Pages

Thursday, October 11, 2012

ராஜயோகம்


ராஜயோகம் தரும் ராஜராஜேஸ்வரி!

     நவராத்திரியின் நாயகியாய் ராஜராஜேஸ்வரிதேவி அருள்கிறாள். தினம் ஒரு அலங்காரம், தினம் ஒரு நைவேத்தியம் என ஒன்பது நாட்களும் திருவிழாக் கோலம் கொள்ளும் நவராத்திரி நாட்கள் அம்பிகையை உபாசிக்க உகந்த நாட்களாகும்.



     கடுந்தவத்தினால் வரம் பல பெற்ற பண்டாசுரன், தேவர்கள் அனைவரையும் அழிக்க ஆரம்பிக்க, தேவர்கள் இந்திரனின் தலைமையில் கூடி குரு ஆங்கிரஸரின் பாதம் பணிந்து வழிகேட்க, அவரும் "ராஜராஜேஸ்வரி" என்று துதிக்கப்படும் திரிபுராதேவியை ஆராதிக்கும்படி கூற, மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி ராஜராஜேஸ்வரியின் அருள் வேண்டி யாகம் செய்ய, அதன் பயணாய் கொழுந்து விட்டெரியும் யாகத் தீயிலிருந்து பேரொளியோடு அன்னை ராஜராஜேஸ்வரி தோன்றி அசுரனை வதம் செய்தாள்.










தேவர்களின் யாகத்தீயிலிருந்து தோன்றியது போலவே இக்கலியுகத்திலும் அன்னை யாகத் தீயிலிருந்து தோன்றி ராஜராஜேஸ்வரியாக கோயில் கொண்டுள்ள தலம் சென்னைக் அருகில் நங்கநல்லூரில் ஸர்வமங்கள ராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்தோடு விளங்குகின்றாள். பழவந்தாங்கள் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயில் ஒரு ஆஸ்ரமமாக திகழ்கிறது.





ஸ்ரீவித்யா உபாசகரான ராஜகோபால சுவாமிகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் மகாஷோடஸி மந்திரத்தால் ஹோமம் செய்தபோது, யாகத்தீயிலிருந்து தகதகவென்று தோன்றினாள் அன்னை. ஊரார் வியந்து நிற்க சுவாமிகள் அதை தாம்பாளத்தில் ஏந்தி எடுத்து காஞ்சிமகாபெரியவரிடம் கொண்டு செல்ல அவர் “இவள் சத்தியமாக ராஜராஜேஸ்வரியே! இத்துடன் உருவான மணிகள், சித்துகள் ஆகும் என்று கூறினார்.



அதன்பின் ராஜகோபால ஸ்வாமிகள் ஒரு ஆஸ்ரமம் ராஜராஜேஸ்வரி அன்னைக்கு ஒரு கோயில் கட்டினார். கோயிலின் உள்ளே துர்க்கை, தன்வந்திரி பகவானை தரிசித்து தன்வந்திரி தீர்த்தத்தையும் தரிசித்த பின், கொடி மரம் தாண்டி, பலிபீடம் பக்கத்தில் அம்பாளின் சிம்மவாகனம். பக்கத்தில் தகதகவென மின்னும் 16 படிகள், 16 திதியைக் குறிக்கின்றன.


பதினாராவது படியில் அன்னை ராஜராஜேஸ்வரி மரகதப் பச்சைநிறத்தில் வீற்றிருக்கிறாள். அன்னை அருகில் உள்ள உற்சவ விக்ரகம் தான், யாகத்தீயில் பிறந்த தெய்வம். அருகே யாகத்தில் தோன்றிய சித்தி மணிகளையும் தரிசிக்கலாம்.






அன்னையின் அழகு முகத்தைக் காணும் போது மனம் குதூகலமடைகிறது. 


அன்னையின் சன்னதியில் ஏறும் போது பிறைநிலவில் தொடங்கி முழுநிலவாய் அன்னையை தரிசித்த திருப்தியும் இறங்கும்போது நமது துயரமெல்லாம் மெல்லக் கரைவது போன்ற உணர்வு ஏற்படும். 


    “தேவர்களின் துயர் துடைத்த அன்னை, நமக்கு அனைத்து வரங்களயும் நல்கி
        ராஜயோகம் தருவாள் என்பது உண்மை."





11 comments:

  1. //அன்னையின் அழகு முகத்தைக் காணும் போது மனம் குதூகலமடைகிறது. //

    இந்த அன்னையின் பெயரைக் கேட்டாலே என் மனம் குதூகலமடைவது உண்டு.

    ....தொடரும்....

    ReplyDelete
  2. // “தேவர்களின் துயர் துடைத்த அன்னை,

    நமக்கு அனைத்து வரங்களயும் நல்கி
    ராஜயோகம் தருவாள் என்பது உண்மை."//

    வரட்டும்! தரட்டும்!!
    அதே நம்பிக்கையில் ...
    முழு நம்பிக்கையில்
    இன்று வரை ஏங்கிக்
    காத்திருக்கும்
    உண்மையான
    பக்தனல்லவா நான் !

    .....

    ReplyDelete
  3. //அன்னையின் சன்னதியில் ஏறும் போது பிறைநிலவில் தொடங்கி முழுநிலவாய் அன்னையை தரிசித்த திருப்தியும் இறங்கும்போது நமது துயரமெல்லாம் மெல்லக் கரைவது போன்ற உணர்வு ஏற்படும். //

    ஆம் உண்மைதான் !

    இந்த குறிப்பிட்ட அன்னையின் பெயரை என் மனதில் நான்
    நினைத்த மாத்திரத்தில் அதேபோல,
    என் மனதின் துயரமெல்லாம் மெல்லக் கரைவது போன்ற உணர்வு அடிக்கடி எனக்கு ஏற்பட்டதுண்டு.

    மிகவும் மஹிமை வாய்ந்த அம்பாள் தான். ;)))))

    ......

    ReplyDelete
  4. ராஜயோகம்
    தரும்
    ராஜராஜேஸ்வரி!


    ஆஹா, தலைப்பே மிக அழகு.

    ராஜயோகம் கிடைத்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

    என்று கிடைக்குமோ?

    எதிர் பார்ப்புடன்
    இன்னும் இன்றும்
    காத்திருக்கிறேன்.

    ......

    ReplyDelete
  5. //ஒன்று கூடி ராஜராஜேஸ்வரியின் அருள் வேண்டி யாகம் செய்ய, அதன் பயணாய் கொழுந்து விட்டெரியும் யாகத் தீயிலிருந்து பேரொளியோடு அன்னை ராஜராஜேஸ்வரி தோன்றி...//

    ஏற்கனவே
    கேள்விப்பட்டுள்ளேன்.
    இப்போது படித்ததும்
    மெய்சிலிர்த்துப் போனேன்.

    வேள்வித் தீயிலிருந்து
    வெளிப்படும் போது ...

    கோபாவேசம் அதிகமாகத்தான்
    இருக்கும்.

    பிறகு நிச்சயம் சாந்தமாவாள்
    நம் அன்னை.

    //அசுரனை வதம் செய்தாள்.//

    பாக்கிசாக்கி இல்லாமல்
    முழுவதுமாக வதம்
    செய்யட்டும்.

    நாமும் மகிழ்வோம்.

    ....

    ReplyDelete
  6. //காஞ்சிமகாபெரியவரிடம் கொண்டு செல்ல அவர் “இவள் சத்தியமாக ராஜராஜேஸ்வரியே!” என்று கூறினார்.//

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா அவர்களின் தீவிர பக்தனான எனக்கும் இதை மிக நன்றாக உணர முடிகிறது.

    இவள் சத்தியமாக அந்த
    ”ஸ்ரீ இராஜராஜேஸ்வரி” யே
    என்பதை. ;)

    .....

    ReplyDelete
  7. படங்கள் அத்தனையும்
    அழகோ அழகு தானுங்க.

    இன்றைய தங்களின் இந்தப்பதிவும்
    ரொம்ப ரொம்பப் பிடிச்சுப்போய்
    என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக
    இருக்குதுங்க.

    இந்த ஒரு வாரமாகவே பதிவுகளில் மிகவும் கலக்கிறீங்க!

    பாராட்டுக்கள்.

    வாழ்த்துகள்.

    நன்றியோ நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  8. உங்க பதிவை பார்த்தும் படித்துவீட்டேன். இனிமேல் எனக்கு ராஜயோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு செல்கிறேன்

    ReplyDelete
  9. படங்களுடன் சிறப்பான பகிர்வு...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  10. ராஜயோகப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. இராஜயோகம் எல்லோருக்கும் கிடைக்கும். நீங்கள் அளித்த பதிவின் மூலம். படங்கள் எல்லாம் அழகு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete