Pages

Thursday, August 23, 2012

பனித்தலையர்






கயிலாயம்என்பது சிவசக்தி நடனத்தைக் குறிக்கிறது. ஒப்பற்ற திருத்தலாமாய்க் கருதப்படும் இங்கே கோயில் இல்லாததே திருக்கயிலையின் சிறப்பு !


இன்று சீனதின் வசத்தில் இருக்கும் திபெத்தில் பெயிலும் கடுங்குளிரும் தாக்கும் கொடும்பாலையில் கடும் பயணத்தின் முடிவில் இருக்கிறது கயிலாயம். 22,000 அடி உயரம். இதுவரை யாரும் ஏறியிராத புனித மலை. மஹாயோகி மிலாரேபா சிகரம் வரை காற்றில் மிதந்துசென்றதாக வரலாறு.










54 கி.மீ. சுற்றுப்பாதை; இரண்டு நாள் கடும் பயணம். அருகிலுள்ள பிரம்ம மானஸஸரோவர் ஏரியில் (15,000 அடி) தெற்குமுகம் தென்படுகிறது. இறுதி இடமானதார்ச்சென்’ (தர்ஷன்) சிகரத்தைக் காணும் இடம். அருகிலுள்ள அஷ்டபதாவில் ஏறினால் உட்பிரகாரம் தெரியும்.






முக்தி கோரி திருக்கயிலையைத் தரிசிப்போர்க்க்கு மோட்சம் நிச்சயம்.


















இருபுறமும் இதுபோன்ற பனிமலைச் சிகரம் இல்லை! யாரோ செய்து இங்கே வைத்தது போல் விளங்கும் கயிலைமலை சிவபெருமானின் உறைவிடம். வெட்டவெளியில் விளங்கும் ஒரு முக்திப் புள்ளியின் பூமிப் பிரதிநிதி. சிவனிடம்  விழைவோரின் ஆன்மாவை உள்வாங்கி அந்த மர்மப் புள்ளியில் கரைக்கிறது இந்த அதிசய மாமலை








எல்லோர்க்கும் தந்தை இறைவன் ! அவன் நல்லோர்க்கும் தீயோர்க்கும் தலைவன்!









4 comments:

  1. முக்தி கோரி திருக்கயிலையைத் தரிசிப்போர்க்க்கு மோட்சம் நிச்சயம்.

    ஆன்மாவை நெகிழவைக்கும் அற்புதப் படங்களும் ,, பகிர்வுகளும்..

    மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  2. //முக்தி கோரி திருக்கயிலையைத் தரிசிப்போர்க்க்கு மோட்சம் நிச்சயம்.//

    அனைத்தும் அருமை. படங்களில் தனிச்சிறப்பு.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. கண்ணைக் கவரும் படங்கள்...

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. இருபுறமும் இதுபோன்ற பனிமலைச் சிகரம் இல்லை! யாரோ செய்து இங்கே வைத்தது போல் விளங்கும் கயிலைமலை சிவபெருமானின் உறைவிடம். வெட்டவெளியில் விளங்கும் ஒரு முக்திப் புள்ளியின் பூமிப் பிரதிநிதி. சிவனிடம் விழைவோரின் ஆன்மாவை உள்வாங்கி அந்த மர்மப் புள்ளியில் கரைக்கிறது இந்த அதிசய மாமலை//

    போனவருடம் சென்று தரிசித்த நினைவுகள் எல்லாம் வந்து நீங்கள் சொன்ன உணர்வை அனுபவித்த அந்த அற்புத கணத்தை நினைத்து மனம் நெகிழ்கிறது.
    அற்புத பதிவு.

    ReplyDelete