Pages

Saturday, November 3, 2012

நன்மை நல்கும் நாமம்

புரட்டாசி பிறந்தால் போடாதவரும் போடுவது நாமம். இந்த நாமக்கட்டியை ஒரு கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து தயாரிகின்றனர். ஜடேரி என்ற நாமகரணத்துடன் விளங்கும் இவ்வூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது.

     அருகில் கிடைக்கும் வெண்பாறை மண்தான் நாமக் கட்டிக்கு மூலப் பொருள். இதனை ‘திருமண் என்றே அழைகின்றனர். பூமியின் ஆழத்தில் வெண்பாறை படிமங்களாக இது கிடைக்கிறது. இதனைக் கொண்டு வந்து நன்கு காயவைத்துப் பின் உடைத்துத் தூளாக்குவர். இத்துடன் தண்ணீர் சேர்த்து கூழாக்கி அதனை சிமெண்டுக்கு முந்தைய காரை வீட்டுக் காலத்தில் சுண்ணாம்பு மணலை செக்கு போன்ற அமைப்பில் மாடு கட்டி அரைப்பார்களே அது போல நன்கு அரைக்கிறார்கள். அதன் பின் இந்த மண் கலவையை தொட்டியில் தண்ணீர் நிரப்பிக் கரைப்பர்.


     ஒரு நாள் கழித்து மேல் புறத்தில் பால் நிறத்தில் வண்டல் மிதக்கும்.அந்த வண்டலை சேகரித்து அடுத்த நீருள்ள தொட்டியில் வடிகட்டுகின்றனர். இது போல பல தொட்டிகளில் ஒன்றன்பின் ஒன்றாக வண்டல் படிமத்தை கரைத்து இறுதியில் வெள்ளைப் படிமம் கிடைக்கிறது.


     இதற்கு சுமார் மூன்று வாரம் பிடிக்கும். இறுதியில் கிடைக்கும் வெள்ளைப் படிமத்தை பெரிய உருண்டைகளாகப் பிடித்துக் காயாவைப்பர். சிறிது காய்ந்ததும் அந்தக் குழைவை (சப்பாத்தி மாவு போல இருக்கும்) உலைக் கையில் இடித்து மிருதுவாக்கி அதனை துண்டிகளாத்திரித்து மரக் கட்டையால் மெல்ல தட்டி நாம் காணும் நாமக்கட்டி அளவுக்கு செய்து அதை பீஸாக நறுக்கி காயவைத்தால் நாமக்கட்டி நாமம் போடத் தயார்.

     இத்துடன் சிறிது சாம்பலையும், வாசனையும் சேர்த்து திருநீறாக்கினால் பட்டை போடவும் தயார்.
     பல ஸ்தலங்களில் கோயில்களில் கிடைக்கும் நாமக்கட்டி மற்றும் திருநீறு இக்கிராமத்தில் இருந்து வருபவையே.


     சைவம், வைணவம் என அனைத்து மக்களின் நெற்றியிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இதற்குப் பின்னால் இக்கிராம மக்களின் கடும் உழைப்பு இருக்கிறது. நாமக்கட்டியில் பக்தி மணத்துடன் ஒரு பாட்டி வைத்தியமும் இருக்கிறது. குழந்தைகளின் வயிற்று வலிக்கு இதனைக் குழைத்துப் பத்துப் போட்டால் (தடவினால்) வலி பறந்து விடும்.

          
13 comments:

 1. விளக்கங்கள் அருமை... நன்றி...

  ReplyDelete
 2. கேள்விப்படாத தகவல்
  பாராட்டுக்கள்

  மண்ணிலிருந்துதான்
  அனைத்தையும் நாம் பெறுகிறோம்

  விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்த நாம்
  அந்த மண்ணிற்கு நாம் தருவது என்ன?
  மலமும் மூத்திரமும்தான்.

  ஆனால் அந்த மண் அதையும்
  உரமாக மாற்றி
  பயிர்களுக்கு தந்துவிடுகிறது.

  நாம் செய்யும் அத்தனை அக்கிரமங்களையும்
  பொறுத்துக் கொள்ளுகிறது

  இருந்தாலும் நாம் செய்யும் அக்கிரமங்கள்
  எல்லை மீறி போகையில் வாய் பிளந்து
  அனைத்தையும் தன வயிற்ருக்குள்
  போட்டு மூடிவிடுகிறது.

  அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
  இகழ்வாரை பொறுத்தல் தலை என்ற குணம்
  இன்று மனிதர்களுக்கு இருக்கிறதா?

  ReplyDelete
 3. நாமத்தைப்பற்றி
  நாம் அறிந்து கொண்டோம்.

  >>>>>>>

  ReplyDelete
 4. படங்கள் அத்தனையும் அழகு.

  நாமமிட்டே பகவன்
  நாமாச்சொல்லணும்.

  >>>>>>

  ReplyDelete
 5. //இறுதியில் கிடைக்கும் வெள்ளைப் படிமத்தை பெரிய உருண்டைகளாகப் பிடித்துக் காயாவைப்பர். சிறிது காய்ந்ததும் அந்தக் குழைவை (சப்பாத்தி மாவு போல இருக்கும்) உலைக்கையால் இடித்து மிருதுவாக்கி அதனை துண்டிகளாத்திரித்து மரக் கட்டையால் மெல்ல தட்டி நாம் காணும் நாமக்கட்டி அளவுக்கு செய்து அதை பீஸாக நறுக்கி காயவைத்தால்

  நா ம க் க ட் டி
  நா ம ம்
  போ ட த்
  த யா ர்.

  ரொம்ப சுலபமாக நாமம்
  போட்டு விட்டீர்களே !

  அடேங்கப்பா இவ்வளவு
  செய்முறைகள் இதில்
  உள்ளனவா?

  >>>>>>>>

  ReplyDelete
 6. //நாமக்கட்டியில் பக்தி மணத்துடன் ஒரு பாட்டி வைத்தியமும் இருக்கிறது. குழந்தைகளின் வயிற்று வலிக்கு இதனைக் குழைத்துப் பத்துப் போட்டால் (தடவினால்) வலி பறந்து விடும்.//

  அருமையான மருத்துவத் தகவலும் .. அச்சா, பஹூத் அச்சா!

  >>>>>>>>

  ReplyDelete
 7. //இத்துடன் சிறிது சாம்பலையும், வாசனையும் சேர்த்து திருநீறாக்கினால் பட்டை போடவும் தயார்.//

  மேடம். பட்டைபோட தேவைப்படும் விபூதி தயாரிக்க என்ற ஒரு தனி வழிமுறை உள்ளது. நீங்கள் அதில் ஏதோ கலப்படம் செய்கிறீர்கள் என எனக்குத் தோன்றுகிறது.

  விபூதியும், குங்குமமும் எப்படித்தயாரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு மிகப்பெரிய சாஸ்திர ரீதியான வழிமுறை தனியே உள்ளது.

  >>>>>>>

  ReplyDelete
 8. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் தேவஸ்தானத்தில் தயார்செய்து விற்கப்படும் குங்குமம் மட்டுமே ஒரிஜினல் குங்குமம். கையில் சற்று நேரம் வைத்திருந்தால் கையெல்லாம் மஞ்சளாகிவிடும். மீதியெல்லாம் போலிகள். சாயங்கள் மட்டுமே.

  >>>>>>>>

  ReplyDelete
 9. நாமம் இட்டவர்களைப்பார்த்தால் பெருமாள் நினைவும்
  பட்டை இட்டவர்களைப்பார்த்தால் சிவன் நினைவும்
  குங்குமம இட்ட பெண்களைப்பார்த்தால் அம்பாள் நினைவும்

  வருவதற்காகவே அனைவரும் நெற்றிக்கு
  இட்டுக்கொள்ளணும் என்ற நல்ல வழக்கத்தை
  ஏற்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

  பாழும் நெற்றியுடன் யாருமே இருத்தல் ஆகாது.

  >>>>>>>>>

  ReplyDelete
 10. முறைப்படி செய்யப்படும் இந்த நாமக்கட்டி
  விபூதி, குங்குமம் முதலியவற்றில் மட்டுமே
  மஹிமையும், மருத்துவ குணங்களும் இருக்கும்.

  விபூதி தயாரிக்க பசுஞ்சாணியும்,
  குங்குமம் தயாரிக்க நல்ல மஞ்சளுமே
  மூலப் பொருட்களாகத் தேவைப்படும்.

  கடைகளில் நாம் வாங்கும் விபூதி, குங்குமம்
  எல்லாவற்றிலும் கலப்படம் மட்டுமே உள்ளது.
  ஏதேதோ கெமிகல்ஸ் கலந்து வாசனைகளையும்
  கலந்து விடுகிறார்கள்.

  இவற்றில் சிலவற்றைத் தொடர்ந்து நாம்
  உபயோகித்தால் ச்ரும நோய்கள்
  வரக்கூடிய ஆபத்தும் உள்ளன.

  >>>>>>>>

  ReplyDelete
 11. நாமத்தைப்பற்றிய அழகான பதிவுக்குப்
  பாராட்டுக்கள், வாழ்த்துகள்,
  பகிர்வுக்கு நன்றிகள்.

  ”நன்மை நல்கும் நாமம்”
  என்ற தலைப்பும் அழகாகவே உள்ளது.

  பிரியமுள்ள
  VGK

  ReplyDelete
 12. அற்புதம் . இதற்குள் இவ்வளவு இருக்கின்றதா

  ReplyDelete