Pages

Wednesday, October 17, 2012

மகாசக்தி -3.





-->
மகாசக்தி ராஜராஜேஸ்வரி!

     மகாசக்தியான ராஜராஜேஸ்வரியே துர்கை, லஷ்மி, சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.
     நவராத்திரி காலங்களில் இந்த மூன்று தேவிகளையும் மூன்று மூன்று நாட்களில் தொழவேண்டும். பத்தாம் நாள் அன்னை ராஜராஜேஸ்வரியை பூஜிக்கவேண்டும்.






-->
நமது பாரத புண்ணிய பூமியில் பெண்களை சக்தி வடிவமாகவும், அன்னை ரூபமாகவும் மரியாதை செய்யும் வழக்கம் உண்டு. (அவர்களுக்கு இட ஒதுக்கீடு மட்டும் பாராளுமன்றத்தில் வந்து கொண்டே இருக்கும்! ஆனால் இயற்கையிலேயே உள்ள சக்தியின் வெளிப்பாட்டினால் பல துறைகளிலும் கால் பதித்து முன்னேறுகின்றனர்)





-->
குறிப்பாக நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அனைத்தும் பெண்களையும் சக்தி ரூபமாக வணங்க வேண்டும். இக்காலத்தில் வீட்டிற்கு வரும், அதுவும் சிறுமிகளை பாலாதிரிபுர சுந்தரியாக வழிபட்டு மரியாதை செய்ய வேண்டும்





-->
சிவ சக்தி சொரூபத்தில் சக்தியே உயர்ந்தவள் என்பதனை நிரூபிக்கும் வண்ணம், தருமபுரி நகரில் உள்ளது கல்யாண காமாக்ஷி அம்மன் கோயில். இங்கு தேவியின் தனி சன்னதி அஷ்டதிக்கு கோணத்தில், 18 யானைகள் தாங்கி நிற்க 18 படிகள் கொண்ட தனி சன்னதியில் காட்சி தருகிறாள். பிரதோஷ காலங்களில் சிவன் அம்பாளை பிரதட்சணம் செய்வது இங்கு மட்டும் தான். சந்நியில் உள்ள ராஜதுர்காம்பிகையை ராஜராஜேஸ்வரியாக சூலம் சங்கு ஏந்தி மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் ஆடி மாதம் மூன்றாவது செவ்வாய் மாலையில் ஒரு தினம் மட்டும் முழு உருவத்தில் தரிசிக்கலாம்.








 

 

 

3 comments:

  1. இயற்கையிலேயே உள்ள சக்தியின் வெளிப்பாட்டினால் பல துறைகளிலும் கால் பதித்து முன்னேறுகின்றனர்..

    சிறப்பான ஆக்கம்.. பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. தருமபுரி நகரில் உள்ள கல்யாண காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு சென்றதில்லை...

    விளக்கமான சிறப்பு பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  3. //மகாசக்தியான ராஜராஜேஸ்வரியே துர்கை, லஷ்மி, சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.

    நவராத்திரி காலங்களில் இந்த மூன்று தேவிகளையும் மூன்று மூன்று நாட்களில் தொழவேண்டும்.

    பத்தாம் நாள் அன்னை ராஜராஜேஸ்வரியை பூஜிக்கவேண்டும்.//

    எப்போதுமே என் மனதில் இந்த இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு ஓர் தனி இடம் உண்டு.

    அதனால் தினமும் இந்த அம்பாளையே மனதில் நினைப்பதுண்டு, பூஜிப்பதும் உண்டு.

    இந்தத்தங்களின் நேற்றைய பதிவு ஏனோ என்னால் நேற்றே பார்க்க முடியாமல் படிக்கமுடியாமல் போய்விட்டது.

    அதற்கு இன்னும் பல்வேறு காரணங்களும் உள்ளன.

    இணைப்பை மெயில் மூலம் அனுப்பினீர்களோ இல்லையோ தெரியவில்லை.

    பாதி நேரம் இங்கு மின்தடையாகவும் உள்ளது. அத்துடன் நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய மழையும் சேர்ந்து விட்டது. அதனால் பார்க்க முடியாமலும் போய் இருக்க்லாம்.

    மொத்தத்தில் இராஜராஜேஸ்வரி அம்பாள் அருள் கிடைக்கவில்லை.
    வருத்தமே. ;(

    இன்றாவது தங்கள் மூலம் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே.

    அன்புடன்
    VGK

    ReplyDelete