Pages

Thursday, November 1, 2012

பொங்கிப் பெருகும் புனல் !

நம்ம நாட்டு நயாகரா கர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி. இது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சுமார் 975 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக விழும் சராவதி ஆறு ஆரவாரத்துடன் கொட்டும் அழகு நமது கண்களை இமைக்க மறந்திடும்.



 
இந்த அருவியில் ராஜா, ராணி, ரோரர் மற்றும் ராக்கட் என நான்கு வகை அருவிகள் அதன் விழும் தன்மையைப் பொறுத்து,  பெயரிடப்பட்டுள்ளன.
       


நீர்வீழ்ச்சியின் தலைப்பகுதியில் இருந்து எந்தப் பாறையின் மீது படாமல் செங்குத்தாக கீழே தரையில் விழும் அருவியின் பெயர் ராஜா.
  


இதற்கு அடுத்து விழும் அருவியின் பெயர் ரோரர். மற்ற அருவிகளை விட அதிக சத்தத்துடன் ஆர்ப்பரித்து விழுவதால் இந்தப் பெயர். இந்த அருவியில் விழும் நீர், பாறைகளில் பட்டுத் திரும்பி கீழே சத்தத்துடன் படு வேகமாக விழும். இந்த நீர்வீழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு அதிரும் வண்ணம் இருக்கும்.

         

அடுத்து இருப்பதற்கு ராக்கட் அருவி எனப் பெயர். ஒரு ராக்கட் மேலே எழும்பும் போது அதன் அடிப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்து, ராக்கட் மேலே மேலே போகும் போது எப்படி ஒரு கோடு போல் தெரிகிறதோ அது போல இந்த அருவியில் இருந்து விழும் தண்ணீரானது மேலே ஒரு கோடு போல குறுகலான இடத்தில் இருந்து கீழ் நோக்கி தரையில் விழும் போது பெரும் புகை மண்டலமாக காட்சி அளிக்கும்.
        

நான்காவதாக இருப்பது ராணி நீர் வீழ்ச்சி. ஒரு பெண்ணின் நளினமான நடையைப் போல் பாறைகளில் நிதானமாக வீழ்கிறது இந்த அருவி. எனவே இதனை ராணி நீர்வீழ்ச்சி என்ற பெயரில் அழைப்பர்.
         


 
மேற்கூறிய நான்கு அருவிகளிலும் விழும் தண்ணீர் கீழே பள்ளத்தில் விழுந்து வெளியேறுகிறது. இதன் ஆழத்தை யாராலும் காண முடியவில்லை. நீர்வீழ்ச்சியின் கீழே வரை இறங்கிச் செல்ல படிக்கட்டுகள் உண்டு. நீர்வீழ்ச்சியின் சாரல் உடலில் பட்டுத் தெரிக்க சுற்றிலும் உள்ள இயற்கை அன்னையின் அழகை ரசித்தபடி எச்சரிகையுடன் சென்று வரலாம். மைசூர் ஷிமோகாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஜூலை முதல் அக்டோபர் வரை இங்கு சீசன் காலம். 
       


   
கன்னடத்தில் “ஜோகே” என்றால் எச்சரிக்கை எனப் பொருள்படும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல மிகுந்த எச்சரிக்கையுடன் இதனை ரசிக்க வேண்டும் என்பதால் இந்தப் பெயர் மருவி ஜோக் நீர் வீழ்ச்சி என்ற பெயர் வந்தது. இந்த  நீர் வீழ்ச்சிக்கு மேல் ஆற்றில் உள்ள அணையில் நீர் நிரம்பியவுடன் அணையைத் திறந்து விடும் போது அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் நீர் ஆரவாரத்துடன் கொட்டும் சமயத்தில் இது கனடாவில் உள்ள நயாகராவைப் போலவே இருக்கும்.
     


கர்னாடக மாநிலத்தில் இது போன்ற வற்றாத (காவேரியுடன் சேர்த்து) பல ஆறுகள், அருவிகள் நீர்வீழ்ச்சி இருந்து என்ன பயன்? உள்ளம் தார் பாலைவனம் போல் வறண்டுபோய் அல்லவா இருக்கிறது.
         

12 comments:

  1. வற்றாத அருவிகள் நீர்வீழ்ச்சிகள் பற்றி பொழிந்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. //உள்ளம் தார் பாலைவனம் போல் வறண்டுபோய் அல்லவா இருக்கிறது.//

    உள்ளம் என்பது ஆமை ..அதில்
    உண்மை என்பது ஊமை

    கவியரசு கண்ணதாசன் பாடிய பாடல்
    காலமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

    கண்களில் .. நம்
    கண்களில் நீர் ... இல்லை
    குருதி
    பெருகிக்கொண்டே தான்
    இருக்கும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  3. படங்கள் அனைத்தும் மிகவும் அருமை (அதற்கான விளக்கமும்)

    நன்றி...

    ReplyDelete
  4. படங்கள் அழகு மெய் மறக்கச்செய்கின்றது . உள்ளடக்கத்திற்கு மீண்டும் வருவேன்

    ReplyDelete
  5. [im]http://i810.photobucket.com/albums/zz26/nekosuu42/roseflower.gif[/im]

    THANKS

    ReplyDelete
    Replies
    1. poo vikkara vilaile ippadi kottareekalE? konjam irunga. oru thatttai eduthuttu vaaren.
      meenachi paatti
      www.subbuthatha.blogspot.in

      Delete
    2. [im]http://i743.photobucket.com/albums/xx75/mohd_muslim/roseflower.jpg[/im]

      Delete
  6. படங்களும் தகவல்களும் அருமை.
    பாராட்டுக்கள்.

    நம் நாட்டில்தான் அனைத்துவிதமான
    தட்பவெட்ப நிலைகளும் இயற்கை அன்னை
    அளித்திருக்கிறாள்

    அதை நாம் சரியாக பயன்படுத்திகொள்ளாமல்
    வீணடிப்பது நம் மூடத்தனமே

    நாட்டை நிர்வாகம் செய்ய
    நாட்டுப்பற்று இல்லாத
    சுயநலம் பிடித்த ,நாட்டின்மீதும்,
    மக்களின் மீதும் அக்கறையில்லாத
    ஒன்றுக்கும் உதவாதஊழல் கறைபடிந்த
    கேடர்களிடம் ஒப்படைத்துவிட்டு
    அவர்கள் நம்முடைய இயற்க்கை வளங்களை அழித்தும்,
    வெளிநாட்டினருக்கு தாரை வார்த்தும்
    நிரந்தரமான துன்பத்தில்மூழ்கி கிடக்கிறோம்.

    ஆண்டு தோறும் அளவின்றி
    கொட்டி தீர்க்கிறது மழை

    அதை பயன்படுத்த
    துப்பில்லாத அரசுகள்

    வருடந்தோறும் வெள்ள நிவாரணத்திர்க்காக
    பல்லாயிரம் கோடி ரூபாய்களை
    அறுபது ஆண்டுகளுக்கு மேலாக
    வீணடித்துக் கொண்டிருக்கின்றன
    நம்மை ஆண்ட, ஆளும் அரசுகள்.

    கடல் போல் கிடைக்கும் தண்ணீரை
    கடலிலே விட்டுவிட்டு சொட்டு நீர் பாசனத்திற்கு
    பிற மாநிலங்களிடம் கையேந்தும்
    இந்தஅரசுகளுக்கும் தெருவில் கையேந்தி பவன்களுக்கும்
    ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை

    தார் பாலைவனத்தில் சூரிய சக்தி கலங்களை
    நிறுவி இந்தியா முழுமைக்கும் மின்சக்தி பெறலாம்.

    நதிகளில் வீணாகும் நீரை பயன்படுத்தி
    மின் திட்டங்களை அமைக்கலாம்.

    யார் இவைகளை செய்வது?

    கடமையை செய்ய காசு கேட்கும் இழி பிறவிகளும்,
    பொது சொத்தெல்லாம் தங்கள் குடும்ப சொத்து என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் இருக்கும்வரை நம் நாடும் முன்னேறாது.
    மக்களும் முன்னேற மாட்டார்கள்.

    ReplyDelete
  7. வாவ். ரொம்ப அருமையான பதிவு. நேரேயே அருவிக்குச்சென்று பார்த்தது போல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. முதல் வருகைக்கு மிக்க நன்றி. பிடியுங்க பூங்க்கொத்து!
    [im]http://i207.photobucket.com/albums/bb232/ernierox101/IMG_7901.jpg[/im]

    ReplyDelete
  9. பூங்கொத்துக்கு மிக்க நன்றி. மனம் நிறைந்தது. நான் உங்கள் ப்ளாகில் FOLLOWER ஆகிட்டேன். நீங்களும்..........
    நன்றி

    ReplyDelete
  10. அழகான படங்களும் பகிர்வும் மிக அருமை.
    அருவிகளில் கொட்டும் நீரைப்பார்த்தாலே
    குளித்தது போன்ற குதூகலம் ஏற்படுகிறது.

    அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள் .... நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete