பண்டைய நூல்களில் – தீபம் பற்றியச்
சிலக்குறிப்புகள்
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
”கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக
குறிப்பிடுகிறார்.
காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.
திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான். மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார். வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமச்சிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.
ருக்வேதத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.
கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.
திருமூலரும் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்:
”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…”
என்று கார்நாற்பது கூறுகிறது.
நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.
”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.
தொல்காப்பியம் ”வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்” என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.
விளக்கின் ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
இம்மாதத்ததில் ஒவ்வொரு சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும்
அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம்
இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.
கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்
நன்றி.---லிஃப்கோ.

ஞான ஒளியாய் பிரகாசிக்கும் பதிவுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete[im]http://ts3.mm.bing.net/th?id=I.4526007287612978&pid=15.1&W=160&H=106[/im]
Deleteதீப ஒளி வாழ்த்துக்கள்
இப்போதுதான் ஏதோ ஒரு பதிவினில் "கார்த்திகை விளக்கீடு" என்றதொரு பதிவினைப் படித்து மகிழ்ந்து விட்டு வந்தேன்.
ReplyDeleteஇங்கே வந்து பார்த்தால் அமர்க்களமாக
”கார்த்திகை தீபம்”
நான் பிறந்த மாதமாகிய கார்த்திகையை உலகில் எல்லோருமே தீபம் ஏற்றி வழிபட்டுக்கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அருமையான படங்கள். அழகான விளக்கங்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
VGK
[im]http://ts1.mm.bing.net/th?id=I.4949319226950980&pid=15.1&W=106&H=160[/im]
Deleteவாழ்க வளமுடன்!
ஆஹா! கையில் சிறிய அகல் விளக்குடன்
Deleteசிரித்த முகத்துடன் ஓர் சிறுமி ... ! ;)))))
”வாழ்க வளமுடன்!!” சந்தோஷம்.
//காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு,
தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.//
எவ்வளவு அழகானதோர் கற்பனை!
எழுதியது அம்பாள் அருள்பெற்ற காளிதாசன் அல்லவா!! ;)))))
பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
VGK
படங்கள் அழகு...
ReplyDeleteஎல்லோர் வாழ்விலும் ஒளி வீசட்டும்....
[im]http://ts1.mm.bing.net/th?id=I.4651235637462100&pid=15.1&W=160&H=78[/im]
Deleteதீப ஒளி வாழ்த்துக்கள்
விளக்கேற்றி வைக்கிறேன்
ReplyDeleteவிடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
நடக்கட்டும்
[im]http://ts2.mm.bing.net/th?id=I.4925482152953049&pid=15.1&W=160&H=93[/im]
Deleteஎல்லோர் வாழ்விலும் ஒளி வீசட்டும்....
தங்களுக்கு என் இனிய ”தீபத்திருநாள் வாழ்த்துகள்”.
ReplyDeleteமறக்காமல்
சுத்தமாக நெல் நீக்கிய தித்திப்பான பொரி உருண்டைகள்
அவல்பொரி உருண்டைகள்
[தித்திப்பான பாகு வெல்லம்,
பொடிப்பொடி தேங்காய் பற்கள்,
ஏலக்காய் எல்லாம் போட்டு
டேஸ்ட்டாக இருக்கணும்]
சுடச்சுட காரசாரமான அடைகள்
[தொட்டுக்கொள்ள வெல்லப்பொடி நெய்யுடன்]
உடனே அனுப்பி வைக்கவும்.
VGK
[im]http://ts4.mm.bing.net/th?id=H.5041295948645791&pid=15.1[/im]
Deleteநீங்க விரும்பிய வண்ணமே.
[im]http://ts4.mm.bing.net/th?id=I.4965167653127803&pid=15.1&W=160&H=143[/im]
Delete[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSwBYqJOUD7_5vPbMIY4QngWrJqH-wMyGqHLJkS4EeY6C-FqTZ6VOJm1O8[/im]
Deleteபார்த்தால் பசி தீருமா?
Deleteபசியைக்கிளப்பி விட்டுவிட்டதே!!
ஏன் கேட்டோம் என்றாகி விட்டதம்மா!!!
Anyhow தங்களின் அன்பான
நெல்+அவல்பொரி உருண்டைகள் +
அடைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
VGK