Pages

Sunday, August 19, 2012

(திரை கடல் ஓடியும் கோவில் கட்டு)



கம்போடியாவில் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்








வணிகரீதியாகவும்,படையெடுப்பு காரணமாகவும் தமிழ் மன்னர்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னரே தென் கிழக்கு ஆசிய நாடுகளை வென்று அங்கு தமிழ்ச் கலாசாரத்தை நிலை நாட்டியதோடு,ஏராளமான கோவில்களையும் கட்டினர்.





இந்தோனேசியாவிலுள்ள போரபுத்தூர் கோவில்,கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட்,பேயான்,தா-புரோம்,பண்டேசிராய் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் சிறப்புவாய்ந்தவை.
    இவற்றில் அங்கோவார்ட்,தா-புரோம்,ஆகிய இரண்டு கோவில்களும் ‘யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பர்ய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.




இந்நாட்டின் மீது கி.பி. 4-ம் நூற்றாண்டில், 2-ம் ஸ்கந்தவர்மன் என்ற மன்னர் படை எடுத்ததாக செப்பேடு தெரிவிக்கிறது. இந்த அரசபரம்படையில் வந்த 2வது சூரியவர்மன் என்ற அரசர் தான் அங்கோர்வாட் கோவிலை கட்டியுள்ளார்.
அங்கோர் என்றால் கோவில் என்று பொருள். தென் இந்திய மற்றும் கம்போடிய கட்டிடகலைகள் இணந்து இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோவில் சமநிலப்பரப்பில் 3.6. சதுர கி.மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவுல் ஆகும்.
சுற்று வழியில் சதுரவடிவில் பெரிய அகழி வெட்டப்பட்டு அதில் நீர் தேக்கப்பட்டுள்ளது.






தமிழகக் கோவில்களில் உள்ளது போல் ஏராளமான சிறபங்கள் இங்கு உள்ளன
 வெளிபிரகாரசுவரில் ராமாயண,மகாபாரத நிகழ்வுகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராமாயணக் காட்சிகள்,வானரப்படைகள் செய்யும் அதிசியங்கள், அசுரனோடு கண்ணபிரான் போர் புரியும்,காட்சி,பாற்கடலில் அமுதம் எடுக்கும் காட்சி போன்றாவை சிற்பங்களில் சிலவாகும்.




கோவில் மட்டும் 200 ஹெக்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் 3 அடுக்குகள் கொண்டது. அதற்கு 5 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரங்கள் மேரு மலையைக்க்குறிப்பது போல் அமைந்திருக்கிறது (மேரு பீடம்)




மத்திய கோபுரத்தை சுற்றி ஏழு வளையங்கள் உள்ளன. இது மேருமலையில் உள்ள 7 சிகரங்களை குறிக்கும். இந்தக் கோவில் விஷ்ணுவுக்காகவும் சிவனுக்காகவும் கட்டப்பட்டுள்ளது.





காலப் போக்கில் இந்த கோவிலும் கவனிக்கப் படாமல் காடுகள் சூழ்ந்து வனப்பகுதியாக் மாறியது.




19ம் நூற்றாண்டில் தான் ஒரு தாவரவியல் நிபுணர்களால் இந்தக் கோவில் உலகின் கண்ணுக்குத் தெரிந்தது. கோவிலை அடர்ந்த மரங்கள் சூழ்ந்த காரணதினால் அதன் வேர்கள் அக்டோபஸ் கரங்களைப் போன்று கோவிலை ஆக்கிரமித்து விழுங்கி நின்றது.







யுனெஸ்கோ அமைப்பு இந்த கோவிலை சீர்திருத்தி நல்லமுறையில் பராமரித்து வருகிறது.














                                                                                                              பத்மாசூரி

6 comments:

  1. கம்போடியாவில் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் பகிர்வுக்கு நன்றி.

    யுனெஸ்கோ அமைப்பு இந்த கோவிலை சீர்திருத்தி நல்லமுறையில் பராமரித்து வருகிறது.//


    இப்போது கோவில் நல்ல முறையில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. அங்கோர்வாட் பற்றி
    அருமையான
    அற்புதமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  4. அழகிய படங்க்ளுடன் அற்புதமான தகவல்கள். நன்றி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    தாங்கள் என் தளத்திற்கு வந்து கருத்திட்டமையால் தான் உங்கள் தளமே தெரிந்தது... Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்... மிக்க நன்றி...

    ReplyDelete
  6. தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    தாங்கள் என் தளத்திற்கு வந்து கருத்திட்டமையால் தான் உங்கள் தளமே தெரிந்தது... Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்... மிக்க நன்றி...
    [im]http://assets2.desktopnexus.com/thumbnails/1142637-thumbnail.jpg[/im]
    முதல் வ்ருகைக்கு மிக்க நன்றி. பிடியுங்க ஒரு பூங்ககொத்து

    ReplyDelete