Pages

Sunday, November 4, 2012

மலர்களில் நிம்மதி

மனதுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி என்பர். நிம்மதி தேடி ஆண்டவன் சன்னிதானங்களுக்கு அடிக்கடி தேடி செல்ல இயலாதவகளுக்கு, நிம்மது தந்து உடலையும் உள்ளத்தையும் மலரச்செய்து நிம்மதியைத் தருவது மலர்களே.




கவிஞர்களின் பாடல்களில் பத்துக்கு எட்டு பாடல்களில் மலர் வராமல் இருக்காது. மயங்குகிறாள் ஒரு மாது, என்று மயக்கத்தை தந்த கவிஞர், மலர்ககளில் அவள் ஒரு மல்லிகை எனப் புகழவும் தவறவில்லை.

     மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள் என தங்கை மேல் கொண்ட பாசத்தை வெளிப்படுத்திய அண்ணனின் பாட்டு, பூப்பூவாப் பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா என்ற குழந்தையின் குதூகலம், ரோஜா மலரே ராஜகுமாரி என்று அரசிளங்குமரியை வர்ணித்த கதாநாயகன் என்று, பாசம், அன்பு, காதல் போன்று பல உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிலும் மலர் இல்லாமல் இருக்காது.

     பனிரெண்டு ஆண்டுகளுக்கி ஒருமுறை மலரும் குறிஞ்சி மலரை, மலரே! குறிஞ்சி மலரே! என் தன் காதலியின் முகத்தில் கண்டு மகிழ்கிறாள் ஒருவன்.

     கிராமத்துக் காதலனும், தாழையாம் பூ முடிந்து என்றுதான் முதலிம் மலரைப் பார்க்கின்றான். அதற்கும் முன்னால் அவன் பாடியது ஒய்யாரக் கொண்டையில்… தாழம்பூவாம்… என்பது, தாழம்பூவின் நறுமணதில் என்று அதில் மயங்கி வரும் மறுமணச் சிந்தனையை தன் மனைவிக்கு கூறிய நோயுற்ற கணவனைப் பார்த்து தெய்வதிற்கு சூட்டிய மலர் வேறொருவர் கை படலாமா என்று தான் நொந்து போய் மனைவி பாடுகிறாள்

     நிலவுக் கடுத்து குழந்தை முதல், காதலன்,கணவன் கலைஞன், மனைவி, வயதானவர்கள் வரை மகிழ்ச்சியிலும், துக்கத்திலும், பக்தியிலும் பகிர்ந்து கொள்வது மலர்களையே.

     மன அழுத்தத்தினைக் குறைக்க மலர்கள் நிறைந்த பூங்கா, தோட்டம் போன்ற இடங்களுக்கு சென்றால் மனம் லேசாகும். உற்சாகம் பெருகும், மலர்களைப் பார்த்தால், தொட்டால், அதன் நறுமணத்தை நுகர்ந்தால் கிடைப்பது மனத்திற்கு ஒரு நிம்மதி.

மலரைபார்த்தால் மனஅழுத்தம் நீங்கும்; மேலும்  பலவித மலர்களுடன் அம்பிகயைத்தொழுதால் கிடப்பது ஆனந்தத்துடன் கூடிய மன நிம்மதி.

     அம்மனுக்கு செய்யும் புஷ்பாஞ்சலி குறித்த பாடல் இதோ:-


ரோஜாப்பூ கொண்டுவந்தே எங்கள்
ராஜேஸ்வரியை பூஜை செய்தால்
தேசாதி தேசம் மெச்சும் ஒரு
ராஜாப்போல் வாழச்செய்வாள்



முல்லைப்பூ கொண்டுவந்தே எங்கள்
மொகனாங்கியை பூஜை செய்தால்
இல்லலை என்று சொல்லாமல் தனம்
அள்ளி அள்ளி தந்திடுவாள்.


ஜாதிப்பூ கொண்டுவந்தே எங்கள்
ஜோதி அவளை பூஜை செய்தால்
ஓதி உணரா வித்தையெல்லாம் தந்து
மேதை என்று ஆக்கிடுவாள்.

மகிழம்பூ கொண்டு வந்தே எங்கள்
மாதங்கியை பூஜை செய்தால்
மணமாகாத கன்னியர்க்கு அவள்
திருமணமும் நடத்தி வைப்பாள்

தாமரைப்பூ கொண்டுவந்தே எங்கள்
மஹேஸ்வரியை பூஜை செய்தால்
பில்லி சூனியம் ஏவல் எல்லாம்
பின்னாலே ஓடச்செய்வாள்

சம்பங்கிப்பூ கொண்டு வந்தே எங்கள்
சர்வேஸ்வரியை பூஜை செய்தால்
சகல சௌபாக்யம் தந்து அவள்
சஞ்சலத்தைத் தீர்த்திடுவாள்.

சாமந்திபூ கொண்டு வந்தே எங்கள்
சங்கரியை பூஜை செய்தால்
சத்தியமாய் வாழ்வில் அவள்
சந்தோஷதைத் தந்திடுவாள்.

4 comments:

  1. மலர்கள் இறைவனின் தூதுவர்கள்
    பக்தனின் இதயத்தை விளக்கவொண்ணா
    மகிழ்ச்சியில் ஆழ்த்த வல்லவை மலர்கள்

    இறைவனே தன்னை பக்தியோடு
    ஒரே ஒரு மலரிட்டு பூஜை
    செய்தால் போதும் என்கிறான்

    மணம் வீசும் மலர்கள்
    மங்கி போன மனதையும்
    பொங்கி எழ செய்துவிடும்

    மலரும் மங்கையும் ஒரு சாதி
    சாதி மல்லிகையின் மணம்
    சாதிகளுக்கு அப்பாற்பட்டது.

    மலர்களை பற்றி
    அரவிந்த அன்னை
    ஏராளமான தகவல்களை
    இந்த உலகிற்கு அளித்துள்ளார்

    அரவிந்தரின்/அன்னையின் பக்தர்களை
    கேட்டால் அவர்கள் சொல்வார்கள்
    ஆயிரமாயிரம் கதைகளை
    மலர்களின் தெய்வீக தன்மைகளை

    அருமையான பதிவு
    பாராட்டுக்கள்



    ReplyDelete
  2. ஆஹா... அருமையான படங்கள்... ஒவ்வொரு மலருக்கும் விளக்கங்கள் அருமை...

    நன்றி...

    ReplyDelete
  3. உள்ளத்தையும் மலரச்செய்து நிம்மதியை அள்ளித் தரும் மலர் போல மகத்தான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. //ரோஜாப்பூ கொண்டுவந்தே எங்கள்
    ”ஸ்ரீ ரா ஜ ரா ஜே ஸ் வ ரி” யை
    பூஜை செய்தால் ...
    தேசாதி தேசம் மெச்சும் ஒரு
    ராஜாப்போல் வாழச்செய்வாள்// ;))))))))))))

    மிகவும் அழகான பதிவு ... மலர்கள் போன்றே ...

    பூக்களுடன் கூடிய சினிமாப்பாடல்கள் யாவும் அழகாகவே காட்டியுள்ளீர்கள்.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். VGK

    ReplyDelete