Pages

Thursday, August 9, 2012

ஆடிக்கிருத்திகை.









இன்று ஆடிக்கிருத்திகை. பொதுவாக நாம் கோவிலுக்குச்சென்றால் அங்குள்ள தெய்வ சன்னதியில் கண்ணைமூடிக் கொண்டு நம் வேண்டுதல்களை ஒப்பிவித்து பிரசாதங்களை [திருனீறு,குங்குமம்] பெற்றுக்கொண்டு வந்துவிடுவோம்.









மாறாக பல கோவில்களில் காண்பற்கரிய பல சிற்ப அதிசியங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தஞ்சை-நாகை செல்லும் வழியில் உள்ளது "எண்கண்" எனும் முருகன் கோவில்.



இங்குள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் மயிலின் மேல் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
முருகன் மயிலின் மேல் இடதுகாலினை மடித்து, வலது காலினை தொங்கவிட்ட நிலையில் இரு புறமும் வள்ளி தெய்வானைதேவியருடன் மயிலின் மீது அமர்ந்த நிலையில் உள்ளார்.
சிலையினை உற்று நோக்கினால் கந்தனின் காலும், தேவியர்களின் கால்களும் எவ்வித ஆதாரமும் இன்றி தொங்கிய வண்ணம்இருக்கும்.




சிலையின் மொத்த எடையும் மயிலின் மெல்லிய கால்களின் பலத்தால் மட்டும் தாங்குமாறு சிலை வடிக்கப்பட்டுள்ளது
இதுபோன்ற அமைப்பு "பொரவாச்சேரி" எனும் சிற்றூரிலும் காண்ப்படுகிறது,

இது போல பல கலை மற்றும் அறிவியல் நுணுக்கங்கள் உள்ள சிலைகள் பல கோவில்களில் காணக்கிடைக்கின்றன.

இது போன்ற அதிசியங்களை பாதுகாத்து வருங்கால சந்ததிகளுக்கு அளிப்பது நமது கடமையாகும்




2 comments:

  1. பல கலை மற்றும் அறிவியல் நுணுக்கங்கள் உள்ள சிலைகள் பல கோவில்களில் காணக்கிடைக்கின்றன.
    அருமையான சிறப்பான சிந்தனைக்குரிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. VERY GOOD POST WITH BEAUTIFUL PICTURES.
    THANKS FOR SHARING, MADAM. vgk

    ReplyDelete