Pages

Tuesday, October 9, 2012

கல்கியில் நான்

கல்கியில் நான்

     அவ்வப்போது எனது எழுத்துக்கள் ஒரு சில இதழ்களில் வெளிவந்த போதிலும் எனக்கு மிகுந்த மகிழ்வு அளித்தது, கல்கி இதழில் வெளிவந்த  “என் முதல் பட்டு
என்ற தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட என் கட்டுரை தான்.













அதன் சுருக்கம் பின் வருமாறு:- 
“பெற்றோருக்கு நான் எட்டாவது மகள் நான் பிறந்ததும் நவராத்திரி வைபவத்தின் எட்டாவது நாள் தான். நான் ‘பெரியவள் ஆனதும் அதே நவராத்திரியின் போதுதான். அந்தக் காலத்தில் வாங்கிய ஒன்பது கஜம் பட்டுப் புடைவையை என் பாட்டி முதன் முதலாக எனக்குக் கட்டி விட்டாள். அந்தப் பெரிய பட்டுப் புடைவையை எனக்கு ஒரு வழியாகச் சுற்றிச் சுற்றிக் கட்டி விட்ட காட்சி இன்றும் என் மனதில் உற்சாக அலையை உண்டாக்குகிறது.
ஒரு பதுமை போல் அம்மாவின் ஆசைப் பட்டுப் புடைவையில் என்னைக் கண்ட எனது சகோதரர்கள் என்னை அப்படியே தூக்கிக் கொண்டு (புடைவையின் கனத்தினால் நடக்க இயலாத நிலையில்) அருகில் உள்ள புகைப்பட நிலையம் சென்று எடுத்த புகைப்படம்தான் இது.




























எனது பிறந்த தினமான {அக்டோபர் 11} இன்று, கல்கியின் எனது இந்த கட்டுரை வந்து கிடைத்த சன்மானம் தித்திக்கும் நினைவலைகளை உண்டாக்குகிறது. இதனை வலை உலக நட்புகளுடன் பகிர்ந்து கொள்வது  மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
    






29 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    .....

    ReplyDelete
  2. கல்கியில் பட்டென பட்டுப்புடவையுடன் ஜொலிப்பது நன்று. நான் எப்போதும் கல்கி தொடர்ந்து படிக்கும் வாசகர். உடனே எடுத்து மீண்டும் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றிகள்.

    அன்பான வாழ்த்துகள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ......

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரைகளுக்கு மிக்க நன்றி.

      19-06-2011 கல்கியில் 58ஆம் பக்கம் பார்க்கவும்.

      Delete
  3. //“பெற்றோருக்கு நான் எட்டாவது மகள் நான் பிறந்ததும் நவராத்திரி வைபவத்தின் எட்டாவது நாள் தான். நான் ‘பெரியவள்’ ஆனதும் அதே நவராத்திரியின் போதுதான்.//

    நீங்கள் உண்மையிலேயே “எட்டாக்க[ன்]னி” தான்.

    என் ஆங்கிலப் பிறந்த தேதியும் எட்டு தான்.
    எட்டாம் நம்பரை சிலர் ராசி இல்லை என்பார்கள்.
    நான் அதை இல்லை இல்லை என்பேன்.
    நாம் அதை இல்லை இல்லை என்போம் இனி. ;)

    ....

    ReplyDelete
  4. தங்களின் காட்டப்பட்டுள்ள அந்தப்புகைப்படம் எனக்கு பல கதைகளை சுவையாகச் சொல்வதாக உணர்ந்து கொண்டேன். மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது.

    .........

    ReplyDelete
  5. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    (அட்வான்ஸ்) இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. உங்களின் நம்பிக்கைகள் , ஆசைகள் பிரார்த்தனைகள் அனைத்தும் இந்த பிறந்தாளில் நிறைவேற எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    கல்கியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
    சந்திரபதுமையின் படமும் அழகு, மற்ற படங்களும் அருமை.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்!
    வாழ்க நலமுடன்!

    ReplyDelete


  8. திரு பத்மா சூரி அவர்களுக்கு,
    வணக்கம்.

    உங்கள் " தமிழ் எழுதி " வலையில் சென்று அங்கு தமிழில் தட்டச்சு செய்யத் துவங்குவோம் என எண்ணி அங்கே
    சென்றால், ' இங்கே செல்லாதே' இதில் புழுக்கள், பூச்சிகள், இருக்கின்றன என்று ஆன்டி வைரஸ் அவாஸ்ட்
    சொல்கிறது. இந்த ஆன்டி நம்பகத்தன்மை உடையவர் என்பதால், மரியாதை வைத்து அங்கு நான் செல்லாது
    வழக்கமாக வரும் ஹை கோபிக்கு வந்து எழுதுகிறேன் தமிழ்ச் சொற்களை. இந்த மின்மினிப் பூக்கள் வழங்கும்
    வலைகள் பல இது போல வைரஸ்களை வாரி வழங்குவது எல்லோருக்கும் தெரிந்ததே.

    அன்னை அபிராமி அளவிலா அன்பு செலுத்துவது போல இந்த ஆன்டி வைரஸும் அளவிலா ஆதிக்கம் செலுத்தி
    நம் கணினிகளை நிற்கதியாக்கிவிடுகின்றன .

    தயை செய்து உங்கள் வலையில் பிரதிஷ்டை செய்யுமுன் அந்த தேவதைகளின் ( வலைகளின்) குணாதீசியங்களைத்
    தெரிந்து கொள்ளவும்.

    நிற்க.
    விஷயத்துக்கு வாங்க என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

    கல்கியில் வந்த முதல் கதையா ? கற்பனை மாதிரி தெரியவில்லையே !!
    கண்முன்னே நடக்கிறமாதிரி இருக்கும் வர்ணனையை கதை என என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

    பாவாடை கட்டியவளுக்குப்
    பட்டுப் புடவை கட்டி,
    பாங்காய் அரங்கில்
    பதுவிசாய் அமர்த்தி,
    வண்ண செவ்வண்ன மருதானி தடவி
    வாய் நிறைய பால்கலந்த பழம் தந்து
    பாட்டி மார், அத்தை மார் வாழ்த்த‌
    அச்சடங்கு இன்றும் இருக்கிறதோ ?

    வாழ்த்த எனக்கு வயது இருக்கிறதா எனத்தெரியவில்லை.
    வையம் வாழ்த்த‌
    வையத்து நாயகி
    விசாலாட்சி, காமாட்சி, மீனாட்சியுடன்
    அபிராமி அன்னையும் உங்களை வாழ்த்த‌
    வேண்டுகிறேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அறிவுரைக்கு நன்றி. வாழ்த்தினைப்பெற்றுக்கொண்டேன்.

      Delete


  9. திரு பத்மா சூரி அவர்களுக்கு,
    வணக்கம்.

    உங்கள் " தமிழ் எழுதி " வலையில் சென்று அங்கு தமிழில் தட்டச்சு செய்யத் துவங்குவோம் என எண்ணி அங்கே
    சென்றால், ' இங்கே செல்லாதே' இதில் புழுக்கள், பூச்சிகள், இருக்கின்றன என்று ஆன்டி வைரஸ் அவாஸ்ட்
    சொல்கிறது. இந்த ஆன்டி நம்பகத்தன்மை உடையவர் என்பதால், மரியாதை வைத்து அங்கு நான் செல்லாது
    வழக்கமாக வரும் ஹை கோபிக்கு வந்து எழுதுகிறேன் தமிழ்ச் சொற்களை. இந்த மின்மினிப் பூக்கள் வழங்கும்
    வலைகள் பல இது போல வைரஸ்களை வாரி வழங்குவது எல்லோருக்கும் தெரிந்ததே.

    அன்னை அபிராமி அளவிலா அன்பு செலுத்துவது போல இந்த ஆன்டி வைரஸும் அளவிலா ஆதிக்கம் செலுத்தி
    நம் கணினிகளை நிற்கதியாக்கிவிடுகின்றன .

    தயை செய்து உங்கள் வலையில் பிரதிஷ்டை செய்யுமுன் அந்த தேவதைகளின் ( வலைகளின்) குணாதீசியங்களைத்
    தெரிந்து கொள்ளவும்.

    நிற்க.
    விஷயத்துக்கு வாங்க என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

    கல்கியில் வந்த முதல் கதையா ? கற்பனை மாதிரி தெரியவில்லையே !!
    கண்முன்னே நடக்கிறமாதிரி இருக்கும் வர்ணனையை கதை என என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

    பாவாடை கட்டியவளுக்குப்
    பட்டுப் புடவை கட்டி,
    பாங்காய் அரங்கில்
    பதுவிசாய் அமர்த்தி,
    வண்ண செவ்வண்ன மருதானி தடவி
    வாய் நிறைய பால்கலந்த பழம் தந்து
    பாட்டி மார், அத்தை மார் வாழ்த்த‌
    அச்சடங்கு இன்றும் இருக்கிறதோ ?

    வாழ்த்த எனக்கு வயது இருக்கிறதா எனத்தெரியவில்லை.
    வையம் வாழ்த்த‌
    வையத்து நாயகி
    விசாலாட்சி, காமாட்சி, மீனாட்சியுடன்
    அபிராமி அன்னையும் உங்களை வாழ்த்த‌
    வேண்டுகிறேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. "கண்முன்னே நடக்கிறமாதிரி இருக்கும் வர்ணனையை கதை என என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. "

      உண்மைதான்; 19-06-2011 கல்கியில் 58ஆம் பக்கம் பார்க்கவும்.

      Delete
  10. இடையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக தொடர்ச்சியான என்னுடைய பின்னூட்டதிலும் தடை ஏற்பட்டு விட்டதும்மா.

    எட்டாவது குழந்தையாக அதுவும் நவராத்திரியின் எட்டாம் நாள் பிறந்த எட்டாம் எண் ராசிக்காரரான தாங்கள் என் “எட்டாக்க[ன்]னிகள்” படிதீர்களோ இல்லையோ! மீண்டும் படியுங்கோ சிரியுங்கோ. அதுவே தங்களுக்கு [என்னுடைய] பிறந்த நாள் பரிசு.

    இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html

    .....
    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html

    ReplyDelete
    Replies
    1. http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html
      “என் வாழ்வே இனி உன்னோடு தானடா !
      இனி உன் வாயே எந்தன் உலகமடா !
      அனைத்தையும் நாம் இனி
      கடிப்போம்,
      ருசிப்போம்,
      சுவைப்போம்
      ஒன்றாகவே !”
      எல்லாம் சரி "கடிப்போம்" மட்டும் வராது எனச் சொல்லக் கேள்வி.

      Delete
    2. நான் கொடுத்துப்படிக்கச்சொன்ன தலைப்பு இது அல்ல. ஏதோ இணைப்பு அளித்ததில் கோளாறு ஆகியுள்ளது. இந்த ”பல்” பற்றிய பதிவும் நீங்கள் அவசியம் படித்துச் சிரித்து மகிழ வேண்டிய ஒன்றே!! இருங்கோ அந்த “எட்டாக்க[ன்]னிகள்” க்கு சரியான இணைப்பைத்தேடித் தருகிறேன்.

      ஏங்க “கடிப்போம்” வராதுன்னுட்டீங்க? "கடிப்போம்” என்ற நம்பிக்கையில் தானே இவ்வளவு செலவு பண்ணி பல்செட் கட்டிக்கொள்கிறார், நம் பஞ்சாமி. அச்சச்சோ! அதுவும் போச்சா????????


      நான் சொன்ன பிறந்தநாள் பரிசுக்கதையின் இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html
      இதை முயற்சித்தும் மீண்டும் பல்லைக்காட்டிக்கொண்டு அந்த பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா? கதையே வருமானால், தயவுசெய்து என்னுடைய 2011 நவம்பர் கதைகளின் லிஸ்டுக்குப்போங்கோ .. அதிலிருந்து எட்டாக்க[ன்]னிகள் என்பதை எட்டிப்பிடியுங்கோ .. ப்ளீஸ். அது ஒரு குட்டியூண்டு ஒரு பக்கக்கதை தான்.

      அன்புடன்
      VGK

      Delete
  11. அழகிய கோலங்களுடன் கொடுத்துள்ள இந்தப்பதிவும் ஓர் மிகச்சிறந்த கோலம் தான். ;)))))


    ......

    ReplyDelete
  12. முதல் படத்தினில் காட்டியுள்ள வானவில் போல தங்கள் வாழ்க்கை வண்ணமயமான சந்தோஷங்களுடன் அமையவும், கடைசியில் காட்டியுள்ள ரோஜாமலர்களைப்போல பூத்துக்குலுங்கவும் மனதார ஆசீர்வதிக்கிறேன்.

    எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ்க!

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பிரியமுள்ள,
    VGK


    [சமீபத்திய மூன்று மாதக் கல்கிகள் மட்டுமே என் வீட்டில் உள்ளன.
    தாங்கள் சொல்லும் இது அதற்கு முந்திய பழைய கல்கியாக இருக்கலாம். என் பெரிய அக்காவுக்கும் எட்டு குழந்தைகள். அதில் இரண்டாவதும் எட்டாவதும் மட்டும் பென் குழந்தைகள். இரண்டாவது பெண் “பிரேமா நாகராஜன்” என்ற பெயரில் பட்டுப்புடவையில் [மடிசார் புடவையில்] ஓர் கல்கியில் தோன்றினாள். அது மட்டும் பத்திரமாக என் வீட்டில் எங்கோ இருக்கும். தேடிப்பார்த்தால் கிடைக்கும். மற்ற பழைய கல்கிகள் என்னிடம் இல்லை. அதனால் எனக்கு சற்றே வருத்தம் தான். பதிவினில் பார்த்தவரை சந்தோஷமே vgk]

    ReplyDelete
  13. கல்கியில் இடம்பெற்றமைக்கும் பிறந்தநாளுக்கும் இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  14. எனக்கு இந்தப்பட்டுப்புடவை, பட்டுப்பாவாடை+சட்டை+தாவணி போன்றவைகள் பிடிக்குமே என்றாலும், நீண்ட கூந்தலில் செய்யும் பூ அலங்காரம் பின்னல் அலங்காரம் [பின் அலங்காரம்] அதையும் நிலைக்கண்ணாடியில் பிரதிபலித்துக் காட்டி, போட்டோ எடுப்பது போன்றவை மிகவும் பிடிக்கும்.

    அதுவும் அந்தக்காதுகளில் தொங்கும் ஜிமிக்கிகள் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

    இதைப்பற்றியே ஒருசில பதிவுகளில் நான் வர்ணித்து எழுதியுள்ளேன். இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html
    மறக்கமனம் கூடுதில்லையே [பகுதி-2 / 4 ]

    http://gopu1949.blogspot.in/2011_11_01_archive.html
    காதல் வங்கி

    நிறைய குழந்தைகளை அந்தக்காலத்தில் இது போல போட்டோ ஸ்டுடியோக்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. " நீண்ட கூந்தலில் செய்யும் பூ அலங்காரம் பின்னல் அலங்காரம் [பின் அலங்காரம்] அதையும் நிலைக்கண்ணாடியில் பிரதிபலித்துக் காட்டி, போட்டோ எடுப்பது போன்றவை மிகவும் பிடிக்கும்."
      கூந்தல் அலங்காரம் நங்கு தெரியவேன்டும் என்பதர்க்காகவே புகைப்படத்தில் நான் கேமராவிற்கு பின்னலைக்காட்டி நின்றேன்.
      தங்களின் அன்பிற்க்கு எனது நன்றிகள் பல.

      Delete
  15. என் படைப்புக்களின் ’ஜிமிக்கி’யைப்பற்றிய வர்ணிப்பு இடம் பெறும் மற்றொரு இடம் “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” தொடர்பதிவின் இறுதிப்பகுதி. இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2012/03/7.html

    [தாங்கள், ஜிமிக்கிபற்றி நான் மேலே குறிப்பிட்டுள்ள என் நான்கு படைப்புக்களுக்குமே வருகை தந்து கருத்து ஏதும் கூறாமல் இருந்துள்ளீர்கள் என்பதை மிகவும் வருத்தத்துடன் நினைவூட்டுகிறேன். ;( ]

    vgk

    ReplyDelete
    Replies
    1. "அவளுக்கு நான் வைத்த பெயர் ஜிமிக்கி + சொக்கி. எனக்கு மிகவும் பிடித்தமான பெரிய சைஸ் ஜிமிக்கிகளை காதில் அணிந்திருப்பாள்."

      இப்போதுதான் படிக்க ஆரம்பித்தேன்.[மின் தடை கடுமை; பொறுத்தருள்க!]

      Delete
    2. இங்கும் ஒரே மின்தடை தான். ஓயாத தொல்லை தான். புரிகிறது உங்கள் நிலைமை. மெதுவாக ஒவ்வொன்றாகப் படியுங்கோ. ஒவ்வொன்றிற்கும் மறக்காமல் கருத்து அளியுங்கோ. எட்டாக்க[ன்]னிகள் 2011 நவம்பர் மாதத்தில் வெளியிட்டுள்ளேன். தேடி எட்டிப்பிடித்து எப்படியாவது படியுங்கோ. குட்டியூண்டு கதை தான். அதுவே உங்களுக்கு என் பிறந்தநாள் பரிசுக்கதை. [உங்களைச் சிரிக்க வைக்க மட்டுமே.]

      அன்புள்ள
      VGK

      Delete
    3. தேடிப் படித்து ரசித்தேன். இறுதியில் நல்ல "சஸ்பென்"
      குள்ள பையனுக்கு அனுதாபத்தைதான் கூறமுடியும்.

      Delete
  16. எட்டு மேன்மை என்பார்கள் . அது உங்களுக்கு சரியாக அமைந்துள்ளது . கல்கியில் நுழைந்து உங்களை அடையாள படுத்தியமைக்கு வாழ்த்துகள். உங்கள் புகைப்படம் பழைய காலத்து திரைப்பட நடிகைகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றது . அழகான புடவை கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தாலும் நேர்த்தியாக இருக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. சந்திரகௌரி said...

      //உங்கள் புகைப்படம் பழைய காலத்து திரைப்பட நடிகைகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றது . அழகான புடவை கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தாலும் நேர்த்தியாக இருக்கின்றது//

      நான் என் மனதில் நினைத்தேன். மேடம் அதையே சொல்லிட்டாங்க.

      சிவாஜி நடித்த பழைய Black & White படமான ’தூக்குத்தூக்கி’யில் “சுந்தரி செளந்தரி நிரந்தரியே...” என்ற பாடல் காட்சி வரும். மிகவும் அருமையான பிரபலமான பாடல் அது.

      அதில் லலிதா, பத்மினி, ராஹினி ஆகிய மூன்று சகோதரிகளும் இதுபோலத்தான் சின்னப்பெண்களாகத் தோன்றுவார்கள்.

      அன்புள்ள
      VGK

      Delete