<a href=”http://www.youtube.com/watch?v=dS5MuZR-EH0&feature=player_embedded”>ARULAVENDUM
by Sow.Sowmya</>
---------------------------
நம் இல்லத்தில் பிறந்த குழந்தைக்கு பிறந்த நாள்
கொண்டாடுநம் இல்லத்தில் பிறந்த குழந்தைக்கு பிறந்த நாள்
கொண்டாடுவது போல,மகிழ்வுடன்ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமாக கிருஷ்ணஜெயந்தி, அஷ்டமி
அன்று கொண்டாருகிறோம்.
பொதுவாக அஷ்டமி,நவமி ஆகாது என்று நாம் எந்த நாளையும்
ஒதுக்கக்கூடாதுஎன்றஎண்ணத்தில்தான்,ராமரும்[ஸ்ரீராமநவமி],
கிருஷ்ணரும் [கோகுலாஷ்டமி] இந்த தினங்களில் அவதரித்ததாக
நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்வது போல,மகிழ்வுடன்ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமாக கிருஷ்ணஜெயந்தி, அஷ்டமி
அன்று கொண்டாரடுகிறோம்.
பொதுவாக அஷ்டமி,நவமி ஆகாது என்று நாம் எந்த நாளையும்
ஒதுக்கக்கூடாதுஎன்றஎண்ணத்தில்தான்,ராமரும்[ஸ்ரீராமநவமி],
கிருஷ்ணரும் [கோகுலஷ்டமி] இந்த தினங்களில் அவதரித்ததான்னோர்கள் வர
குறும்பு
தவழும் கண்ணனைப் பார்த்தாலே பரவசம் தொற்றிக் கொள்ளும் நமக்கு.குடும்பத்தில்,இல்வாழ்க்கையில்
மகிழ்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்தில் தான், கிருஷ்ணஜெயந்தி, கொண்டாடப்படுகிறது.
நம் வயது,வேலைப்பளு,மனத்துயரம் எல்லாம்
மறந்து நாமே குழந்தைகளாக மாறும் நிகழ்ச்சி தான் இந்தப் பண்டிகை.
கிருஷ்ணஜெயந்தி, அன்று வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கிருஷ்ணனபோல் அலங்கரித்து மகிழ்வார்கள்.
ஒவ்வொரு இல்லத்திலும் கிருஷ்ணர் நம்
வீட்டிற்கு வருவதான பாவனையில் குட்டிப்பாதங்களை வாசலில் இருந்து பூஜை அறை வரை
வரைந்து மகிழ்வார்கள்.குழந்தைகளுடன் நாம் நம்மை மறந்து விளையாடும் போது ஏற்படும்
பரவச உணர்வு, இந்த நாளில் ஏற்படும்.
நட்பின் பெருமையை சாற்றும் நிகழ்வு தான் கண்ணன்
குசேலர் கதை.பால்யத்தில் பழகிய நண்பன்
எவ்வளவு ஏழையாக இருப்புனும்,தான் அரசபோகத்தில் இருந்தாலும் அதேபாசத்துடன்
குசேலரை அணைத்து மகிழ்ந்து,வறுமையைப் போக்கிய நிகழ்வு நட்பின் பெருமையை நமக்கு
உணர்த்துகிறது
குழந்தையும்
தெய்வமும் கொண்டாடும் மாதம் ஆடிமாதம். இம்மாதத்தில் கோகுலாஷ்டமியும்,
ஆடிக்கிருத்திகையும் அடுத்தடுத்து வருகிறது. கண்ணனுக்கும்,கந்தனுக்கும் உகந்த
நாட்கள் இவை.இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஆடும் மயிலில் கந்தன் உடன்
இருப்பான். கண்ணன் அந்த மயில் இறகினை தலையில் சூடி உள்ளான்.
கிருஷ்ணன் பிறந்தது ஒரு இடத்தில், வளர்ந்தது
பிறதொரு இடத்தில். கந்தனும் பார்வதி பெற்று, கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தான்.
தீயவர்களை அழிக்க கண்ணன் போர்களம் கண்டான். முருகனும் தேவர்குலம் காக்க
அசுரர்களுடன் போர்புரிந்தான். முருகனுக்கு தேவியர் வள்ளி-தேவயானை. கண்ணனுக்கு
தேவியர் பாமா-ருக்மணி.
மேலும், காளிங்கன் எனும் ஐந்து தலை
பாம்பின் மீது நர்த்தனம் செய்யும் விடலைப்பருவத்து வடிவமும் மிகவும் ப்ரபலமானது.
இடது திருப்பாதத்தினை பாம்பின் தலை மீது ஊன்றி, வலது பாதத்தினை மடித்து உயர்த்தி
நடனமாடும் வடிவம்; வலது கரம் அபயம் காட்ட, இடது கரம் பாம்பின் வாலைப்பிடித்து
முறுக்கிய வண்ணம் அமைந்துள்ளது.
இந்த அழகிய வடிவின் சிறப்பு என்னவென்றால்,
பாம்பின் தலைமீது ஊன்றி இருப்பதாகத்தோன்றும் பாதத்திற்கும், பாம்பின் தலைக்கும்
இடையில் சிறு இடைவளி உள்ளது. ஆகவே கண்ணனின் முழு உருவத்தின் பாரம் முழுவதும்
பாம்பின் வாலைப்பிடித்திருக்கும் இடது கையின் வழியாக பாம்பின் வாலில் இறங்கி
விக்கிரத்தின் பீடத்திற்கு வருகிறது. விக்ரம் முழுவ்ழ்தும் வாலைப்பிடித்த கையின்
ஆதாரத்தில் இருக்கிறது. விக்ரத்தின் மையப்புள்ளி கச்சிதமாக பீடத்தில் விழுவதால்
தான் இது சாத்தியமாகிறது.
இந்த அழகிய சிலை “காளிங்க நர்த்தனம் “
எனும் பெயரில் ஊத்துக்காடு [கும்பகோணம்] எனும் ஊரில் அமைந்துள்ளது.
ஆலிலை மேல் பள்ளி கொண்டு வலது கால் பெரு விரலை வாயில் இட்டு சுவக்கும் கண்ணணின் வடிவத்தினை கும்பகோணத்தைச்சுற்றிலும் உள்ள கோவில்களில் காணலாம்
வாருங்கள் பாலகன் கிருஷ்ணன் பிறந்த தினத்தினைக்கொண்டாடுவோம்-- பத்மா
கண்ணனைப்போன்றே கண்ணனைப்பற்றிய கண்போன்ற அழகான பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஆடும் மயிலில் கந்தன் உடன் இருப்பான். கண்ணன் அந்த மயில் இறகினை தலையில் சூடி உள்ளான்.
Deleteகந்தனும் கண்ணனும் பற்றிய நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ஆலிலை மேல் பள்ளி கொண்டு வலது கால் பெரு விரலை வாயில் இட்டு சுவக்கும் கண்ணணின் வடிவத்தினை கும்பகோணத்தைச்சுற்றிலும் உள்ள கோவில்களில் காணலாம்
Deleteமடியில் ஏந்தி பிரார்த்திக்கவும் தந்து
மகிழச் செய்கிறார்கள் மன்னார்குடியில்..
கண்ணன் பிறந்த தினத்தை கொண்டாட வந்தமைக்கு மிக்க நன்றி.
Delete[im]http://3.bp.blogspot.com/-w2fdDAHSNWY/Tm-bzn8vzTI/AAAAAAAABw0/JRUT4wiE36k/s640/Lord-Krishna-Wallpapers-2.jpg[/im]
கண்ணன் பிறந்த தினம் படங்கள், முருகன், கண்னன் ஒப்பீடு எல்லாம் அருமை.
ReplyDeleteஎங்கள் வீட்டிலும் எங்கள் பேரனுக்கு கண்ணன் பிறந்ததினம் என் மருமகள் கண்ணன் அலங்காரம் செய்வாள்.
பகிர்வுக்கு நன்றி.