Pages

Friday, August 24, 2012

உலகம் ஒரு அடியில்!













மகாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்திற்கு குள்ளமான உருவத்துடன் திருமால் பிரம்மச்சாரி வடிவில் வந்தார்



 சக்ரவர்த்தியிடம் மூவடி மண் கேட்டு யாசித்தார். மன்னனும் அவ்வாறே நீர்வார்த்து அனுமதிக்க, முதல் அடியால் விண்ணையும் இரண்டாம் அடியால் மண்ணையும் அளந்து, “மூன்றாம் அடிக்கு இடம் எங்கே?” என்று கேட்க, மகாபலிச் சக்ரவர்த்தி தன் தலையை திருமாலுக்கு அர்ப்பணித்தார். அவன் தலை மீது தன் திருவடியை வைத்து அவனை பூமிக்குள் அமிழ்த்தினார்,திருமால். 










ஓணம் பண்டிகை தினமான இந்நாள்மகாபலிச் சக்ரவர்த்தி பூமிக்கு வரும் நாளாக கொண்டாடப்படுகின்றது. 








. இன்று கேரள மக்கள் வகை வகையான பூக்களால் கோலங்கள் வரைந்து ஓணம் சத்யா எனும் பெயரில் விருந்துண்பர்





ஓணம் விருந்து

விருந்தில் சுவைக்கு இணையாக சத்தும் இருக்கும். மேல் தோல் நீக்கப்படாத சம்பா அரிசியில்தாம் சாதம் வடிப்பார்கள். சாதம் வேகும் போது ஊரே மணக்கும்.

இனிப்பு, காரம், புளிப்புன்னு அத்தனை சுவையும் நிறைந்தது ஓணம் விருந்து. அயிட்டங்களை இலையில் வைத்தால் வண்ணங்களால் கோலம் போட்டது போல் இருக்கும். 20க்கும் பேல் பதார்த்தங்கள் அதுவும் தும்பு இலையில் தான் பரிமாறுவார்கள். இலையில் பரிமாறுவதிலும் தனி இலக்கணமே இருக்கும்.

கேரளத்தில் 30 வகை பாயசம் உண்டு. நேந்திரம் பாயாசம், சக்கைப் பாயசம், அடைப் பாயசம், பால் பாயசம், சிறுபருப்பு பாயசம், கடலைப்பருப்பு பாயசம், சேனைப் பாயசம், தடியங்காய் பாயசம், சேமியா பாயசம்இலையில், அவியல், துவரன் (முட்டைக்போஸ் கேரட்போட்டு தேங்காய் பால் சேர்த்து செய்வது), ஓலன் - (பூசணி, பரங்கி சேம்பு, வழுதலலங்காய், தட்டாம் பயிறு போட்டு  தேங்காய் பால் ஊற்றி செய்வது), பப்படம், ரசகதலி பழம். மேலும் உண்ணி அப்பம், முந்திரிக்கொத்து, கருப்பட்டி அதிரசம், கொழுக்கட்டை, பழம்பொறி, உப்பேரி, அடைப்பிரதன், சக்கைவற்றல் நிச்சயம் உண்டு.
          இதற்கு ஓணம் சத்ய சாப்பாடு என்று பெயர் .



























12 comments:

  1. சூப்பர் படங்கள்.

    இப்பதான் நாளை நடக்கப்போகும் ஓணம் சத்யை & பரிபாடிக்குச் சமையல் உதவி செஞ்சுட்டுத் திரும்பினேன்.

    திருவோணம் வியாழன் என்றாலும் எங்களுக்கு வீக் எண்ட் தான் எல்லாக்கொண்டாட்டங்களுக்கும்.

    எல்லாவர்க்கும் ஓண ஆஸம்சகள். ஈஸ்வர அனுக்ரஹம் கொண்டு ஈ கொல்லம் நன்னாயிவரட்டே!

    ReplyDelete
    Replies
    1. துளசி கோபால்August 24, 2012 4:02 AM
      சூப்பர் படங்கள்.



      [im]http://www.koolrpix.com/images/TF05383/240/wb052406.gif[/im]

      வாங்க! வாங்க! வாழ்த்துக்கள்!

      Delete
  2. பூக்கோலங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    மூன்றாவது படத்தில் காட்டியுள்ள கோலம் என்னை மிகவும் கவர்ந்தது. ;))))

    ReplyDelete
  3. /சக்ரவர்த்தியிடம் மூவடி மண் கேட்டு யாசித்தார்./

    இந்த வரிகளுக்கு மேல் காட்டப்பட்டுள்ள உலகளந்த பெருமாள் சிலை நல்ல கலையழகுடன் உள்ளது.
    சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQLJhds2nNO7OwTVByB37vUvUcjJDWafd1jo47cY_dKv9L0l-qP-XTkkTk[/im]

      இதுவும் அழகு தான்! நீங்க பார்த்து ரசிக்க,

      Delete
  4. கீழிருந்து மூன்றாவது படத்தில் தங்கள் வாழ்த்துகளும், தலைவாழை இலை போட்டு பரிமாறியுள்ள உணவுகளும் சும்மா ஜொலிக்குது.

    வரவர உங்கள் பதிவுகளும் அவங்க பதிவுகள் போலவே ஜொலிக்க ஆரம்பித்து விட்டன. யாருடைய பதிவைப் பார்க்கிறோம் என்று எனக்கு சந்தேகமே வர ஆரம்பித்து விட்டது. ;)

    ReplyDelete
    Replies
    1. வரவர உங்கள் பதிவுகளும் அவங்க பதிவுகள் போலவே ஜொலிக்க ஆரம்பித்து விட்டன. யாருடைய பதிவைப் பார்க்கிறோம் என்று எனக்கு சந்தேகமே வர ஆரம்பித்து விட்டது. ;)

      [im]http://www.desicomments.com/dc1/13/164918/1649181.jpg[/im]

      Delete
  5. உலகம் ஒரு அடியில் .... தலைப்பு அருமை

    H A P P Y O N A M ! உங்களுக்கும் வாழ்த்துகள்.

    கடைசி WELCOME க்கு முந்திய படம்
    ”கேரள நாட்டு இளம் பெண்களுடனே”
    என்ற பாடல் வரிகளை நினைவூட்டுகின்றன.

    அருமையான படங்களுடன் கூடிய
    அற்புதமானப் பதிவு. பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  6. படங்கள் எல்லாமுமே அருமை...

    30 வகை பாயசமா....?

    இப்படி இலையைப் போட்டு பசிக்க வைச்சிட்டீங்களே... ஹா.. ஹா..

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTaPXJnc9jbIKAKoB0cT_vHpw26XnLPsUsIEpYNI61Bsu6MBHpdTa99WuA5[/im]

      வாங்க! வாங்க!

      Delete
  7. இனிய ஓணம் திருநாள் வாழ்த்துகள் !

    ReplyDelete
  8. ஓணம் பண்டிகை சிறப்பு கட்டுரை அருமை.

    ReplyDelete