அவசர யுகத்தில் வாழும் நாம் துரித உணவு என்ற
பெயரில் உண்பதும், நமது மண்ணிற்கேற்ற உணவுவகைகளைத் தவிர்த்து பீட்ஸா, பர்கர்,
நூடுல்ஸ் என உடல் நலத்திற்கு ஒத்து வராத உணவினை உண்ண ஈட்அவுட் என்ற பெயரில்
உணவகத்தில் ஆர்டர் செய்வது ஒரு பிளேட் விஷத்தை தான்!
நல்ல
உடல் உழைப்புடன், அவ்வப்போது இயற்கையில் விளையக்கூடிய, கிடைக்கக் கூடிய காய்,
கனிகளை சாப்பிட்டு வந்தாலே தேவையற்ற பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
நமது
உணவுப்பழக்கத்தில் தவிர்க்கமுடியாத பொருளாக சேர்ந்து கொண்ட வெள்ளை பிரெட்டும்,
நூடுல்ஸ்சும், இப்பொழுது வெளி நாட்டினர் கூட தவிர்ப்பது நிறைய பேருக்க்கு
தெரியவில்லை. ஒரு சத்தும் இல்லாத வெள்ளை ரொட்டிக்கு பதிலாக கோதுமை ரொட்டியை பயன்
படுத்தலாம். உப்பின் பயன் பாட்டைக் குறைத்தாலே பல நோய்களின் தொந்தரவில் இருந்து
தப்பிக்கலாம். அது போலவே ஜீனி என்ற வெள்ளைச் சர்க்கரைக்குப்பதில் பனங்கருப்பட்டி
நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை உபயோகித்தால் உடலில் கூடுதல் கலோரியையும் அதனால்
உண்டாகும் ரத்த அழுத்தம், ஈரல் மற்றும் சிறு நீரக நோய், சர்க்கரை நோய்
போன்றவற்றைத் தடுக்கலாம்.
கண்டதை உண்டு
பிற்காலத்தில் மருந்தையே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலமை உண்டாகாமல் தடுக்க, உணவை
மருந்தாகச் கொள்ளலாமே!
இறைவன் நமக்காகவே அந்தந்த பருவத்துக்கு ஏற்ப காய் கனிகளைப் படைகின்றான்.
இயற்கையில்
நமக்கு கிடைக்கும் காய்கனிகளை உற்று கவனித்தால், இறைவன் நம் உடல் உறுப்புகளுக்கு
ஏற்ற, பாதுகாக்கச் கூடிய காய்கனிகளை நமது பல உடல் உறுப்புக்களப் போலவே
படைத்திருப்பது தெரியும்.
கேரட்டை வட்டமாக
நறுக்கிப் பாருங்கள் மனிதனுடைய கண், கருவிழி போன்றவை தெரிகிறதா. ஆமாம் கேரட்டை
சாப்பிடுவதால் கண் தக்கபடி பாதுகாக்கப்படுகிறது.
காராமணிப்பயறு கிட்னி
போன்ற அமைப்பில் உள்ளது. அது சிறு நீரகத்தைப் பாதுகாக்கவும், நோய் தடுப்பு
சக்தியாகவும் விளங்குகிறது.
வெங்காயத்தின் உட்பகுதியை
உற்றுப்பார்த்தாலே மனித உடலின் அணுக்களைப் போன்று இருக்கும். வெங்காயம் ரத்தத்தை
சுத்தம் செய்கிறது.
தக்காளியை குறுக்கு
வெட்டுத் தோற்றம் இதயத்தின் நான்கு அறைகளை ஒத்திருக்கும். அதில் உள்ள வைகோபிம்
எனும் சத்து இருதயத்தைப் பாதுகாக்கும்.
வல்லாடைகீரை இலை அசல்
மனித மூளையின் வடிவமைப்பில் உள்ளது. அதனால் தான் ஞாபக சக்தி பெருக வல்லாரையை
உணவில் சேர்க்கச் சொன்னார்கள் நம் முன்னோர்.
திராட்சைக் குலை இருதய வடிவிலும், இருதய உயிரணு தோற்றத்திலும் இருக்கும். இருதயத்துக்கும்,
ரத்தத்திற்கும் வீரியத்தை அளிப்பது திராட்சை.
வால்நட்டை குறுக்கே
வெட்டிப் பார்த்தால் அசல் பெருமூளை, சிறு மூளையை போன்று இருக்கும். மூளையின் சீரிய
செயல்பாட்டிற்கு வால்நட்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு கணையதைப் போலவே இருக்கும். நீரழிவு நோய் வராமல் தடுக்க இது சிறந்தது.
ஆகவே
எந்தக் காய்கறி நமது எந்த உறுப்புக்குப் பயன் தருமோ, அந்த உறுப்பின் வடிவிலேயே
இயற்கையினால் படைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இவை செயற்கை உரம் தவிர்த்து, இயற்கை
உரத்தினால் விளைந்திருக்க வேண்டும்.
குக்கர்
வந்தது! காய்கறிகளில் உள்ள நன்மை பயக்கும் பொட்டாசியம் அழிந்தது. அதற்கு பதில்
உடலுக்கு ஊறு விளைவிக்கும் வெள்ளை உப்பை (சோடியம் குளோரைடு) சேர்த்து பல
வியாதிகளுக்கு கதவைத்திறந்தோம்!
அடுத்து
“இண்டக்சன் அடுப்பும், அவனும்” வந்தது உணவில் உள்ள கொஞ்ச நஞ்சம் இருந்த சத்தும் அழிந்தது. போதாதற்கு
நூடுல்ஸ் வந்தது! எல்லாம் கெட்டது! இது போதாதென்று துரித உணவு (பாஸ்ட் புட்) வந்தது. ஈட் அவுட் என்ற பெயரில் வெளியே சென்று “ஒரு பிளேட் விஷம்” தான் ஆர்டர்
செய்கிறோம்.
எனவே, கண் முழுவதும் கெடுவதர்க்கு முன் சூரிய
நமஸ்காரம் செய்வோம்.
பயனுள்ள பல தகவல்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் அறிய வேண்டும்...
ReplyDeleteபடங்கள் எல்லாமே அழகோ அழகு.
ReplyDeleteவிஷயங்களோ கடைசியில் காட்டியுள்ள “கண்” படம் போன்று மிக முக்கியமானவைகள்.
//கண்டதை உண்டு பிற்காலத்தில் மருந்தையே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலமை உண்டாகாமல் தடுக்க, உணவை மருந்தாகக் கொள்ளலாமே!//
அழகான விழிப்புணர்வு தரும் பதிவு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
உணவில் விஷத்திற்கு போய் பெரிதும் கவலைப்படுகிறீர்களே?
ReplyDeleteமற்ற விஷங்களை ஏன் மறந்து விட்டீர்கள்?
கொசுவை விரட்ட பயன்படுத்தும் பூச்சி கொல்லியின் மருந்தை இரவு முழுதும் சுவாசிக்கிரோமே?
அது நம் சுவாச பைகளையும், ஈரலையும் விஷமாக்கி நம்மை முடமாக்குவதை யார் உணருகிறார்கள்?
கொசுக்கள் சாவதில்லை. அந்த கொசு விரட்டி தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் கொழுக்கின்றன
நாம் அணு அணுவாக தினமும் இறந்து கொண்டிருக்கிறோம்.
என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளாது நச்சு புகையை நன்றாக இழுத்து மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழும் புகை மன்னர்களின் சேவையை ஏன் மறந்து விட்டீர்கள்?
குடலை புண்ணாக்கி ஈரலை அழுக செய்து மூளையை மழுங்க செய்து ஆயுளை குறைத்து அழிக்கும் மது, கஞ்சா பாண் பராக், புகையிலை போன்ற எண்ணற்ற போதை பொருட்கள் உங்கள் கண்ணில் தெரியவில்லையா?
குடிக்கும் தண்ணீரில் விஷம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் விஷம்
என்ன மனிதர்களின் பார்வையிலே விஷம், எண்ணங்களிலே விஷம் என்று அனைத்தும் விஷம்தான் இந்த உலகில்
குழந்தைகள் உண்ணும்தாய்ப்பாலிலேயே விஷம் உள்ளது என்று ஆராய்சிகள் கூறுகின்றன
வாகனங்களும், ரசாயன தொழிற்சாலைகளும் , வாகன புகையாலும், வல்லரசுகள் வெடித்து மனித குலத்த்தை அழிக்கும் வெடி குண்டுகளிளிருந்து வெளிப்படும் நச்சு புகையாலும், அணு கழிவுகளாலும் ,பிளாஸ்டிக்,மற்றும் மின்சாதன கழிவு களாலும் நாம் உண்ணும் அனைத்து மருந்துகளுமே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக எமனுலுலகிர்க்கு அனுப்பும் விஷம்தான்
நம்மை எல்லாம் ஆலகால விஷத்தை உண்டு இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த நீலகண்டன்தான் இன்னும் காப்பாற்றி கொண்டிருக்கிறான்.
ஊதுகிற சங்கை ஊதியாச்சு.
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Delete[im]http://i181.photobucket.com/albums/x32/pradyumanpatel/Navratri.gif[/im]
உங்கள் பதிவைப் படிக்கும் போதுதான் இந்த காய்கறிகளின் தோற்றமும் அவை உடல் உறுப்புக்களைப் பாதுகாக்கும் சத்துக்களைத் தம்மகத்தில் கொண்டிருப்பதையும் அறிந்து
ReplyDeleteகொண்டேன் . உண்மையிலாச்சரியமாக இருந்தது. வால் நாட்டை பார்த்தபோது பிரமித்துப் போனேன் .இயற்கையின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது. மனிதன் தானாகத் தேடிக்கொள்ளும் வியாதிகள்தான் அதிகம் சிறப்பான பதிவு தந்தீர்கள் மிக்க நன்றி
கண் முழுவதும் கெடுவதர்க்கு முன் சூரிய நமஸ்காரம் செய்வோம்.
ReplyDeleteபயனுள்ள சிறப்பான பதிவு....... மிக்க நன்றி
நன்றியைக் கூட நளினமாக சொல்வது வியப்பும் மகிழ்வும்.
ReplyDeleteபாராட்டு மழையில் நனைந்தேன்!
Delete[im]http://www.stevemcgraw.com/em_lin/animated/rain.gifs[/im]
SUPER
Deleteகணினி திரையில்
மழை கொட்டியும் திரையில் நீரில்லை
எல்லாம் மாயை
கண்ணை நிறைத்த மழை ஒரு கவிதை எழுத வைத்தது... நன்றியும் மகிழ்வும்!
ReplyDeletehttp://nilaamagal.blogspot.in/2012/11/blog-post_22.html