அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில்
சுசீந்திரம்
கன்னியாகுமரிமாவட்டம்
இத்திருக்கோயில்
திருவனந்தபுரம்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 4கி.மீ.
தொலைவில் அமைந்துள்ளது. பழையாற்றின் கரையில் ஓங்கியுர்ந்த 7 அடுக்குகோபுரத்துடன்
தாணுமாலையன் ஆலயம் காட்சி தருகின்றது. தாணு-சிவன், மால்-விஷ்ணு, அயன்-பிரம்மா.
இம்மூவரும் இருவரோடொருவர் பின்னிப் பிணைந்துள்ள இருவரே தாணுமாலையன் என்பது தெளிந்த
கருத்து.
“அத்திரி முனிவருக்கு,கற்பிற் சிறந்த மனைவியான அனுசுயாவுக்கு,
ஞனாரன்யத்தில் மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் தோற்றமளித்தனர்” என்று புராணம் கூறுகிறது.
மூலவரான லிங்கததின்
மேல்பாகம் - விஷ்ணு
நடுப்பாகம் - சிவன்
அடிப்பாகம் - ப்ரம்மா எனகருதப்படுகிறது.
இத்திருக்கோயில் திருவனந்தபுரம்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 4கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பழையாற்றின் கரையில் ஓங்கியுர்ந்த 7 அடுக்குகோபுரத்துடன் தாணுமாலையன் ஆலயம் காட்சி தருகின்றது. தாணு-சிவன், மால்-விஷ்ணு, அயன்-பிரம்மா. இம்மூவரும் இருவரோடொருவர் பின்னிப் பிணைந்துள்ள இருவரே தாணுமாலையன் என்பது தெளிந்த கருத்து.
அடுத்து குலசேகர மண்டபத்தில் உயிரோவியங்களோ என்று வியக்கத்தக்க வண்ணம் அமைந்துள்ள இரு சிற்பங்களின் கையில் உள்ள நகங்கள், சூரிய ஒளி படும் போது உயிருள்ள உடலின் நகக் கண்கள் போன்று தோற்றம் தரும். கால்புறம் முன் பாதத்தில் நரம்புகள் புடைத்து எழுந்துள்ள காட்சி உயிருள்ள மானிட உடலைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
தஞ்சைப் பெரியகோயில் நந்தியை நினைவுபடுத்தும் வண்ணம்
மிகப்பெரிய வெள்ளை நந்தி உள்ளது. நந்தியின் உயரம் 12 அடி,அகலம் 6 அடி,நீளம் 21 அடி
ஆகும்.
இத்திருக்கோயிலின் தல விருட்ஷமான கொன்னை மரத்தடியில்
மும்மூர்த்திகள் பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவரையும் லிங்க வடிவில் காணலாம்.அத்திரி
முனிவரின் மனைவி அனுசூயாதேவி மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கு இணங்கி,அவர்களைச்
சிறுபிள்ளைகளாக்கி அமுது ஊட்டியதாகவும்,பின்பு முப்பெரும் தேவியர்கள் விருப்பப்படி,தங்கள்
கணவன்களைத் திரும்பத் தந்ததாகவும் வரலாறு.எனவே மும்மூர்த்திகளும் ஒரு சேர வணங்குவதற்கு
இறைவன் வாய்ப்பளித்துள்ள இடம் சுசீந்திரம் கொன்னையடி சன்னதியாகும்.இப்பெருமை வேறு
எந்த திருக்கோயிலுக்கும் இல்லாத சிறப்பாகும்.
இத்திருக்கோயிலில் திருமால்,சிவன் இருவருக்கும்
கொடிமரங்கள் உண்டு.திருவிழாக்கள் நடைபெறும். அடுத்துள்ள செண்பகராமன்மண்டபத்தில்
இராமாயண,மகாபாரதக் காட்சிகள் மற்றும் பெண் விநாயகர் விக்னேஷ்வரியையும்
தரிசிக்கலாம். மேற்கு பக்கம் கருவறையில் லிங்க வடிவில் இருக்கும்
மும்மூர்த்திகளையும் தரிசிக்கலாம். (தாணு,மால்,அயன்,மூவரும் சேர்த்து தாணுமாலையன்)
திருக்கோயில் என்று பெயர் வந்தது.
குலசேகர மண்டபத்தில் உயிரோவியங்களோ என்று வியக்கத்தக்க வண்ணம் அமைந்துள்ள இரு சிற்பங்களின் கையில் உள்ள நகங்கள், சூரிய ஒளி படும் போது உயிருள்ள உடலின் நகக் கண்கள் போன்று தோற்றம் தரும். கால்புறம் முன் பாதத்தில் நரம்புகள் புடைத்து எழுந்துள்ள காட்சி உயிருள்ள மானிட உடலைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
ReplyDeleteஅருமையான சித்திரப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
அருமையான சித்திரப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteGood Post. Thanks for sharing, Madam.
vgk