Pages

Wednesday, October 10, 2012

மனிதனும் தெய்வமாகலாம்



மனிதனும்  தெய்வமாகலாம் 


“மேகம் தவழும் மலைத்தொடர், பசுமை போர்த்திய தரைவெளி, ஆளுயர, மரங்கள்,
அடர்த்தியான மூங்கில் புதர்கள் அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டதில் முலாய் காடு, கண்களுடன் கருத்தையும் கவருகிறது.
இது, ஒரு காலத்தில் பாலைவன மணல் திட்டுகளாக காட்சி தந்ததுதான்!



அதை பசுஞ்சோலையாக மாற்றியது, ஜாதவ்பயேங் என்கிற தனி மனிதர் என்றால் நம்பமுடிகிறதா?
     உலக வரலாற்றில் எவரும் செய்யாத மாபெரும் சாதனையை செய்துவிட்டு, மிகவும் அடக்கமாக இருக்கிறார்.
     “காடு வளர்ப்பு பற்றிய எண்ணம் உருவானது எப்படி? என்று கேட்டதும், அவர் மனதில் பழைய நினைவுகள் அலைமோதுகின்றன.

[jadav-payeng-] ஜாதவ்  பயேங் 
“எனக்கு பூர்விகம் கோகிலமுக். இங்குள்ள மலையும், மலைசார்ந்த பகுதிகளும் விவரம் தெரிந்த 16 வயதில் இருந்து என் கூடவே வருபவை. கோகிலமுக் காட்டில் முன்பெல்லாம், இந்த மாதிரி அடர்ந்த மரங்கள் கிடையாது. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை, மணல் திட்டுகளைத்தான் பார்க்க முடியும்.




1,500 ஹெக்டேர் பரந்த பகுது, இது. இங்கு மான் கூட்டங்கள் துள்ளி விளையாடுவது கண்கொள்ளாக் காட்சி. பிரம்மபுத்திரா ஆற்றில் 1979-ம் ஆண்டு பயங்கர வெள்ளம் வந்தபோது, பொதுமக்களுக்கு சேதம் குறைவுதான். ஆனால், காட்டுக்குள் இருந்த மான்-பாம்பு உள்ளிட்டவை தண்ணிரோடு அடித்து செல்லப்பட்டு, இறந்து கரை ஒதுங்கின. அது என்னை மிகவும் பாதித்தது.
     ‘கோகிலமுக் ஆற்றுப்படுகையில் மணல் திட்டுகளுக்கு பதிலாக, அடர்ந்த மரங்கள் இருந்திருந்தால், இப்படியொரு அகோரம் நிகழ்ந்திருக்காது என்று மனசுக்குப்பட்டது. இது தான் என்னை மர வளர்ப்பில் ஊக்கப்படுத்தியது என்றார்.




“அசாம் அரசாங்கத்திடம் இருந்து ஏதேனும் உதவிகள் கிடைத்ததா? எனக் கேட்டால் ஆதங்ககமான பதில் வந்தது.
     “இல்லை! வனத்துறை அதிகாரிகளிடம், கோகிலமுக் ஆற்றுப்படுகையில் மரம் வளர்ப்பது குறித்து வலியுறுத்தினேன். “ஆற்றின் நடுவே மணல் படுகையில், மரங்கள் வளராது. ஒருவேளை மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம், அதுவுக் கூட சந்தேகம்தான் என்று விட்டேத்தியான பதில் வந்தது.


நான் விடவில்லை! ஆற்றங்கரை மணல் திட்டில் மரங்களை வளர்க்க ஆவன செய்யும்படி, கிராம மக்களிடம் கையெழுத்து வாங்கி, அரசாங்கத்துக்கு மனு அனுப்பினேன். 1980-ம் ஆண்டு கோகிலமுக் ஆற்றங்கரையின் 200 ஹெக்டேர் மணல் படுகையில் சமூகக் காடு வளர்ப்பு திட்டதின்படி வனத்துறை-தொழிலாளர்கள் இணைந்து மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட்டது.



இதில், சம்பளம் வாங்காத பணியாளராக வேலை பார்த்தேன். ஆனாலும், மரக்கன்று நடும் பணி, ஒரு சம்பிரதாயமாக நடப்பதாகவே தெரிந்தது.
இதற்கிடையே எனக்கு உடம்பு சரியில்லை. ஒரு வாரத்துக்கு பிறகு போய் பார்த்தேன். நாங்கள் நட்ட அத்தனை மூங்கில் கன்றுகளும், பராமரிப்பின்றி வாடி வதங்கிக் கிடந்தன.
அப்போதுதான், கோகிலமுக் மணல் திட்டுகளை அடர்ந்த காடாக மாற்றாமல் ஓயப் போவதில்லை என்று உறுதிபூண்டேன்.




“பாலைவன மணல் திட்டுகளில் மரம் வளர்ப்பது எப்படி சாத்தியமாயிற்று?
கோகிலமுக் மணல் திட்டுகளில் 200 ஹெக்டேர் பரப்பில், மூங்கில் கன்றுகளை நட்டு பராமரித்தேன். ஆவை வளர்ந்து மரமாகிவிட்டன. ஆனாலும் காட்டில் அடர்த்தி தெரியவில்லை. தேக்கு, மா, பலா போன்ற மரங்களை வளர்க்கலாம் என்றால், அதற்கு ஆற்று மணல் ஏற்றதாக இல்லை.




அப்போதுதான், ‘ஆற்று மணலில் சிவப்பு எறும்புகள் ஊர்ந்தால், அது புன்செய் பூமியாக மாறிவிடும் என்று ஊர்ப் பெரியவர் ஒருவர் சொன்னார்.
     இதன்படி கோகிலமுக் கிராமத்தில் இருந்து சிவப்பு எறும்புகளை சேகரித்து எடுத்து வந்து, மணல் திட்டில் விடுவேன். இதற்காக எறும்புகளிடம் கடிபட்டு, பட்டபாடுகள் அநேகம். ஆனாலும் மனம் தளரவில்லை. இப்படியாக ஆறு மாதங்கள் ஆகிற்று.



அதன் பிறகு அதில் மரங்கள் நட்டு 30 ஆண்டுகளாக தனி ஒரு நபரால் பராமரிக்கப்பட்டு  சொர்க்கபுரியான அந்த காட்டில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி போன்ற மரங்கள் ஏராளம். 






முழு நேர வேலயாக காடுவளர்ப்பில் இறங்கிய இவர்
“நமக்கு உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றைத் தரும் இந்த பூமிக்கு நான் செய்யும் பிரதி உபகாரம் இது என்கிறார்.






இவர் உண்மையில் மனித தெய்வம்தானே


8 comments:

  1. வாழும் தெய்வம் பற்றி பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. பச்சை நுரையீரல்களான மரங்களை நட்டு சாதனை படைத்தவர் பற்றிய பசுமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. //“நமக்கு உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றைத் தரும் இந்த பூமிக்கு நான் செய்யும் பிரதி உபகாரம் இது”//

    இதைச்சொல்லி, செயலிலும் இறங்கியுள்ள இவர் மனிதருள் மாணிக்கம் தான்.

    பசுமையான இந்தப் பகிர்வுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  4. இன்று அக்டோபர் 11

    தங்களுக்கு என் அன்புடன் கூடிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    க்ஷேமமாக,

    செளக்யமாக,

    செளபாக்யமாக,

    சந்தோஷமாக,

    எல்லா

    வளமும்

    எல்லா

    நலமும்

    பெற்று

    நீடூழி

    வாழக

    வாழ்கவே!


    ததாஸ்து! ;)))))

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  5. மடுத்த வாயெல்லாம் பகடன்னா னுற்ற
    விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.

    எனும் வள்ளுவப்பெருந்தகையின் ஈரடிக்கு ஒரு சீரிய உதாரணமாகத் திகழ்கிறது.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. ஆச்சரியம் ஆனால் உண்மை. ஒரு தனி மனிதன் மகத்தான சாதனை அவர் செய்திருப்பது உலகம் முழுவதும் வாழ உழைத்த உழைப்பு. எறும்பைக் கொண்டு ஊர விட்டிருக்கின்றார் என்பதைப் படிக்கும் போது நெகிழ்ந்து போய் விட்டேன் . இப்படியான மனிதர்களை உலகம் கண்டுகொள்வதில்லை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. போற்றப்பட வேண்டிய மனிதர்... இல்லை... தெய்வம்...

    பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  8. தனிமனிதனின் மகத்தான பணி. இவர் பற்றி ஆங்கில நாளிதழ்களில் வந்த செய்திகள் படித்திருக்கிறேன்.

    எனது இந்த முதல் வருகையில் இப்படி ஒரு பதிவு படித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete