பாலா திரிபுர சுந்தரி’ [நெமிலி ]
பாலம்பிகை :-
உலகாளும் நாயகியான லலிதாம்பிகையின் செல்வத்திருமகளே ஸ்ரீபாலா. லலிதோபாக்யானம் என்னும் நூலில் இவளை பற்றிய குறிப்புகள் உள்ளன. இவளுக்குரிய கோயில் அரக்கோணம் அருகே நெமிலியில் உள்ளது.
புராணத்தில் பாலா:- லலிதாம்பிகையிடம் இருந்து அவதரித்தவள் பாலா. தாயைப் போல் சிவந்தவளான இவள் பிறக்கும் போதே ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றினாள். இவளுக்குரிய மந்திரம் ஸ்ரீவித்யா. முருகப்பெருமான் தாயின் சம்பந்தமில்லாமல் பிறந்தது போல, தந்தையின் சம்பந்தம் இல்லாமல் தாயிடம் இருந்து பிறந்தவள் பாலா, ‘ஸதா நவவர்ஷா’ என்ற பெயரும் இவளுக்கு உண்டு. ‘எப்போதும் புதுமையானவள்’ என்றும், ‘யாரும் எதிர்பாராத விதமாக அருளைப் பொழிபவள்’ என்றும் இதற்குப் பொருள். இவள் ஜபமாலையும், புத்தகமும் வைத்திருக்கிறாள்.
ஆற்றில் வந்தவள்:- நெமிலியில் வசித்த வேதவித்தகர் சுப்பிரமண்ய அய்யர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கனவில் பாலா தோன்றினாள். “அன்னை ராஜராஜேஸ்வரியின் கட்டளையை ஏற்று ஆற்றில் வருகிறேன். என்னை அழைத்து உன் வீட்டில் அமர்த்திக் கொள்”, என்றாள். அய்யர் ஆற்றுக்குச் சென்று இடுப்பளவு நீரில் இறங்கி சிலையைத் தேடினார். பயனில்லை. கவலையோடு வீட்டுக்கு வந்தார். மறுநாளும் தேடினார். ஏமாற்றம் தான். பித்துப்பிடித்தவர் போல ஆனார். மூன்றாம் காலையில் எழும்போது நீலவானமும், அதில் பறக்கும் பறவைக் கூட்டமும் நல்ல சகுனமாகத் தெரிந்தது. நம்பிக்கையுடன் ஆற்றுக்குச் சென்றார். நீரில் மூழ்கிப் பார்த்தார். அதுவரை அவருடன் கண்ணாமூச்சி ஆடிய பாலா, அவரது கைக்குள் தானாகவே வந்து கிடைத்தாள். அந்தச் சிலை சுண்டுவிரல் அளவே இருந்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
வீடே கோயிலனது:- தன் வீட்டிலேயே பாலாவை பிரதிஷ்டை செய்தார். அய்யரின் வீடே கோயிலாக மாறியது. இந்த வீட்டை ‘பாலா பீடம்’ என்று அழைக்கின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன் கருவூர்சித்தரின் பாடல்களில் பாலாவைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. கருவூர் சித்தர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் பாலாவின் சந்நிதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். காஞ்சிப்பெரியவர் இங்கு வந்து ஒரு வாரம் தங்கி வழிபாடு செய்திருக்கிறார்.
நாளும் கோளும் ஏது ?
பாலா உன் புஜை செய்ய
நாளும் கோளும் ஏது- அன்னை
பாலா உன் பாடல் பாட
நேரம் காலம் ஏது?
பாலாவின் அபிஷேகம் நடக்கின்றது- அதை
பார்த்தாலே ஆனந்தம் கிடைக்கின்றது!
நினைக்கின்ற காரியங்கள் நடக்கின்றது – உன்னை
நினைத்தாலே பேரின்பம் கிடைக்கின்றது !
அன்னை எங்கள் பாலா உன்
சின்ன சின்ன இடையினிலே
என்ன என்ன அலங்காரம்…
வண்ண வண்ண உடையணிந்து
கண்ணைப் பறிக்கும் விதமாக
விண்ணை முட்டும் விஸ்வரூபம்
லலிதா சஹஸ்ரநாமத்தில்
“பண்ட புத்ரவதோயுக்த
பாலா விக்கிரம நந்திதா” என்று வரும்.
அம்பாளுடைய ஒன்பது வயது மகளுக்குத்தான் “பாலா” என்ற திருநாமம் அதாவது ‘பாலா திரிபுர சுந்தரி’ என்று அழைப்பர்.
பண்டாசுரன் என்ற அரக்கன் அம்பிகையுடனான போரின் போது, தனது முப்பது புத்திரர்களை போருக்கு முதலில் அனுப்ப, சிறுமி பாலா திருபுர சுந்தரி “அம்மா நான் செல்கிறேன்-போருக்கு” என்று கூறி அனைவரையும் வதம் செய்கிறாள்.
சாக்லெட் ப்ரசாதம்:- குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால், அவர்களுக்கு விருப்பமான சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சரஸ்வதியின் அம்சமாக திகழ்வதால் மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இங்கு வழிபடுவதன் மூலம் கிரகிப்புத்திறன், ஞாபகசக்தி பெற்று கல்வியில் சிறந்து விளங்குவர்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
இங்கே அனைவரும் வந்து விட்டோம்!-
எல்லாம் பாலா என்றே சொல்லி - நம்
வாழ்வை அவளிடம் தந்து விட்டோம்
ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பான பூஜைகள்
குழந்தைகள் நலன் கருதி குடும்பத்தோடு வாருங்கள்
எப்போதும் புதுமையானவள்’ என்றும், ‘யாரும் எதிர்பாராத விதமாக அருளைப் பொழிபவள்’
ReplyDeleteசிறப்பான பூஜைகள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
சிறு குழந்தை வடிவத்தில் காட்டியுள்ள பாலா அம்பாள் படங்கள் மிகவும் அழகாக உள்ளன. மீண்டும் பிறகு வந்து கருத்தளிப்பேன்.
ReplyDeleteஅன்புடன்
vgk
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
ReplyDeleteஇங்கே அனைவரும் வந்து விட்டோம்!-
எல்லாம் பாலா என்றே சொல்லி - நம்
வாழ்வை அவளிடம் தந்து விட்டோம்//
மனதை கொள்ளை கொண்டு விட்டாள் பாலா.
படங்கள் எல்லாம் அழகு.
பாலா திருபுரசுந்தரியைபற்றிய விரிவான பதிவு அற்புதம்.
ஆனந்த வாழ்வளிப்பாள் அம்மா.
நன்றி பகிர்வுக்கு.
அனைத்துப்படங்களும் விளக்கங்களும் மிக அருமையாய் உள்ளன.
ReplyDeleteபாராட்டுக்கள்.