்டீங்க!!

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் கல்விகற்க ஆரம்பித்தல் விஜயதசமியில் -- இதற்கான படம் கிடைக்கவில்லை.
      கிடைத்தது இதுதான்.

      Delete
  6. உச்சி நேரத்தில் சூரியன் முப்பெருந்தேவியைகளையும் தன் கதிர்களால் பூஜித்து வழிபடும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

    நிறைய முறை தரிசித்திருக்கிறேன்.. பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete