Pages

Friday, November 2, 2012

சம்மதம் எம்மதம்!


மக்கள் எந்த மதத்தை பின் பற்றி வாழ்ந்தாலும், எல்லோரும் ஒற்றுமையாக வாழ நம்முன்னோர்கள் மத ஒற்றுமை நல்லிணக்கத்தை போற்றும் வண்ணம் பல வழிகளை கடைப் பிடித்து வந்தார்கள். இந்த நல்ல பழக்கம் பல இடங்களில் இன்றளவும் கடைப் பிடிக்கப்படுகிறது.

          நெல்லைக் கருகிலுள்ள பொட்டல் புதூர் தர்கா புகழ் வாய்ந்தது. பல இன மக்களும் ஏதேனும் வேண்டுதல் என்றால் இங்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
          இந்த தர்கா உள்ளே அமைப்பில் நமது ஹிந்து கோயிலைப் போலவே உள்ளது. உள்ளே கருவறை போன்ற இடத்தில் மலர்களால் போர்வை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.

          இந்த தர்காவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹிந்து மதச் சம்பிராயத்தின்படி திரு நீறு அளிக்கப்படுகிறது. நமது வேண்டுதல் நிறைவேற தர்காவுக்கு அருகில் உள்ள பெரிய ஆலமரத்திர்க்கு, அருகில் ஓடும் ஆற்றில் இருந்து நீர் எடுத்து ஊற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
          அடுத்து நெல்லைக் கருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் முஸ்லீம்கள் வாழும் பகுதியில் ஒரு அம்மன் கோயில், ஒரு முஸ்லீம் பெரியவரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபடுகிறார்கள்.

  ஓசூர் பகுதியில் உள்ள தேன் கனிக் கோட்டை என்னும் சிற்றூரில், யாரப்சுவாமிகள் என்ற முகம்மது பெரியவரின் ஜீவ சமாதி ஒன்று உள்ளது. மிகப் பெரிய ஓலைக் கொட்டகை, முன்னே மாநாட்டுப் பந்தல் போல் இருக்கும். அதில் நூற்றுக் கணக்கில் புறாக்கள் தங்கி இருக்கும்.

 கிராமத்தின் மற்றொருபுறம் பேட்ராயசுவாமி எனும் பெருமாள் கோயிலு ஒன்று இருக்கிறது. ஊரிலேயே இந்த இரண்டு இடங்கள் தான் மக்களின் வழிபாட்டுத் தலங்கள்.

          இது போல, முக்கடல் கூடும் குமரியில் கோயில் கொண்டுள்ள பகவதியம்மன், சாதி, மத பாகு பாட்டினைக் கடந்து, அருளாட்சி செய்து வருகிறாள்

          இங்கு வைகாசி மாதம் நடக்கும் விசாகத் திருவிழாவில் கிறிஸ்துவ குடும்பத்தினர் தரும் கயிறு மூலம் தான் கொடி ஏற்றப்படுகிறது. அதுபோல தேர்த்திருவிழாவில் கிறிஸ்துவர் வடம் தொட்டுத் தந்த பின்னர்தான் ஊர் கூடி தேர் இழுப்பர்.

          அது போல அம்மனுக்கு கொடி தரும் உரிமை கோட்டாறு ப்ட்டாரியர் என்ற குடும்பத்திற்கும், பகவதிக்கு வில் தரும் உரிமை நாடார் இன மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.


-->
திருநெல்வேலியில் உள்ள நெல்லயப்பர் கோவிலின் கிழக்குப்பிரகாரத்தில் சிறிய கருவறையில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இதற்கு மட்டும் சப்பாத்தி நேவித்தியம் இன்றும் செய்துவருகிறார்கள். இந்த சிவலிங்கம் அன்வர் என்ற முகமது அன்பர் பெயரில் அன்வர்லிங்கம் என அழைக்கப்படுகிறது. இதன் பராமரிப்புக்காக அவர் நிலமும் எழுதிவைத்திருக்கிறார். இன்றும் அவ்ர் வழித்தோன்றர்கள் இந்த சிலிங்கத்தை வழிபட்டு வருகின்றனர்.

 

இது போன்ற இன்னும் பல ஊர்களில் மத நல்லினக்கத்திற்கு வழிவகுத்தனர் நம் முன்னோர்கள்.


          ஆறுகள் பல ஓடினாலும் இறுதியில் அது கலக்கும் இடம் கடல்தான்.
         

4 comments:

  1. ரொம்ப அருமையான பதிவு. மத நல்லிணக்கம் இது போல் எல்லா இடத்திலும் ஏற்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
    என் ப்ளாகிற்கு வருகை தந்து என்னுடைய ‘மதம்’ சிறுகதையைப் படித்துப் பாருங்கள்.
    http://manammanamviisum.blogspot.in/2012/09/blog-post_1107.html
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. அழகான படங்களுடன் பகிர்வு....

    அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

    ReplyDelete
  3. //ஆறுகள் பல ஓடினாலும் இறுதியில் அது கலக்கும் இடம் கடல்தான்//

    அருமையான பதிவு. பாராட்டுக்கள்.வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  4. சமயங்கள் பலவானாலும் வணங்கும் இறைவன் ஒருவனே என பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete